புலப்பட (எப் எம் பி) விவரங்கள்
DETAILS OF FMB
புலப்படம் எனப்படும் எப் எம் பியானது (FMB – field measurement book) புல எண்(survey number) மற்றும் புல உட்பிரிவு எண்(subdivision number) பரப்பின் தோற்றம் எவ்வாறு உள்ளது என்பதையும் அதன் அளவுகளையும் காண்பிக்கும் முக்கிய ஆவணமாக உள்ளது.
கணினி புலப்படத்தில்(computer fmb) குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
புலப்படத்தின் வலது பக்க மேற்புறத்தில் வருவாய் மாவட்டம், வருவாய் வட்டம், வருவாய் கிராமம் வருவாய் கிராம எண் போன்ற விவரங்கள் இருக்கும்.
புலப்படத்தின் இடது பக்க மேற்புறத்தில் சர்வே நம்பர் சப்டிவிசன் நம்பர்(survey number and subdivision number) போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
மேலும் அதன் பரப்பு விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பரப்பின் அளவானது ஹெக்டேர் மற்றும் ஏர்சில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதன் கீழாக புலப்படமானது எந்த அளவில் வரையப்பட்டது என்ற விவரம் தரப்பட்டிருக்கும்.
புலப்படத்தின் வாயிலாக புலத்தை சுற்றியிருக்கும் மற்ற புல எண்கள்
மற்றும் புல உட்பிரிவு எண்களை தெரிந்து கொள்ள இயலும்.
புலப்படத்தில் சுற்றளவுகள் யாவும் மீட்டர் அளவால் குறிக்கப்பட்டிருக்கும்.
மேலும் புலத்தில் காணப்படுகின்ற மற்றும் புலத்தின் வழியாக செல்லுகின்ற முக்கியமானவைகளை காட்டும் குறியீடுகளும் புலப்படத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டாக சிலவற்றைக் காண்போம்
சதுர வடிவ கிணறு உள்ளது, வட்ட வடிவ கிணறு, கூரை வீடு, கூரை அல்லாத பிற வீடுகள் அதாவது ஓட்டு வீடு அல்லது மாடி வீடு போன்றவை, நீர்நிலை, நீர் செல்லும் பாதை, நடைவழிப்பாதை, உயர் மின்னழுத்தக் கம்பி, காணிக்கல் எனப்படும் நில அளவைக்கல், பொதுவாக இவை வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும்.
இது போன்ற மேலும் பல விவரங்களும் குறிக்கப்பட்டிருக்கும்
புலப்படத்தைப் பொறுத்த அளவில் நில அளவைத்துறையினர்(Land survey department) இதன் முக்கிய பொறுப்பாளர்களாக உள்ளனர்.
புலப்படத்தில் மேற்கொள்ளப்படும் புதிதாக புல உட்பிரிவுகளை உருவாக்குதல் உள்ளிட்ட மாற்றங்கள் யாவற்றையும் இவர்களே செய்கின்றனர்.
நிலத்தின் புலப்படமானது கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் வேண்டுவோர் அதற்கான விவரங்களை கணினியில் உள்ளீடு செய்து புலப்படத்தை பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் கணினியில் பெறப்படும் புலப்படமானது ஒவ்வொரு தனி புல உட்பிரிவு எண்ணுக்கு மட்டுமே உரியதானதாக உள்ளது.
அதேவேளையில் புலப்படப்புத்தகத்தில் உள்ள புலப்படமானது ஒரு முழு புல எண்ணுக்கு உரியதானதாக இருக்கும்.
பொதுவாக புலப்படத்தை நாம் வடக்குதிசையை பார்த்தவாறு உற்று நோக்க வேண்டும்.
சில புலப்படங்களில் திசைமாற்றம் இருக்கும்
அவ்வாறு இருப்பின் புலப்படத்தின் மேற்புறத்தில் அது சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்.
அதற்கேற்றவாறு நாம் திசையை மாற்றி உற்றுநோக்க வேண்டும்.
.
புலப்படம், புலப்பட விவரங்கள், புலப்பட தகவல்கள்,கணினி புலப்படம், எப் எம் பி, கணினி எப் எம் பி, கம்பியூட்டர் எப் எம் பி, நில அளவை புத்தகம், நில அளவை வரைபடம், நில அளவை பதிவேடு, வருவாய் பதிவேடு, நிலத்தின் வரைபடம், புலப்படப்புத்தகம், நிலவரைபடம், வருவாய்துறை வரைபடம், புலப்பட குறியீடுகள் விவரம்,
FMB, fmb in tamil land map, Pulapadam, online fmb sketch tamilnadu, computer fmb, field measurement book, field measurement book in tamil, field measurement sketch, land survey map, field measurement book land records survey, nila varaipadam, Land sketch, online land survey map, tamilnadu land survey map, tamilnadu online land survey map, survey number map tamil, subdivision number map tamil, tamil nadu land survey fmb, tamilnadu land record, revenue map, fmb sketch symbols details,
Video Created By R.MOHANRAJ வீடியோ உருவாக்கம் ரா.மோகன்ராஜ்.
Информация по комментариям в разработке