கலக்கும் பெதஸ்தா குளம் | வேத வரலாற்று ஆய்வில் கிமு / கிபி

Описание к видео கலக்கும் பெதஸ்தா குளம் | வேத வரலாற்று ஆய்வில் கிமு / கிபி

கலக்கும் பெதஸ்தா குளம்.

இங்கு ஒரு கேள்வி !
38 ஆண்டுகளாக வியாதியினால் முடங்கிப்போன ஒரு மனிதன் எப்படி பாவத்தின் வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருந்தான், அப்படி என்ன பாவம் செய்தான்?

(இவன் குணமடைய குளத்திற்கு முன்செல்லகூட முடியாத ஒரு மனிதன் ???)

மாற்கு 5:21-30 வாசியுங்கள். நாம் முற்றிலும் முடங்கிப்போனாலும் பாவம் செய்யமுடியும். (நாம் எப்போதும் நம் இதயத்திலும் மனதிலும் பாவம் செய்கிறோம்)

பக்கவாதம் வந்தாலும் அவன் விபசாரம் செய்துள்ளான் என்றும் அன்பில்லாத கோபக்காரன் என்றும் மாயமந்திரங்களுக்கு விசுவாசி என்றும் அவன் வார்த்தைகளிலே அறிந்திருந்தார் இயேசு !

இவன் செய்த பாவமென்ன?

1. ஒன்று #விபசாரம்.
பழைய ஏற்பாட்டில் விபசாரம் செய்யாதிருப்பாயாக என்கிற கட்டளையை நன்கு அறிந்திருந்தான். ஆனாலும், குளத்தருகில் விபசாரத்தில் தன் இருதயத்தை விற்றுப்போட்டான். ஏனெனில் பெதஸ்தா அருகில் உள்ள பேகன் கோவில் சடங்குக்காரர்கள் இவர்களை சுற்றி சில காரியங்கள் செய்து வந்தார்கள்.
இயேசு அவனுக்கு மட்டும் உணர்த்தும் வண்ணம் தேவாலயத்தில் அவனை கண்டு இப்படி சொன்னார்.. "நீ எழுந்துபோய் விபச்சாரியை அறிந்தால்தான் அது விபசாரம் என்று நினைக்கிறாய், அப்படியல்ல, "ஒரு பெண்ணை காமமாகப் பார்க்கிறவன் அவளுடன் அப்பொழுதே அவனுடைய இதயத்தில் விபச்சாரம் செய்துவிட்டான்"என்றார். "அதற்குப்பின்பு இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ,நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்" (யோவான் 5:14).

2.இரண்டு #அன்பில்லாத_கோபக்காரன்.
இந்த சமுதாயத்தில் நமக்கு அறியாதவரிடத்தில், ஒரு அன்பில்லாத பேச்சுபேசுவோர் எத்தனை பேர் இருக்கிறோம்? அறியாதவரிடத்தில் அன்பாக பேசுவோரை இன்று காண்பது அரிது ! (யோவான் 5:6,7,13 வாசித்து பாருங்கள்) வியாதிகாரனோ இயேசுவை அறியாதவன். அறியாதவரிடத்தில் அவனுடைய அன்பில்லாத பதில் பேச்சுக்களை, அவன் பேசிய பொய்களையும் மேற்கண்ட வசனங்களை தியானித்தால் மட்டுமே புரியும். "தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1 யோவான் 4:20) இதையும் தியானிக்கவும். அன்பானது அவன் வார்த்தைகளிலே இல்லை என்று அறிந்துகொண்டார் இயேசு !
மேலும் தகவல்களுக்கு.
http://historyofchristologyadbc.com/
#கலக்கும் பெதஸ்தா குளம் #வேத வரலாற்றுஆய்வில்கிமுகிபி

Комментарии

Информация по комментариям в разработке