பூவார் சுத்தி பாக்கலாம் jolly ஆ | Poovar Travel Vlog In Tamil | Places to Visit in Kerala Poovar

Описание к видео பூவார் சுத்தி பாக்கலாம் jolly ஆ | Poovar Travel Vlog In Tamil | Places to Visit in Kerala Poovar

பூவார்ங்கறது திருவானந்தபுரத்துல இருக்கற ஒரு தீவு. பூவார் backwater நம்ம நெய்யார் கடலில் சேரும் இடத்தில இருக்கு. பூவரக்குனு நெறைய வரலாறு கூட இருக்கு. இது நாகர்கோயில இருந்து car ல போனா ஜஸ்ட் 1 1/2 மணி நேரம் தான் ஆகும். ஆனா அங்க போக நாகர்கோயில்ல இருந்து டைரக்ட் பஸ் இல்ல. அதனால காலைல 07:50 மணிக்கு கோட்டார் ரயில்வே ஸ்டேஷன் ல இருந்து கொச்சுவேலி போற ட்ரைன்ல திருவனந்தபுரம் போறோம். அதுக்கு டிக்கெட் ஜஸ்ட் Rs.45/per person தான் ஆகும். அப்புறமா திருவனந்தபுரம் செண்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் ல இருந்து பூவார் பஸ்ல போணும். அதுக்கு Rs.35/ per person ஆகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
Neyyar Backwater Boating:
Owner name: Kannan
contact: 9142900900
(Say channel name for discount)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
பூவார் 18 ம் நுற்றாண்டுல முஸ்லிம்களின் குடியிருப்பா இருந்துருக்கு. பூவார் மரம், சந்தனம், மற்றும் வாசனை பொருட்களின் வர்த்தக மையமாகவும் இருந்துருக்கு. இஸ்ரேலின் மன்னன் சாலமன் கப்பல் பூவார் வந்ததாகவும் சொல்லப்படுது. சோழர்களோட காலத்துல பூவார் ஒரு பெரிய துறைமுகமா இருந்துருக்கு. 18ஆம் நுற்றாண்டுல வாழ்ந்த மாலிக் தீனார் அப்டிங்கற ஒரு முஸ்லீம் மத போதகர் தான் பூவார்ல இருக்கற central மசூதியை கட்டிருக்காரு. இதுக்கு பூவார்னு பேர் வரக்காரணம் மன்னன் மார்த்தாண்ட வர்மன் தான் ஏன்னா எட்டுவீட்டில் பிள்ளைமார் திருவிதாங்கூர் உள்நாட்டு கலவரத்தில் தப்பி போகும் போது மன்னன் நெய்யார் பக்கமா வந்தப்போம் வசந்தகாலமா இருந்தனால நெய்யரோட ரெண்டு sideலயும் இருந்த மரங்கள்லயும் இருந்த பூக்கள் நெய்யார்ல விழுந்து அதை இன்னும் அழகா மாத்துனதுனால அதோட பேர் பூவார் ஆயிடுச்சு.

Комментарии

Информация по комментариям в разработке