புதிரை உடைத்த புடின்... உலகமே மிரளுவது ஏன் Russia vs Ukraine | ATACMS vs Oreshnik | Putin vs Biden

Описание к видео புதிரை உடைத்த புடின்... உலகமே மிரளுவது ஏன் Russia vs Ukraine | ATACMS vs Oreshnik | Putin vs Biden

#Partnership ரஷ்யா-உக்ரைன் போரில் சில மாதங்களுக்கு முன்பு முக்கிய திருப்பம் நடந்தது.

ரஷ்யா சற்று அசந்த நேரம் அதன் மேற்கு எல்லையில் உள்ள குர்ஸ்க் என்ற இடத்தின் ஒரு பகுதியை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது.

இதனால் தான் மீண்டும் போர் தீவிரம் அடைந்தது.

ரஷ்யாவுக்கு உதவ 11 ஆயிரம் வட கொரிய வீரர்கள் நேரடியாக களத்துக்கு வந்தனர்.

அவர்களுடன் சேர்த்து 50 ஆயிரம் பேரை குர்ஸ்க் பகுதியில் ரஷ்யா நிறுத்தியது.

உக்ரைன் மீது ட்ரோன், ஏவுகணைகளை கொண்டு தீவிரமாக தாக்கியது.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தாங்கள் வழங்கிய சக்தி வாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்த உக்ரைனுக்கு பச்சைக்கொடி காட்டின.

இதையடுத்து ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்காவின் Army Tactical Missile System, பிரிட்டன் வழங்கிய Storm Shadow என்ற ஏவுகணைகளை ரஷ்யா மீது வீசியது உக்ரைன்.

அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், தயக்கம் இன்றி உக்ரைன் வெளிநாட்டு ஆயுதங்களை பயன்படுத்தியது.

இதனால் கோபம் அடைந்த புடின் சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை உக்ரைன் மீது வீச உத்தரவிட்டார்.#Russia #Ukraine #ATACMS #Oreshnik #Putin #Biden

Комментарии

Информация по комментариям в разработке