தன்னறம் இலக்கிய விருது | எழுத்தாளர் தேவிபாரதி அவர்களின் வாழ்வனுபவ உரையாடல்

Описание к видео தன்னறம் இலக்கிய விருது | எழுத்தாளர் தேவிபாரதி அவர்களின் வாழ்வனுபவ உரையாடல்

தன்னறம் இலக்கிய விருது முன்னெடுப்பின் 2021ம் ஆண்டிற்கான விருதினை எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு வழங்குவதில் நிறைகூர்ந்த மகிழ்வுகொள்கிறோம். கடந்த முப்பது ஆண்டுகளாக, தமிழ்ச்சூழலில் விளிம்புநிலை மனிதர்களின் கதைகளை உலராத உயிரீரத்தோடு பதிவுசெய்துவரும் படைப்புத்தொடர்ச்சிக்காக இவ்விருதை நாங்கள் அவருக்குப் பணிந்து அளிக்கிறோம். நொய்யல் ஆற்றின் நீர்ப்பெருக்கு போல, எளிய மனிதர்களின் வாழ்வுக்கதையை இரத்தமும் சதையுமாகத் தன்னுடைய படைப்பின்வழியாக பாவனையின்றி வெளிப்படுத்தும் தேவிபாரதி அவர்களின் அகம் கொண்டிருக்கும் தாகம் எக்காலத்தும் வற்றாதது. காலங்கள் கடந்தும் இவருடைய படைப்புகள் நிச்சயம் அதிர்வுகளை உருவாக்கும்.



எழுத்தாளர் தேவிபாரதி அவர்கள் தன்னுடைய வாழ்வுப்பாதை குறித்து நினைவு மீள்கிற அனுபவ உரையாடலே இக்காணொளிப் பதிவு. பாரதி கோபால், வினோத் பாலுச்சாமி, அய்யலு குமரன், அங்கமுத்து, கோகுல், விமல் ஆகிய தோழமைகளின் கூட்டுழைப்பில் இது சாத்தியமடைகிறது.


நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி
9843870059 / www.thannaram.in

Комментарии

Информация по комментариям в разработке