Joseph Aldrin | Nonstop | Tamil Christian songs | Jukebox | Praise & Worship the lord JESUS christ

Описание к видео Joseph Aldrin | Nonstop | Tamil Christian songs | Jukebox | Praise & Worship the lord JESUS christ

Praise The Lord Jesus Christ
Dear believers.
Welcome to Our Channel.
In This channel Christian songs and christian messages only uploading.
So Like & Share and subscribe the channel.
God Bless You.

01. Malaikal Vilakinalum Tamil Lyrics
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
கிருபை விலகாது
சமாதானம் நிலை பெயராது
மலைகள் விலகினாலும்..

கிருபை விலகாதைய்யா -4
(இயேசையா உம்)

கோபம் கொள்வதில்லை
என்று வாக்குரைத்தீர்
கடிந்து கொள்வதில்லை
என்று ஆணையிட்டீர்(என்மேல்)
பாவங்களை மன்னித்தீர்
அக்கிரமங்கள் எண்ணுவதில்லை
இயேசு எனக்காய் பலியானதனால்

நீதியினால் நான் ஸ்திரப்படுவேன்
கொடுமைக்கு நான் தூரமாவேன்
பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன்
எதுவும் என்னை அணுகுவதில்லை

எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர்
எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவை
குற்றப்படும்படி செய்திடுவீர்

மனிதர்கள் விலகினாலும்
நம்பினோர் கைவிரித்தாலும்
கிருபை விலகாது
சமாதானம் நிலைபெயராது
மலைகள் விலகினாலும்…

02. Abisheka oliva maram Tamil lyrics
அபிஷேக ஒலிவ மரம்
உம ஆலயத்தில் நடப்பட்டவன்
உம சமூகத்தில் வாழ்கின்றவன்
உம அன்பயே நம்புவன் – நான் உம்

உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2

காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே – என்னை
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதம் இன்றி காப்பவரே -2

பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூண்ட கிருபை செய்தீரே
மலர்ந்திடுவேன் நான் கனிகொடுப்பேன்
உலகம் எங்கும் நான் பெலன் கொடுப்பேன்
மலர்ந்திடுவேன் நான் கனிகொடுப்பேன்
உலகம் எங்கும் நான் பலன் கொடுப்பேன்
இந்த உலகம் எங்கும் உமக்காய் நான் பலன் கொடுப்பேன்.

03. Oru magimayin megam lyrics
ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன்செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

என் பேச்சில என் மூச்சில
என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க
என் நினைவில என் நடத்தையில
என் நினைவில என் உயிரில கலந்திருக்கீங்க

அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா.

04. Ummai nampum naan lyrics
உம்மை நம்பும் நான் பாக்கியவான்
உம்மையே நம்பி இருப்பேன்
உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான்
உம்அன்பயே நம்பி இருப்பேன் -2

உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்
உம்மையே நம்பி இருப்பேன்
உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
உம்அன்பயே நம்பி இருப்பேன் -2

நீர்தானே என் துணையானீர்
என் கேடகமுமானீர் -2
என்னை நினைப்பவரே
ஆசீர் வதிப்பவரே
என்னை நினைப்பவரே
என்னை ஆசீர் வதிப்பவரே
உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)

உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
உம் கிருபை சூழ்ந்துகொள்ளும் -2
உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
உம் நன்மை மிகுந்திருக்கும்
குற்றப்பட்டு போவதில்லை
நான் வெட்கப்பட்டு போவதில்லை -2
உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)

சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
அசையாமல் நிலைத்திருப்பேன் -2
ஆகாமியத்தின் கொடுங்கோல்
என்மேல் நிலைப்பதில்லை -2
உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)

05. Thadaikalai udaippavar lyrics
தடைகளை உடைப்பவரே
எனக்கு முன் செல்கின்றீரே -2

நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர்
கரடானவைகளை சமமாகுவீர்
நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர்
மறைந்த பொக்கிஷங்களை வெளிதருவீர் -2 (தடைகளை)

முந்தினதை நாம் நினைப்பதில்லை
பூர்வமானதை சிந்திப்பதில்லை – 2
புதியவைகள் எண்ணில் தோன்ற செய்தீர்
வனாந்திரத்தில் வழி உண்டாகுவீர் – 2 (நீர்)

திறக்கக்கூடாது அடைப்பவரே
அடைக்கக்கூடாது திறப்பவரே – 2
தாவீதின் திறவுகோல் உடையவரே
திறந்த வாசலை வாசலை தருபவரே
தாவீதின் திறவுகோல் உடையவரே
எனக்கு திறந்த வாசலை வாசலை தருபவரே – (நீர்)

06. Thaaipola thetri lyrics
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

2.பெலவீனபெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே.

07. Kanmalaiyanavar lyrics
(என்) கண்மலையானவர் தூதிக்கப்படுவீராக
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2

நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம்
இரட்சண்ய கொம்பு - 2

என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2
என் கண்மலையானவர்

ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர் - 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் - 2
என் பெலனாகிய

என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும்பொது நான் அபயமிட்டேன்

உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி
என் கரம் பிடித்து தூக்கிவிட்டீர் - 2
என் பெலனாகிய

Thanks for Watching. Like , share & Comment , Subscribe the channel .

Комментарии

Информация по комментариям в разработке