Join this channel to get access to perks:
/ @alpastrology
#JODHIDAM #astrologer #alpastrology
ALP METHOD ASTROLOGY | அட்சய லக்ன பத்ததி முறையில் பிரசன்னம் | ALP ASTROLOGER SHANTHIDEVIRAJESHKUMAR
அனைவருக்கும் வணக்கம் இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.இன்னைக்கு ALP முறையில் பிரசன்னம் பார்ப்பது எப்படி என்பதை பார்ப்போம்.மொபைல் சாப்ட்வேர் பிரசன்னம் எனும் செயலி உள்ளது.நிறைய பேருக்கு அது எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை.வரக்கூடிய நபர் கேட்கும் கேள்விகளை பொருத்து பிரசன்னம் பார்க்கலாம்.
கேட்கப்படும் நேரத்தை வைத்து பிரசன்ன பலன்களை எடுத்துக்கொள்ளலாம்.
கோச்சார கிரக நிலைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.பொதுவாக 1 ல் இருந்து 120 க்குள் ஒரு எண் கொடுக்க வேண்டும்.எந்த நேரத்தில் கேள்வி கேட்கப்படுகிறதோஅந்த நேரத்திற்கான லக்னம் குறிக்கப்படும்.
உதாரணமாக , ஆடி மாதம் கடக ராசியில் நிற்கக் கூடிய சூரியனில் இருந்துதான் நாம் லக்னத்தை எடுக்கப் போகிறோம். 6:30 ஒரு அழைப்பு வருது என்றால் அப்பொழுது லக்னம் கடக லக்னமாக இருக்கும்.
கேள்வி கேட்கக்கூடிய நேரத்தில் ஒரு எண் கூறுங்கள் என்று நாம் அவரை கேட்கலாம், அல்லது அவராகவே ஓரு எண் கூறலாம். உதாரணமாக 42 எண்.
ஒவ்வொரு கட்டத்திற்கும் 10 வருடம்.ஒரு லக்னத்திற்கு 10 வருடம் முடிந்து 5வது கட்டத்தில் 41 ,42 இப்பொழுது அட்சய லக்கனம்இங்கு வரும்
இதுதான் அவர்கள் கேட்ட பிரசன்ன லக்னம்.1,5,9 மற்றும்1 ,4 ,7 ,10 நல்ல பாவங்கள் சமந்தப்படுவது நல்லது.லக்னத்தின் அதிபதி செவ்வாய்,செவ்வாய் லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் நன்றாக உள்ளது.
நாலாம் வீடு சார்ந்த கேள்விகள்,
இந்த இடத்தின் அதிபதி சனி பகவான்,பன்னிரண்டாம் வீட்டில் உள்ளதால், இந்த லக்னத்தின் அதிபதி மூன்றாம் இடம் முயற்சி ஸ்தானத்தில் உள்ளதால்,சாதகமான சூழ்நிலை இல்லை.இன்றைக்கு பார்க்கக்கூடிய மனை நல்லா இருக்குமா?விரய ஸ்தானத்தில் மனை, அதனால் நன்றாக அமையாது.
அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகள் இருக்கா?
1 லிருந்து 120 குள் ஒரு எண், எண் 89 சாயங்காலம் 5:30 மணி. இதற்குநேர் எதிரான லக்னம் தான் உதய லக்னம், 8வது வீட்டை தாண்டி 9வது வீட்டில் ALP லக்னம் உள்ளது. 80 குள் சொல்லி இருந்தால் 8ம் இடத்தில் அட்சய லக்னம் வரும்பொழுது ஆரோக்கியத்தை பாதிக்கும். ALP யின் 6ம் வீடு சனி எங்க இருக்கார். புதன் அதிபதி பத்தில் பலமாக உள்ளது ,சனி 12ஆம் வீட்டில் உள்ளது,புதனுக்கு சனி சஷ்டாங்கத்தில் உள்ளது. அதனால் அறுவை சிகிச்சை பண்ணி தான் ஆக வேண்டும்.பாக்கியம் லக்னமாக அமைந்ததால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.
படிப்பு விஷயமாக ஒரு கேள்வி?
காலை 9:10 மணி, உதய லக்னம், ஒன்றிலிருந்து 120க்குள் ஒரு எண், எண் 110
இந்த மிதுன அட்சய லக்னத்தை வைத்து ஜாதகரின் பிரசனத்தை குறிக்கலாம்.படிப்பு பற்றிய கேள்வியில் லாபமாக லக்னம் இருப்பதால் படிப்புதடை இல்லை,இந்த வீட்டிற்கு இரண்டாம் இடம் கல்வி.இந்த வீட்டில் புதனும் சந்திரனும் சேர்ந்து நல்ல அமைப்பில் உள்ளனர்.கல்வி நன்றாக இருக்கும் .தாராளமாக படிக்க வைக்கலாம். கல்வியால் எதிர்காலத்தில் லாபம் உண்டு.ராகு சம்பந்தப்படுவதால் சில சிக்கல்களும் ,பிரச்சனைகளும் உருவாகும்.ஏன் வருது' எந்த காலகட்டத்தில் வரும் என்பதை அவர்களுடைய பிறந்த ஜாதகத்தை வைத்து ஆய்வு செய்யலாம்.உதய லக்னத்திற்கு அட்சய லக்னம் 1,4,7,10 நின்றால் தொழில் தொடங்கலாம்.வீடு சார்ந்த விஷயங்களுக்கு, நிற்கக் கூடிய குரு 1,4,7, 10ல் இருந்தால் வீடு வாங்கலாம், மனைவாங்கலாம்.கேட்கக்கூடிய கேள்விகளுக்கு அட்சய லக்னத்திற்கு அதாவது பிரசன்ன லக்னத்திற்கு 1,4,7, 10 அமைந்தால் நன்றாக இருக்கும்.பிரசன்னம் எப்படி பார்ப்பது என்று மொபைல் சாப்ட்வேர் பயன்படுத்தி பாருங்கள்.மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திக்கும் வரை
சாந்திதேவி ராஜேஷ்குமார்.
நன்றி, வணக்கம்.
Информация по комментариям в разработке