Ervadi Vaarungal Song.|| ஏர்வாடி வாருங்கள் பாடல்.|| Tamil Islamic Songs.|| Iraiyarul Masthan Songs.

Описание к видео Ervadi Vaarungal Song.|| ஏர்வாடி வாருங்கள் பாடல்.|| Tamil Islamic Songs.|| Iraiyarul Masthan Songs.

Ervadi Vaarungal Song.|| ஏர்வாடி வாருங்கள் பாடல்.|| Tamil Islamic Songs.|| Iraiyarul Masthan Songs.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மாநகரில் வாழும் மதீனத்து மைந்தர் மறைந்தும் மறையாமல் அரசாட்சி செய்யும் மஹான் ஹழரத் சுல்தான் ஸையத் இபுராஹீம் ஷஹீத் பாதுஷா நாயகத்தின் மாபெரும் சந்தணக்கூடு கந்தூரி மகோற்ச்சவத்தை முன்னிட்டு புதிய தனி சிறப்புப் பாடல்.{2019}

தயாரிப்பு & பாடல் வரிகள்:
கவிஞர்.
செ.ஜாகிர் உசேன்.

இசை:-பிரேம் ஈஷ்வர்

பாடியவர்:- பொன்னேரி.
இறையருள் மஸ்தான்.

பாடல் வெளியீடு :- {24:07:2019} புதன் கிழமை
++++++++++++++++++++++++++++++++++

பாடல் வரிகள் பின்வருமாறு...!!!

{தொகையறா}

மனமுருகி ஷஹீதரை நினைவு கூறுவோம்.
ஷஹீதரின் வாழ்க்கை நினைத்து தீனை போற்றுவோம்.
ஷஹீதரின் வாழ்க்கை நினைத்து தீனை போற்றுவோம்.

{பல்லவி}

ஏர்வாடி வாருங்கள் மனதில் தூய்மை பாருங்கள்.
ஏர்வாடி வாருங்கள் மனதில் தூய்மை பாருங்கள்.

இருளை போக்கும் வெளிச்சம் அங்கே
இருளை போக்கும் வெளிச்சம் அங்கே
ஸைய்யது இபுராஹீம் வலியுல்லாஹ் அங்கே.
இருளை போக்கும் வெளிச்சம் அங்கே
ஸைய்யது இபுராஹீம் வலியுல்லாஹ் அங்கே.

{கோரஸ்}

பாதுஷா ஷஹீதே பாதுஷா.
பாதுஷா ஷஹீதே பாதுஷா.
பாதுஷா ஷஹீதே பாதுஷா.
பாதுஷா ஷஹீதே பாதுஷா.
{ஏர்வாடி}

சரணம் :-{01}

கண்ணிமைபோல் மார்க்க பற்றை காத்து வந்தார்கள்.
விண்ணொளிபோல் தீனின் சேவையால் சுடர்ந்தார்கள்.

தென்னகத்தின் ஏர்வாடியில் குடில் கொண்டார்கள்.
நாடிவரும் மக்களெல்லாம் நன்மை பெற்றார்கள்.

நோய்நொடிகள் விலகியோடி நலமே கண்டார்கள்.
இருளை விரட்டும் விளக்கு அங்கே உண்டு என்றார்கள்.

மனமுருகி ஷஹீதரை நினைவு கூறுவோம்.
ஷஹீதரின் வாழ்க்கை நினைத்து தீனை போற்றுவோம்.

{கோரஸ்}

பாதுஷா ஷஹீதே பாதுஷா.
பாதுஷா ஷஹீதே பாதுஷா.
பாதுஷா ஷஹீதே பாதுஷா.
பாதுஷா ஷஹீதே பாதுஷா.

{ஏர்வாடி}

சரணம் :-{02}

யுத்த களம் கண்டு பொங்கும் வீரமல்லவா.
வாள் பிடித்து போரில் வென்ற சரிதம் சொல்லவா.

மன்னராகி மக்களுக்காய் உழைத்த நீதரே.
இனிய மார்கம் பரவிடவே முனைந்த வேந்தரே.

சிறிய பெருமை ஏதுமின்றி ஆட்சி நடத்தியே.
இறையவனின் அருளைப்பெற்ற ஞான தீரரே.

மனமுருகி ஷஹீதரை நினைவு கூறுவோம்.
ஷஹீதரின் வாழ்க்கை நினைத்து தீனை போற்றுவோம்.

{கோரஸ்}

பாதுஷா ஷஹீதே பாதுஷா.
பாதுஷா ஷஹீதே பாதுஷா.
பாதுஷா ஷஹீதே பாதுஷா.
பாதுஷா ஷஹீதே பாதுஷா.

{ஏர்வாடி}

சரணம் :-{03}

நினைத்ததுமே கண்களெல்லாம் கண்ணீர் சிந்துதே.
அனைவருமே ஷஹீதான நினைவை கூறுதே.

பில்லி,சூன்யம்,நோய்களெல்லாம்
விலகி ஓடுதே.
நாம் நினைத்து வரும் நிய்யத்துக்கள் வெற்றியாகுதே.

மன்னர் குடும்பம் சீர்வரிசை இன்றும் செய்யுதே.
மதங்கள் கடந்து மக்களெல்லாம் ஒன்று கூடுதே.

மனமுருகி ஷஹீதரை நினைவு கூறுவோம்.
ஷஹீதரின் வாழ்க்கை நினைத்து தீனை போற்றுவோம்.

{கோரஸ்}

பாதுஷா ஷஹீதே பாதுஷா.
பாதுஷா ஷஹீதே பாதுஷா.
பாதுஷா ஷஹீதே பாதுஷா.
பாதுஷா ஷஹீதே பாதுஷா.

{ஏர்வாடி}
********************************************
பாடல் & தயாரிப்பு

கவிஞர்.
செ.ஜாகிர் உசேன்.

................................................

Комментарии

Информация по комментариям в разработке