இருதய நோய் வருவதற்கான காரணங்கள்| How To Prevent From Heart Disease |Tips To have Healthy Heart| BTTL
இருதய நோய் வருவதற்கான காரணங்கள் | இதய நோய் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் | BTTL
இதயம் பலம் பெற பல குறிப்புகள்.
ஒரு மனிதனுக்கு உயிர் வாழ, அவனது உடலில் ரத்த ஓட்டம் சீராக எந்நிலையிலும் இருக்க வேண்டும். அந்த ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவது இதயம் என்கிற ஒரு உறுப்பு. இன்று பல மக்களுக்கும் தங்களின் இளம் வயதிலேயே இதயம் பாதிப்பிற்குள்ளாகி பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இந்த இதய பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் இதயம் பலம் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம்.
இதயம் பாதிக்க படுவதற்கான காரணங்கள்:
முதலில் மாரடைப்பு ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம். ரத்த அழுத்தமானது 120/80 தான் நார்மல். இது 140/ 100 என்ற அளவை தாண்டக்கூடாது. அதேநேரம் 90 / 60 என்ற அளவிற்கு கீழேயும் இறங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் உப்பை குறைப்பது ரொம்பவே நல்லது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது. ஊறுகாய், உப்புகண்டம், கருவாடு போன்ற உப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அவ்வாறு செய்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
இதயம் பாதிப்படைவதற்கு முக்கிய காரணம்
உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு. இது ரத்தத்தில் அதிகமாக்கி, இதயங்களுக்கு செல்லும் ரத்த நாளங்களில் ,ரத்த ஓட்டத்தை குறைத்து விடுவதால் இருதய பாதிப்பு ஏற்படுகிறது.
அடுத்து நாம் உட்கொள்ளும் உணவை சரியான முறையில் தேர்வு செய்து, சரியான அளவில் உட்கொள்ள வேண்டியது அவசியம்.நாம் இன்றைய காலங்களில் அதிக ரெடிமேட் உணவுகளையும், மைதா கலந்த உணவுகளையும் அதிகம் உட்கொள்கிறோம்.
அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். முடிந்தவரை இதயத்திற்கு நல்லதை அளிக்கக்கூடிய காய்கறிகளையும், பழங்களையும் உட்கொள்வது நன்மை விளைவிக்கும். கோதுமை, கம்பு, கேழ்வரகு, முழு தானியங்கள், நார்ச்சத்து மிகுந்த பயறு வகைகள், பட்டாணி, ஓட்ஸ், கொண்டைக்கடலை துவரை, பச்சைக் காய்கறிகள் ,
போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இதயம் பலம் பெற வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த அன்னாச்சி பழம் மற்றும் ஆரஞ்சு பழங்களை அவ்வப்போது உண்ணவேண்டும் . இது இதயத்தை பலப்படுத்தும்.
இதயத்தை பலப்படுத்தி அத்திப்பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து குடிக்கலாம். இவ்வாறு செய்யும் போது இதயம் வலுவடையும்.
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உடலில் ரத்த கொதிப்பு அதிகரிக்கச் செய்யாமல் இருக்க உதவுகிறது.
மேலும் வாழை பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6, நார்ச்சத்துக்கள் இதயத்தை பரபரப்பின்றி வைத்திட உதவிபுரிகிறது.
தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வர இதய படபடப்பு தீரும்.
துளசி சாறு, தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை என 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்.
செம்பருத்தி பூவை உலர்த்தி பொடி செய்து அத்துடன் சம அளவு மருதம்பட்டை பொடியும் சேர்த்து பாலுடன் காலை மாலை என அருந்திவர இதய பலவீனம் தீரும்.
தான்றிக்காயை பொடி செய்து இரண்டு சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து நாவில் தடவி வர மாரடைப்பு தீரும்.
பப்பாளியில் உயர்ரக வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் முக்கியமாக பப்பாளியில் இருக்கும் போலேட் சத்து இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது.
தக்காளியில் இருக்கும் வைட்டமின் சி ,ஈ, பொட்டாசியம், ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துகள் இதயத்தை கார்டியோவாஸ்குலர் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கிறது.
பசும்பாலில் பூண்டு பற்கள் சிலவற்றை நறுக்கிப் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் இருக்க ,உடல் எடையை நாம் எப்பொழுதும் கண்காணிக்க வேண்டும், நம் உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடையை வைத்துக்கொள்வது நல்லது.
புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவற்றை இதய பிரச்சினை உள்ளவர்கள் அல்லது இதய பிரச்சனை வராமல் இருக்க உடனடியாக நிறுத்துங்கள். புகையிலையில் உள்ள நிகோடின் நச்சு ரத்தக் குழாய்களை சுருக்கி ரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத்திற்கு கூடுதலாக சுமையை தருகிறது.
தினமும் ஒரு 45 நிமிடங்கள் இதயத்துக்கான ஒதுக்க வேண்டியது நமது கடமை.
நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி ,சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகள் இதயத்துக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். இது இயலாதவர்கள் வீட்டிலேயே பயிற்சி செய்து செய்வதற்கு உதவுகின்ற எட்டுமுறை பயிற்சியை மேற்கொள்ளலாம்.
போதுமான உறக்கமின்மை மன அழுத்தம் ,ரத்த அழுத்தம் போன்றவற்றை அதிகரிக்கச்செய்து இதயத்தை பாதிக்கிறது. ஆகவே தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது நிம்மதியாக உறங்குவது என்பது ரொம்ப முக்கியம்.
மன அழுத்தமானது மாரடைப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது .மன அழுத்தம் குறைய மாத்திரை மருந்துகளை சாப்பிடுவதை தவிர்த்து ,மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வது, யோகா போன்ற பயிற்சிகளை பின்பற்றுவது நல்லது.
அடுத்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது.மற்றவர்களைவிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 2 மடங்காக அதிகரிக்கிறது. ஆகவே சர்க்கரை நோய் வராமல் இருக்க சரியான உணவுப்பழக்கத்தை பின்பற்றியும், தகுந்த உடற்பயிற்சியும் செய்வது நல்லது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அதனை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
#BTTLhealthtips #BTTLvideos #Healthtipsintamil #backtotamillife
Follow Us On
Youtube : / backtotamillife
FaceBook : / backtotamillife
Instagram: / backtotamillife
E-Mail : [email protected]
Информация по комментариям в разработке