நான் உள்ளதை சொல்லட்டுமா பாடல் | Naan Ulladhai Sollattume song | Vijayakanth sad song .

Описание к видео நான் உள்ளதை சொல்லட்டுமா பாடல் | Naan Ulladhai Sollattume song | Vijayakanth sad song .

#vijayakanth #sudhachandran #rahman #tamilsongs #lovesongs #sad #4ksongs
நான் உள்ளதை சொல்லட்டுமா பாடல் | Naan Ulladhai Sollattume song | Vijayakanth sad song . Tamil Lyrics in Description .
Movie : Vasantha Raagam
Music : M. S. Viswanathan
Song : Naan Ulladhai Sollattume
Singers : P. Susheela, K. J. Yesudas, S. N. Surendar
Lyrics : Pulamaipithan
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், பி. சுஷீலா மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நான் உள்ளதை சொல்லட்டுமா
ஊரறிய பாடட்டுமா

ஆண் : நான் உள்ளதை சொல்லட்டுமா
ஊரறிய பாடட்டுமா
நல்லவர்கள் வாழ வேண்டும்
நன்மையெல்லாம் சூழ வேண்டும்
நல்லவர்கள் வாழ வேண்டும்
நன்மையெல்லாம் சூழ வேண்டும்
பொன் மகளும் மன்னவனும்
பெறு வாழ்வு காண வேண்டும்
பொன் மகளும் மன்னவனும்
பெறு வாழ்வு காண வேண்டும்
வாழ்க நீங்கள் வாழ்க
வாழ்வின் இலக்கணமாக

ஆண் : கூடு கட்டி வைத்திருந்தேன்
குருவியோடு வாழ்ந்திருந்தேன்
நாடு விட்டு வந்த போது
நானொருத்தன் பிழைத்து வந்தேன்

ஆண் : கூடு கட்டி வைத்திருந்தேன்
குருவியோடு வாழ்ந்திருந்தேன்
நாடு விட்டு வந்த போது
நானொருத்தன் பிழைத்து வந்தேன்

ஆண் : பேடை முகம் காணவில்லை
தேடி ஓட காலுமில்லை
பேடை முகம் காணவில்லை
தேடி ஓட காலுமில்லை
கண்ணெதிரில் பார்த்த போது
கையணைக்க உரிமையில்லை
வாழ்க நீங்கள் வாழ்க
வாழ்வின் இலக்கணமாக

ஆண் : வீணை ஒன்று கண்டெடுத்தேன்
விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன்
வேறெருத்தன் சொந்தமென்று
மீட்டாமல் நிறுத்தி வைத்தேன்

ஆண் : வீணை ஒன்று கண்டெடுத்தேன்
விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன்
வேறெருத்தன் சொந்தமென்று
மீட்டாமல் நிறுத்தி வைத்தேன்

ஆண் : இன்று வரை தொட்டதில்லை
கை விரலும் பட்டதில்லை
இன்று வரை தொட்டதில்லை
கை விரலும் பட்டதில்லை
இன்னொருவன் வீணை இது
சுதி லயம்தான் கேட்டதில்லை
வாழ்க நீங்கள் வாழ்க
வாழ்வின் இலக்கணமாக

பெண் : என்னுடைய வானத்திலே
இருட்டிய நேரத்திலே
வெண்ணிலாவை காணவில்லை
விடி விளக்கை ஏற்றி வைத்தேன்
விளக்கேற்றி வைத்தவுடன்
வெண்ணிலாவும் வந்ததம்மா
வெண்ணிலாவை கண்டவுடன்
பெண்ணிலாவும் தவித்தம்மா

பெண் : நிலவே வந்ததென்று
நெய் விளக்கை அணைப்பேனா
நெய் விளக்கு போதுமென்று
நிலவை தான் வெறுப்பேனா
இரு கரை நடுவினிலே
நதியை போல் ஓடுகிறேன்
விடுகதை நானாகி
விடையைத்தான் தேடுகிறேன்
இறைவா என் இறைவா
இதற்கொரு பதிலை சொல் இறைவா

பெண் : நான் உள்ளதை சொல்லட்டுமா
ஊரறிய பாடட்டுமா
நல்லவர்கள் வாழ வேண்டும்
நன்மை எல்லாம் சூழ வேண்டும்
பொன் மகனும் மன்னவனும்
நிம்மதியை காண வேண்டும்
வாழ்க நீங்கள் வாழ்க
வாழ்வின் இலக்கணமாக…….

Комментарии

Информация по комментариям в разработке