Vazhkkai Tamil Serial Title Song - AVM Productions

Описание к видео Vazhkkai Tamil Serial Title Song - AVM Productions

Vazhkkai Tamil Serial Title Song - AVM Productions. Watch other AVM Productions' TV serials at    / avmproduction  

பாடல் : வைரமுத்து
இசை : தினா
பாடியவர் : சங்கர் மகாதேவன்

வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா...
வாழ்வது அவரவர் கையிலடா...

வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா...
வாழ்வது அவரவர் கையிலடா...

வாழத்தெரிந்தவன் மனிதனடா...
வாழவைப்பவன் தெய்வமடா...

வாழத்தெரிந்தவன் மனிதனடா...
வாழவைப்பவன் தெய்வமடா...

மூங்கில் காட்டில் தீப்பிடித்தால்
புல்லாங்குழல்கள் மிச்சமடா...
துயரம்கண்டு... நீ சிரித்தால்
வாழ்க்கை உனக்கு உச்சமடா...

வாழ்க்கைஎன்பது பெருபயணம்...
காற்றோ மழையோ கடந்துவிடு...
வாழ்க்கைஎன்பது சமபந்தி...
கசப்போ இனிப்போ விழுங்கி விடு...

மூளை மட்டுமே வாழ்க்கைஎன்றால்
கணிப்பொறிவைத்தது சட்டமடா...
இதயம் என்பது... இல்லாவிட்டால்
வாழ்வில் ஈரம் இல்லையடா

அறிவால் எதையும் பார்ப்பவனுக்கு
என்றும் நிம்மதி இல்லையடா
இதயம் உள்ளவன் வீட்டின் மேலே
இடியும் பூக்கள் கொட்டுமடா...

வாழ்க்கை என்பது சூதாட்டம்...
தோல்வியை அனுபவம்... ஆக்கிவிடு...
வாழ்க்கைஎன்பதுவெறும் துணி தான்...
உந்தன் அளவுக்கு... தைத்துவிடு...

வாழ்க்கை என்பது வாழைமரம் போல்...
ஒவ்வொரு பாகமும் நன்மையடா...
வாழ்க்கை என்பது மேகம் போல்...
மாறிக்கொண்டே போகுமடா...

வலிகள் துன்பம் காயமில்லாமல்
வாழ நினைப்பவன் கோழையடா...
இடுப்பு வலிதான் தாய்க்குவராமல்...
எவனும் பிறப்பது இல்லையடா...


ஒரு சாதாரண சமையல்வேலை செய்பவரின் மகளான சீதாவின் கதை தான் வாழ்க்கை.... ஒரு செல்வந்தரின் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்து வரும் வருமானத்தில் தன் குடும்பத்தையே தோள்களில் தாங்குகிறாள்.... தன் குடும்பத்திலும், அந்த குழந்தைகளின் வீட்டிலும் சந்திக்கும் சிக்கல்களை இன்முகத்துடனும், உறுதியான குறிக்கோள்களுடனும் எதிர்கொள்கிறாள்..... தடைகளை தகர்த்தெறிந்து சீதாவால் ஒரு நல்ல வாழ்க்கையை அடைய முடிந்ததா? என்பதைத் தெரிந்து கொள்ள வாழ்க்கை தொடரை கண்டு களியுங்கள்......

Комментарии

Информация по комментариям в разработке