திருக்கானூர் (விஷ்ணம்பேட்டை) செம்மேனிநாதர் கோயில் தரிசனம் | சப்தமி திதி தோஷ நிவர்த்தி தலம்

Описание к видео திருக்கானூர் (விஷ்ணம்பேட்டை) செம்மேனிநாதர் கோயில் தரிசனம் | சப்தமி திதி தோஷ நிவர்த்தி தலம்

#தேவாரப்பாடல்_பெற்ற_சிவாலயங்கள்
#அருள்மிகு_செம்மேனிநாதர் #திருக்கோயில்_விஷ்ணம்பேட்டை
#திருக்கானூர்(56/274)

பங்குனியில் சூரிய பூஜை காணும் ஈசன் ; அம்பிகை சிவனை நோக்கி தவமிருந்த பூமி ; சிவன் அம்பிகைக்கு அக்னி பிழம்பாக காட்சி தந்த ஸ்தலம்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 56வது தலம்

மூலவர் : செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்

உற்சவர் : கரும்பேஸ்வரர்

அம்மன்/தாயார் : சிவயோகநாயகி, சவுந்தரநாயகி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : வேத தீர்த்தம், கொள்ளிடம்

பழமை : 3000 - 4000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்கானூர்பட்டி, மணல்மேடு

ஊர் : திருக்கானூர்

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்

#தேவாரப்பதிகம்:

நீரும் பாரம் நெருப்பும் அருக்கனும் காரும் மாருதம் கானூர் முளைத்தவன் சேர்வும் ஒன்று அறியாது திசைதிசை ஓர்வும் என்றிலர் ஓடித் திரிவரே.* - திருநாவுக்கரசர்

#திருவிழா

ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் (ஏப்.2,3,4 ஆகிய தேதிகளில்) இத்தல இறைவனுக்கு சூரிய பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆவணி மூலம், தைப்பவுர்ணமி தினத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

#தல_சிறப்பு

👉🏽 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

👉🏽 கொள்ளிடக்கரையில் உள்ளது. மணலில் மூடப்பட்டிருந்த கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன் வெளிக் கொணரப்பட்டது.

👉🏽 பங்குனி மாதத்தில் (ஏப்.2,3,4 ஆகிய தேதிகளில்) இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுகிறது.

👉🏽 அம்மனின் விக்ரகம் சாளக்கிராமத்தால் ஆனது.

👉🏽 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 56 வது தேவாரத்தலம் ஆகும்.


#பிரார்த்தனை

திருமணத்தடை உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் மற்றும் கணவன் மனைவியருக்குள் கருத்துவேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

#நேர்த்திக்கடன்

உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் இத்தல வில்வ இலைகளால் செம்மேனிநாதருக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் குணமாகும். திருமணத்தில் தடை உள்ளவர்கள், சாளக்கிராமத்தினால் ஆன அம்மனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, நெய் தீபமிட்டால் விரைவில் திருமணம் உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து எருக்கமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது நம்பிக்கை. இத்துடன் இனிப்பு பொருட்கள் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

#தலபெருமை

ஒரு முறை அம்பிகை சிவனை நோக்கி தவமிருக்க பூமிக்கு வந்தார். தியானத்திற்கு ஏற்ற இடமாக இத்தலத்தை தேர்ந்தெடுத்து, சிவனை நோக்கி கடுமையாக தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அக்னி பிழம்பாக காட்சி தந்தார். இதனால் இத்தல இறைவன் செம்மேனிநாதர் ஆனார். அம்மன் சிவயோகநாயகி ஆனார். கணவனும் மனைவியும் சேர்ந்து இத்தலம் வந்து வழிபட்டால், கருத்துவேறுபாடு இல்லாமல், ஒற்றுமையாக இருக்கலாம் என்பது நம்பிக்கை.

#கரிகால்_சோழன்_வாழ்ந்த_ஊர்

ஒரு முறை கரிகால் சோழனின் தாய் எதிரிகளுக்கு பயந்து தன் மகனுடன் இப்பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்தாள். சோழநாட்டிற்கு மன்னன் இல்லாத காரணத்தினால் பட்டத்துயானை அரசாட்சிக்குரியவரை தேடி வந்தது. அப்போது திருக்கானூரில் விளையாடிக் கொண்டிருந்த கரிகாலனுக்கு மாலையிட்டு, தன் பிடரியில் அவனை ஏற்றிக்கொண்டு உறையூர் சென்றது. சோழமன்னன் ஆனான் கரிகாலன்.

#தல_வரலாறு

ஜமதக்கினி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் பரசுராமர். ஒரு முறை இவர் இல்லாதபோது கார்த்தவீர்யார்சுனன் என்ற அரசன் முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து, அவரது காமதேனு பசுவை பலவந்தமாக கவர்ந்து சென்றார். திரும்பி வந்த பரசுராமர் நடந்ததை கேட்டு கோபமடைந்து, கார்த்தவீர்யார்சுனனை கொன்று பசுவை மீட்டார். அத்துடன் 21 சத்திரியர்களையும் கொன்றார். இதனால் இவருக்கு "சத்திரிய தோஷம்' ஏற்பட்டது. இந்த தோஷம் போக்குவதற்காக பரசுராமர் இத்தலத்தில் நீராடி ஈசனை வழிபட்டார். சிவனின் அருளால் பரசுராமர் தோஷம் நீங்கப்பெற்றார்.

#சிறப்பம்சம்

👉🏽 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

👉🏽 பங்குனி மாதத்தில் (ஏப்.2,3,4 ஆகிய தேதிகளில்) இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுகிறது.

#அமைவிடம்

திருவையாற்றில் இருந்து கல்லனை செல்லும் வழியில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 6.5 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவிலுள்ள விஷ்ணம்பேட்டை அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 4 கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். விஷணம்பேட்டை வரை நல்ல சாலை வசதி இருக்கிறது. அதன் பிறகு திருக்கானூர் கோவில் வரை மண் சாலை தான் உள்ளது. ஆட்டோ, கார் மூலம் இத்தலத்திற்கு செல்வது தான் சிறந்தது. மண் சாலையில் பேருந்து செல்ல வசதியில்லை. கொள்ளிடக் கரையில் கோயில் மட்டும் தனியே உள்ளது.
திருக்கானூர் என்னும் ஊர்ப் பெயர் மாறி, இன்று மக்கள் குடியிருப்பு ஒரு சிலவே இருப்பதாலும், மணற் பகுதியை அடுத்திருப்பதாலும் மக்கள் இவ்விடத்தை மணல் மேடு என்றே வழங்குகின்றனர்.)

#ஆலய_முகவரி

அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோவில்
திருக்கானூர்
விஷ்ணம்பேட்டை அஞ்சல்
வழி திருக்காட்டுப்பள்ளி
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613105

My Facebook Group

  / 326864724598768  

கோயில் Google map link

https://maps.app.goo.gl/mCiK4TYT7vP3G...

ஆலய தொடர்புக்கு:

விவேக் குருக்கள்
Cell Number: 9345009344

தமிழ்

Комментарии

Информация по комментариям в разработке