INDOSHEL BNC !! கோவையில் இன்டோஷெல் பிஎன்சி' முதல் அனுபவ மையம் !!

Описание к видео INDOSHEL BNC !! கோவையில் இன்டோஷெல் பிஎன்சி' முதல் அனுபவ மையம் !!

கோவையில் இன்டோஷெல் பிஎன்சி' முதல் அனுபவ மையம் !!

கோலை, ஜூன்

கோவையைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான பிஎன்சி மோட்டராஸ் 'இன்டோஷெல் பிஎன்சி' என்னும் பெயரில் முதல் அனுபவ மையத்தை கோவையில் திறந்துள்ளது ,சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள இந்த மையத்தை இன்டோஷெல் மோல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். ஜெகதீசன் திறந்து வைத்தார்.

இது குறித்து பிஎன்சி மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி அனிருத் ரவி தாராயணன் கூறுகையில், கோவையில் எங்களின் புதிய டிலர்ஷிப்பை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்கள் இருசக்கர வாகனங்களில் உள்ள பேட்டரியானது இந்தியாவில் உள்ள பிற இரு சக்கர வாகனங்களின் பேட்டரியை விட சிறந்ததாகும். மேலும் எங்களின் வாகனங்கள் நவீன தொழில்நுட்பத்தில் மிகவும் புதுமையான சேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கட்டமைப்புடன் உலகத் தரத்தில் வாகனங்களுக்கான 75 சதவீத உதிரி பாகங்களும் இங்கே உற்பத்தி தயாரிக்கப்படுகின்றன,

தற்போது பிஎன்சி நிறுவனம் பிஎன்சி சேலஞசர் எஸ்110 என்ற மோட்டார் சைக்கிளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகிறது மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் 2. புதிய வாகனங்களை அறிமுகம் செய்தது. அவை வரும் டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளது. சேலஞ்சர் எஸ்110 உயர் செயல்திறன் கொண்ட மின்சார வாகனமாகும்.

சிங்கிள் சார்ஜ் முறையில் இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கி.மீ. செல்லும், இது மணிக்கு 75 கி.மீ. வேகம் செல்லும் திறன் கொண்டது. பிஎன்சி சேலஞ்சர் எஸ்110, விங்க் ஆண்டி டைல் சஸ்பென்ஷன் சிஸ்டம், ரினக்ரோ டிஸ்சு பிரேக்குகள் இருக்கைக்கு அடியில் 30 விட்டா கொள்ளளவு கொண்ட இட வசதி, ஜிபிஎஸ் சிஸ்டம் உள்ளிட்ட 4 சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது .

Комментарии

Информация по комментариям в разработке