பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room

Описание к видео பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room

தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
   • தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும...  

காமாட்சி விளக்கு: விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு.

குத்து விளக்கு: குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது.

பாவை விளக்கு: ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது.

தீபங்கள் பதினாறு: தூபம், தீபம், புஷ்பதீபம், நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத தீபம், வியாக்ர தீபம், ஹம்ஸ தீபம், கும்ப தீபம், குக்குட தீபம், விருக்ஷ தீபம், கூர்ம தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.

தூக்கு விளக்குகள் எட்டு: வாடா விளக்கு, தூக்கு விளக்கு, தூண்டாமணி விளக்கு, நந்தா விளக்கு, கூண்டு விளக்கு, புறா விளக்கு, சங்கிலித் தூக்கு விளக்கு, கிளித்தூக்கு விளக்கு.

பூஜை விளக்குகள் ஒன்பது: சர்வராட்சத தீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாதர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன.

சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும்.

கைவிளக்குகள் ஐந்து கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, கணபதி விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும்.

நால்வகை திக்பாலர் தீபங்கள் ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.

அஷ்டகஜ தீபங்கள் எட்டு: ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சார்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம்.

இன்னும் இதுபோன்று பல வகையான விளக்கு வகைகள் உள்ளன.

- ஆத்ம ஞான மையம்

#Deepam
#விளக்கு
#தீபம்

தீபம் ஏற்றும் முறை
விளக்கு ஏற்றும் முறை
Vilakku etrum murai
Deepam etrum murai

Комментарии

Информация по комментариям в разработке