#Siddhargal #சித்தர்கள் #Jeevasamadhi #ஜீவசமாதி
சித்தர்களை எப்படி வணங்க வேண்டும்?
Saha Nathan
Address:
Gurulinga Swamigal Jeeva Samadhi
92, Karaneeswarar Koil St, Suriyammapet, Saidapet, Chennai, Tamil Nadu 600015
சித்தம் தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று என்று சொல்ல காரணம். நாம் வாழ்க்கையில் நம்மை நாம் ரசிக்கும், அனுபவிக்கும் உணவு / பிரயாணம் / உடை /பேச்சு /களிப்பு கொண்டாட்டம் /காமம் /போதை போன்றவை எல்லாமே ஒரு கட்டத்தில் அலுத்து விடும். இப்படி அலுத்துவிட்ட விட்ட மனம் ஒரு வெறுமையில் உழன்று நிரந்தர இன்பம் எதில் கிடைக்கும். அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதயமாகும் பொழுது சித்தம் விழித்து கொள்ளும் இது ஒரு புறம், மறு பார்வை பழைய புண்ணிய கணக்கில் அருளும் தகுந்த ஞானியர்கள் தொடர்பும் சேரும்பொழுது சித்தம் வேகமாக விழித்து செயல்படும் சித்தம் விழித்தால் ஏன் பசிக்கிறது என்ற கேள்வியே முதலில் எழும்...
இவைகளுக்கு விடை தேடினால் சர்வ ஞானமும் புலப்படும், ஞானத்தின் துவக்கமே மனதில் இருந்து அடக்குமுறையில் துவங்குவது... மனதை அடக்க அடக்க ஆற்றலும் அதிகரித்து புரியாதவைகள் எல்லாம் புலப்பட ஆரம்பம் ஆகும்.
இப்படி புரியப்பட்ட ஆன்மாக்களே சித்தர்கள் ஆக முதல் படி நிலை எனலாம்.
மனதை அடக்குவது என்பது சாதாரண செயல் இல்லை, மொழியினால் அடைபட்டு அவைகளுக்கு கட்டுப்பட்டு மனிதன் தன் வாழ்க்கையை நடத்துகிறான் என்று சொல்லலாம்... மேலும் வெறுமனையாக மனதை வைத்து இருப்பது சிரமமான காரியும் கூட... இப்படி மனதை அடக்கி வைத்து இருப்பவர்களை அடைமொழிவைத்து அழைக்கப்பட்டனர் என்று சொல்லவேண்டும்,
பாம்பாட்டி சித்தர், பிண்ணாக்கீசர் , சிவவாக்கியர், தேரையர், குதம்பை சித்தர், அகத்தியர் என்று அடைமொழியை தான் நம் அறிந்து அழைத்து வழிபடுகிறோம்... இது இவர்கள் பெற்றோர் வைத்த பெயர் இல்லை...
இவர்களின் மூலம் யாரும் அறியார்... இவர்களை குருவாக வணங்குவது என்பதை விட யாரிடம் இவர்கள் நெருங்குவார்கள் என்ற தகவலை அறிந்து கொண்டீர்கள் என்றால் நீங்கள் எளிதாக இவர்களின் ஆசிகளை பெறலாம்....
இது வசியம் அல்ல, மந்திரம் அல்ல, வழிபாட்டு முறையும் அல்ல, அது என்ன ?
சித்தர்களின் மூலத்தை அறியமுடியாது காரண பெயரை தான் நாம் அறிந்து அழைக்கிறோம்... மனதை அடக்காமல் மனதின் அற்புதத்தை நாம் அறியமுடியாது. வயிற்றை அடக்காமல் உடலை அறிய முடியாது. சித்தர்களின் முதல் படி நிலையே உடம்பை அடக்குவது....
உதாரணமாக உடல் நிலை பாதிப்பு அடைந்தால் மனம் சோர்ந்து விடும். மனம் சோர்ந்தால் உற்சாகம் போய்விடும். உற்சாகம் என்பது உயிர் உணர்ச்சி சார்ந்த நிலை என்பதால் உயிரின் சக்திகள் குறைய துவங்கி மரணத்தை அழைத்து வரும்.
சித்தர்கள் பொறுத்தவரை உடலை வெல்வதை இரண்டாக கொண்டார்கள்
ஒன்று உடலை கல்ப முறையில் வெல்வது இதை காய சுத்தி, காய சித்தி என்பார்கள். இரண்டாவது அனுபவித்து வெல்வது இது காயத்தில் ஏற்படும் அவஸ்தைகளை அனுபவித்து வெல்வார்கள். இதை தான் சித்தன் போக்கு சிவம் போக்கு என்பார்கள் .
மேலும் சித்தர்களுக்கு காலம் என்பது நிகழ்காலம் மட்டுமே...நாளை என்பது மாயை என்பது அவர்கள் கணக்கு. இன்று என்ன நடக்க வேண்டுமோ அதன் படிதான் நடக்கும் என்பதும் அப்படி நடந்து முடிக்க தான் பூமிக்கு வருகிறோம் என்பதும் அவர்கள் கணக்கு..
இந்த கணக்கு அவர்களிடம் வசப்பட்டு எழுத பட்டது தான் சோதிட கணக்கு என்று சொல்லலாம். இதில் கைதேர்ந்தவர்கள் அகத்தியர், புலிப்பாணி, காகபுஜண்டர் போன்றவர்கள்.... இவர்கள் நூல்கள் தான் இன்று பலருக்கு வழிகாட்டியாக உள்ளது எனலாம்.
சரி,
இவர்களை எப்படி வழிபடலாம் என்பதை விட இவர்கள் யாரை தேடி வருவார்கள் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும்....
இது ஒரு ஜென்மாந்திர தொடர் கணக்கு எனலாம், பல ஜென்மங்களில் சித்தர்களின் வாசனை உடையவர்களுக்கு தான் இந்த வாசனையை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று உறுதி பட என்னால் சொல்லமுடியும்.
எல்லோருக்கும் சோதிடம் புலப்படாது,
எல்லோருக்கும் மந்திர ஞானம், யந்திர ஞானம்புலப்படாது,
இந்த மூன்றும் தெய்வீக ரகசியமும் தேவ ரகசியமும் கொண்டது.....
எந்த மனிதனுக்கு இந்த ரகசியங்கள் தெய்வீகம் சார்ந்தது என்று புலப்படுகிறதோ அவர்களுக்கு சித்தர்களின் ஆசிகள் ஏற்படும் என்பதை என்னுடைய அனுபவமே எனக்கு ஆழமாக புரிய வைத்தது என்று சொல்வேன்.
மற்ற ஒரு பார்வை பசியாற்றுதல், பிறர் உயிர்களின் பசியை உணர்ந்து உணவு வழங்குதல் எனலாம்.. பொதுவாக நட்புகள் மனிதர்களுக்கிடையே உண்டாவது அவரவர் பழக்கத்தின் விருப்பமே என்று கவனித்து பார்த்தால் புரியும்.
Connect with Us:
Saha TV Android App: https://play.google.com/store/apps/de...
FaceBook: / sahatvtamil
Instagram: / saha_nathan
Twitter: / sahanathan
To buy Saha Nathan Books: https://www.amazon.com/s?k=saha+natha...
To read Saha Nathan books (FREE if you have kindle account) at Amazon please use the Below Links:
The Art of Renewing Your Hope:
https://www.amazon.com/Art-Renewing-Y...
Relationship Solutions: A Spiritual Way - Solutions from ancient Indian spiritual science... Kindle Edition:
சித்தர்கள்,பதினெட்டு சித்தர்கள்,18 சித்தர்கள்,தமிழ் சித்தர்கள்,சித்தர்கள் வரலாறு,பதிணெண் சித்தர்கள்,பதினெண் சித்தர்கள்,18 சித்தர்கள் பாடல்,சித்தர்கள் ரகசியம்,சித்தர்கள் ஜீவ சமாதி,நட்சத்திர சித்தர்கள்,கொல்லிமலை சித்தர்கள்,18 சித்தர்கள் மந்திரம்,சதுரகிரி மலை சித்தர்கள்,உண்மையில் யார் சித்தர்கள்,18 சித்தர்கள் வாழும் கஞ்சமலை,சித்தர்கள் ஆன்மீக செய்திகள்,18 சித்தர்களின் பெயர்கள்,18 சித்தர்கள் பாடல்கள் விளக்கம்,சித்தர்களின் ஜீவசமாதி
Информация по комментариям в разработке