Angaraka Gayatri Mantra | Powerful Chevvai Bhagwan gaytri Mantra | in English lyrics | Holy Hindu

Описание к видео Angaraka Gayatri Mantra | Powerful Chevvai Bhagwan gaytri Mantra | in English lyrics | Holy Hindu

#chevaaibhagawangayatrimantra
#navagrahaAngarakaGayathriMantra
#hindudevotionalmeditationmantra
#tamildivineholylordprayerslogan
#spiritualchantingmusicsong
#செவ்வாய்பகவான்காயத்ரிமந்த்ரம்

Sri Angaraka Gayatri Mantra

Om veereth vajaya vidmahi
vigna hasya deemahi |
Tanno bouma: prachodayat ||



ஸ்ரீ செவ்வாய் பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி|
தந்நோ: பெளமஹ் ப்ரசோதயாத்||

பொருள்:
நவகிரகங்களில் வீரத்திற்கு அதிபதியாக இருக்கும் செவ்வாய் பகவானே
வாழ்வில் ஏற்படக்கூடிய தடைகளை தகர்த்தெறியும் வல்லமை கொண்டவரே
இந்த அடியேனுக்கு நல்லாசி வழங்க வேண்டி உங்களை வணங்குகிறேன்.

செவ்வாய் தோஷம் நீங்க :
செவ்வாய் கிழமைகளில் காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள், உங்கள் வீட்டருகில் இருக்கும் கோயிலில் அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு, கடைசியாக நவகிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி, சிவப்பு நிற பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடவும்.

முடிந்தால் துவரம் பருப்பினால் செய்த பதார்த்தங்களைச் செவ்வாய் பகவானுக்கு படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கலாம்.

செவ்வாய் பகவானின் அருளைப் பெற செவ்வாய்க் கிழமைகளில் பூஜை அறையில் முருகப்பெருமானுக்குத் தீபமேற்றி, தீப, தூபங்கள் சமர்பித்து, முருக பெருமானுக்குரிய மந்திரத்தையும், செவ்வாய் பகவானுக்குரிய 108 போற்றி, காயத்ரி மந்திரத்தை உச்சரித்து அவரின் அருளைப் பெற்றிடலாம்.

நவக்கிரகங்களில் மூன்றாவது கிரகம் செவ்வாய்.
இந்த கிரகத்திற்கு அங்காரகன், சக்திதரன், குமரன், மகாகாயன், மங்கலன், தனப்ரதன் உள்பட பல பெயர்கள் உள்ளன.

செவ்வாய் தோசம் வந்தால் சகோதர, சகோதரிகளின் வெறுப்புக்கு ஆளாக வேண்டிவரும். பூர்வீக பூமியை விற்கும் துர்பாக்கி நிலை ஏற்படும். தீய பழக்கங்களுக்கு எளிதில் ஆட்படுவர். அதனால் செவ்வாய் தோசத்திலிருந்து விடுபட கீழ்க்காணும் மந்திரத்தை சொல்லி செவ்வாயை வழிபட்டு பலன் பெறலாம். செவ்வாய் கிரகத்திற்கு அங்காரகன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.


அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்குரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 9, 27, 108 முறை துதிப்பது சிறந்தது.
அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்குரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 9, 27, 108 முறை துதிப்பது சிறந்தது. செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்களை சமர்ப்பித்து, தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 துதித்து வருவதால் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதகங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகாமல் தடுக்கும்.
வெகு சீக்கிரத்தில் சொந்த வீடு மற்றும் சொந்தமாக நிலம் போன்ற அசையா சொத்துகள் வாங்குவதற்கான யோகத்தை ஏற்படுத்துவார் செவ்வாய் பகவான்.

அனைவருக்கும் எமது பூரண ஆசிகள்
ஓம் நமசிவாய
ஸ்ரீ ஆனந்தகிரி சுவாமிகள்
சிவயோகி சேவை மையம்

27 times chanting
Hear this chanting video 4 times you get the benefit of 108 times Chanting.
27 × 4 = 108


Special Thanks to Sivayogi Seva Maiyam Members and Desiples.

Poem:        Vedic Mantra
Category : Traditional Mantra
Singer:       Sri Aanandagiri Swami
Video:        Siva Krithick
Production: Sivayogi Seva Maiyam

Комментарии

Информация по комментариям в разработке