திருமாந்துறை அட்சயநாதர் கோயில் |ரோகிணி நட்சத்திரம் மற்றும் விருச்சிக ராசி பரிகார தலம் 🌙 பரிகார தலம்

Описание к видео திருமாந்துறை அட்சயநாதர் கோயில் |ரோகிணி நட்சத்திரம் மற்றும் விருச்சிக ராசி பரிகார தலம் 🌙 பரிகார தலம்

திருமாந்துறை அட்சயநாதர் கோயில்
சந்திர தோஷம் பரிகார தலம் விருச்சிக ராசி மற்றும் ரோகிணி நட்சத்திரம் பரிகார தலம்

இறைவன் : ஸ்ரீ அட்சயநாதர்
இறைவி : ஸ்ரீ யோகநாயகி
ஊர்: திருமாந்துறை


மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையே விளங்குகின்ற மாந்துறை மகாதேவனாம் அட்சயநாதர் ஐஸ்வர்யங்கள் அள்ளிதந்து குறைவில்லாத வாழ்வருளுகிறார்..

ஈசன் மாந்துறைநாதர், ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயர்களைக் கொண்டிருந்தாலும் அட்சயநாத சுவாமி என்ற திருநாமத்துடனும் அருள்புரிகிறார்

வசீகரம் மிக்க சந்திரனுக்கு சாபத்தால் ஏற்பட்ட க்ஷயரோகத்தால் உடல் அங்கங்கள் நாளுக்கு நாள் குறைய ஆரம்பித்தன.
தலவரலாறு
சந்திரன் குரு பகவானிடம் சென்று பிணி தீர வழி கேட்க, அதற்கு குரு பகவான், ""சந்திரனே! நீ தட்சயாகத்திற்குச் சென்றது மட்டுமல்லாமல் அங்கே விருந்துண்ட பாவத்தால் உடலில் ரோகம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையை சிவனைத் தவிர வேறு யாராலும் தீர்க்க முடியாது. பூலோகம் சென்று, காவிரியின் வடகரையிலுள்ள ஆம்ரவனத்தை அடைந்து, அங்குள்ள ஈசனை ஒரு பட்சம் (15 நாட்கள்) வழிபடு'' என்று கூறினார்.

சந்திரனும் ஆம்ரவனமான திருமாந்துறையை அடைந்து, அங்குள்ள குளத்தில் நீராடி, ஆம்ரவனேஸ்வரரை 15 நாட்கள் வழிபட்டு ஈசனின் திருக்காட்சியைப் பெற்று நலமடைந்தான்.

அப்போது திங்களாகிய சந்திரன், ""திங்கட்கிழமை தோறும் அபிஷேக ஆராதனைகள் செய்து, மிளகு அன்னம் நிவேதனம் செய்து தங்களை வழிபடும் இப்பூவுலகினர் அனைவரும், நோய் விலகி குறையில்லாமல் சுகமுடன் வாழ அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினான்.

அன்றைய தினம் தை மாத முதல் நாள். சங்கராந்தி தினமான அந்த திங்கட்கிழமை மாலைப் பொழுதில், அட்சயநாதர்- யோகநாயகி அம்பாள் மணக்கோலத்திலும், உச்சிஷ்ட கணபதி தம்பதி சமேதராகவும், மகாவிஷ்ணுவும் சந்திரனுக்காக காட்சி தந்து, ""உன் எண்ணப்படியே ஆகட்டும்'' என்று அனுக்கிரகம் செய்தனர். சந்திரன் வழிபட்டு நோய் நீங்கியதால் இத்தலம் சந்திரனுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது.

ஒருசமயம் சூரியனுக்கு கிரணங்கள் குறைந்தபோது, அவனுக்கு பிரகாசத்தைத் தந்து தன் பக்கத்திலிருந்து தினந்தோறும் தரிசிக்கச் சொன்னார் அட்சயநாதர்.

அதன்படி சூரியன் தங்கிய கோவில்தான் சூரியனார் கோவில். ஆகவே சூரியனார் கோவில் சூரிய க்ஷேத்திரமாகவும், அதற்குப் பின்புறமுள்ள திருமாந்துறை அட்சயநாதர் ஆலயம் சந்திர க்ஷேத்திரமாகவும் விளங்குகிறது.

சந்திரதீர்த்தத்தில் நீராடியபின் பெருமதிலின் நுழைவாயிலைக் கடந்து கொடிமரம், பலிபீடம், நந்திதேவரை வணங்கிவிட்டு ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் உச்சிஷ்ட கணபதியும் மகாவிஷ்ணுவும் அட்சயநாதரை வழிபடுகின்ற காட்சி அழகிய கற்சிற்பமாய் விளங்குவதை தரிசிக்கலாம்.

மூலவரான அட்சயநாதரை அர்ச்சனைப் பொருட்களுடன்
மாங்கனி கொண்டு அர்ச்சித்து வழிபடுவது விஷேசம்..

உட்பிராகாரத்தில் தெற்கு நோக்கி ஹரதத்தரும், சைவசமயக் குரவர் நால்வரும் அருள்புரிகின்றனர்.

தலதுர்க்கை வடக்கு நோக்கி அருள்புரிகிறாள்.

உச்சிஷ்ட கணபதி தனது சாபத்தை நிவர்த்தி செய்துகொண்டு, தமது பூஜாபலத்தால் பெற்ற சகல சக்தியையும் கொண்டு பில்லி, சூன்யம், ஏவல், வைப்பு, மாந்திரீகம், ஆபிசாரப் பிரயோகம் போன்ற தீயசக்திகளை அழித்து, எல்லாவிதமான இடையூறுகளிலிருந்தும் மக்களைக் காக்க மிகுந்த வரப்ரசாதியாய் நிருதி மூலையில் தம்பதி சமேதராய் அருள்புரிகிறார். இது வேறெங்கும் காணமுடியாத காட்சி.

சுப்ரமணிய சுவாமி வள்ளி, தேவசேனாவுடன் அருள்புரிகிறார்

வாயு மூலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மகாவிஷ்ணு அருள்புரிகிறார். தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார்.

ஈசான்ய திக்கில் பைரவர், சூரியன், சந்திரன், ஞானசம்பந்தர் ஆகியோர் சுவாமியைப் பார்த்த வண்ணம் காட்சி தருகின்றனர்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது சிலகாலம் இங்கு தங்கி ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டு, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை (அன்னபாத்திரம்) இறைவனுக்கு சமர்ப்பித்து பெறற்கரிய பேறு பெற்றனர் ..

சுகக்குறைவு ஏற்பட்ட காலவ முனிவரும், நவகிரக நாயகர்களும் திருமங்கலக்குடியில் உள்ள அட்சயதீர்த்தத்தில் நீராடி, திருமாந்துறையிலுள்ள ஈசனை அனுதினமும் "அட்சயநாதரே அருள்புரிவாயே' என்று வழிபட்டதன் பலனாக உடல்நலம் தேறி சிவானந்தப் பெருவாழ்வு அடைந்தனர் .....

அம்பாள் கிழக்கு நோக்கி தனிச்சந்நிதி கொண்டு
திருமணக் கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.

பழமைவாய்ந்ததும், திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை
ஆதீனத்திற்குட்பட்டதும், காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும், திருஞான சம்பந்தரால் பாடப்பட்டதும், உச்சிஷ்ட கணபதி, தாருகாவன முனிவர்கள், யோகநாயகி அம்பாள், மதியன், மருதவாணர், மகாவிஷ்ணு ஆகியோர் வழிபட்ட பெருமைவாய்ந்ததுமான தலம்தான் திருமாந்துறை

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயம், சுக்கிரக்ஷேத்ரமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயம், திருமாந்துறை ஸ்ரீஅட்சயநாதர் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களில் மட்டுமே சுவாமிக்கு வலப் பக்கத்தில் தனிச் சந்நிதி, தனிச்சுற்றுப் பிராகாரத்துடன் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது.
சுவாமி சந்நிதி அருகிலும், அம்பாள் சந்நிதி அருகிலும் உள்ள கிணறு
சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் எனப்படுகின்றன.

நவகிரகங்களுக்கே சாபம் நீக்கிய தலமாதலால் நவகிரகங்கள் இல்லை.

திருக்கோவிலைச் சுற்றி மாமரங்கள் சூழ்ந்திருப்பதால்,
மாந்துறை- ஆம்ரவனம் என அழைக்கப்படுகிறது.

ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+919626278648

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+917994347966

கோயில் Google map link
https://maps.app.goo.gl/q9jcfKHg46LKF...

அமைவிடம்

கும்பகோணத்தில் இருந்து கஞ்சனூர் சுக்கிரன் தலம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து இத்தலம் அடையலாம். சூரியனார் கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

கீழசூரியமூலை சூரியகோடிஸ்வரர் கோயில் தரிசனம்
   • கீழசூரியமூலை சூரிய கோடீஸ்வரர் கோயில் ...  


if you want to support us via UPI id
9655896987@ybl

Join this channel to get access to perks:
   / @mathina  

தமிழ்

Комментарии

Информация по комментариям в разработке