தூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா!! சித்தர்கள் ரகசியம் | How To Sleep

Описание к видео தூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா!! சித்தர்கள் ரகசியம் | How To Sleep

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் | தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் | How To Sleep

அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டியது.

இரவில் உறங்காமல் விழித்திருந்தால் என்னவெல்லாம் உண்டாகும் என்பதை தேரையர் பின்வருமாறு கூறுகிறார்.

சித்த மயக்கஞ் செறிவையும் புலத்தயக்க
மெய்த்த லுறக்கமந்த மென்பவைக-ணித்தமுற
வண்டுஞ் சிலரைநா யாயன்னோய் கவ்வுமிராக்
கண்டுஞ் சிலரைநம்பிக் காண்.

மேலும் பகலில் உறங்குவதால் என்னவெல்லாம் நிகழும் என்பதையும் தேரையர் வரையறுத்துக் கூறியிருக்கிறார். அந்தப் பாடல் பின்வருமாறு

தண்டமேட்டரக்ஷீய முருத்தம்பஞ்
சருவாங்கமூக்கிராக் கிரசஞ்சுப்தி
துண்டமுறுவணுத்தம்பந் திருக்குத்தம்பஞ்
சோணிதமாட்டியம் புருவா டோபகந்தண்
அண்டுகிருத்திரசியூர்த் துவஞ்சம்பூக
மவபேதமவந்திர மவதானந்தான்
விண்டவிவுர் தாசியமிப் பதினெண்காக்கும்
வித்தாகும்பகலனந்தன் மேவின்மாதோ.


சரி, இரவில் எப்படி தூங்குவதாம்?, அதற்கும் ஒரு சூட்சும முறையை தேரையர் தனது “மருத்துவ காவியம்”என்னும் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்.

பாரப்பா சிவயோகம் பண்ணும்பேர்க்கு
பரிவாக நித்திரைதான் வேண்டாமப்பா
நேரப்பா ராக்கால நித்திரைதான்பண்ண
நிலையாகச் சூட்சமொன்று நிகழ்த்துறேன்கேள்
வாரப்பா வரிசையாய்க் கால்தான்னீட்டி
வகையாக நித்திரைதான் பண்ணவேண்டாம்
ஓரப்பா ஒருபக்க மாகச்சாய்ந்து
உத்தமனே மேற்கையை மேற்கொள்வாயே.

கொள்ளப்பா ஒன்றின்மேல் சாய்ந்துகொண்டு
குறிப்பா நித்திரை செய்துநீங்க
அள்ளப்பா அஷ்டாங்க யோகம்பாரு
அப்பனே சிவயோகம் வாசியோகம்
நள்ளப்பா பிராணாய மவுனயோகம்
நலமான கவுனத்தின் யோகம்பாரு
வள்ளப்பா வாசியது கீழ்நோக்காது
வகையாக மேனோக்கி யேறும்பாரே.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு

• கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
• தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
• மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
• வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

Комментарии

Информация по комментариям в разработке