பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்|pmfby apply online 2024 PM Fasal Bima Yojana Crop Insurance

Описание к видео பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்|pmfby apply online 2024 PM Fasal Bima Yojana Crop Insurance

பிரதம மந்திரி பாசல் பீமா யோஜனா (PMFBY)) அதாவது பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்
Website Link https://pmfby.gov.in/
உழவன் செயலி : https://play.google.com/store/apps/de...


நம் தமிழ்நாட்டில் எதிர்பாரத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்ப்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும் நிலையான வருமானம் கிடைக்க செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது.
விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி, வெள்ளம் , புயல் , சூறாவளி காற்று, அதிக பரப்பளவில் பூச்சி நோய் தாக்குதல் நிலசரிவு மற்றும் இயற்கை சீற்றத்தினால் தீப்பிடித்தால் ஆகிய இயற்கை இடர்பாடுகளால் ஏற்ப்படும்மகசூல் இழப்பிற்கு ( yield loss) ஏற்றவாறு பயிர் அறுவடை அடிப்படையில் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும் .
அறிவிக்கை செய்யப்பட்ட குறுவட்டத்தில் (Firka) அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகள் ( குத்தகை விவசாயிகள் உட்பட ) இந்த திட்டத்தில் சேர தகுதியானவர்கள் வங்கியில் பயிர்கடன் பெறும் மற்றும் வங்கியில் பயிர்கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பெயரில் பயிர் காப்பீடு செய்யலாம்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செய்வதற்குத் தேவையான ஆவணங்கள்:
1. அடையாள அட்டை (ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை)
2. நிலம் உரிமை பட்டா / சிட்டா அல்லது குத்தகை ஒப்பந்தம்
3. அடங்கல்
4. வங்கி கணக்கு விவரங்கள்

Комментарии

Информация по комментариям в разработке