காரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள்||JAYA JAYA DEVI DURGADEVI SARNAM||

Описание к видео காரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள்||JAYA JAYA DEVI DURGADEVI SARNAM||

#TuesdayHits #Durgaiammansongs #JayaJayaDevi
#VejayAudios​ #AmmanSongs​ #ammandevotionalsongs​
காரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள்||JAYA JAYA DEVI DURGADEVI SARNAM||
துர்க்கை:
ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான நல்ல நேரம். பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கச் சொன்னார்கள். அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரும் என்கிறது தேவி பாகவதம்.

ராகுவைப் போல நல்லவைகளை அள்ளிக்கொடுப்பவர் யாருமில்லை. ராகுவின் நிலையைப் பொருத்து நமக்கு நன்மைகள் தேடி வரும். இப்போது ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியில் குரு சனியோடும் சேர்ந்து இருக்கின்றனர். ராகுவிற்கு குருவின் பார்வை கிடைத்துள்ளது. சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை நோக்கி தவமிருந்து நவகிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் ஒன்றரை மணி நேரம் ராகுவும், ஒன்றரை மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட ஒன்றரை மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. செவ்வாய்க் கிழமைகளில் வரும் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை அதிலும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குகிறார். இதனால் கூடுதல் பலன் கிடைக்கும்.
செவ்வாயும் ராகுவும்
செவ்வாய்க்க மங்களன் என்ற பெயர் உள்ளது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நல்ல பலன் தரும்.
ராகு கால விரதம்
ராகு கால விரதம்
துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. அதிலும் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது என்பது சிறப்பானது.
ராகு கால துர்க்கை பூஜையை கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவதுதான் நல்லது. ராகு கால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாதவர்கள் சிறிது பால், பழம் சாப்பிடலாம். கோவிலுக்கு போக இயலாதவர்கள் வீட்டில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்
0:00 Mangala Roopini
06:08 Om Shri Durgaiye Namah || Chanting
12:58 Jaya Jaya Durga Devi Saranam
SUNG BY : BOMBAY SARADHA,MAHANADHI SHOBANA
PRODUCED BY : G.JAGADEESAN
KINDLY SUBSCRIBE OUR CHANNEL :   • மங்கள செவாய்க்கிழமை ராகுகாலபூஜையில் க...  
JAYA JAYA DURGADEVI SARANAM,AMMAN DEVOTINAL,amman songs,navarthri songs,

Комментарии

Информация по комментариям в разработке