#சோழர் பேரரசு மட்டும் தான் 430 ஆண்டுகள் நிலையானது நீடித்த ஆட்சியை கொடுத்த ஒரே பேரரசு ஆகும்" சோழ குலத்தை உலகறியச் செய்த
#ராஜராஜசோழன், வானவன் மாதேவிக்கும் மகனாகப் பிறந்த
#ராஜேந்திரன்சோழனுக்கு, #மதுராந்தகன் என பெயரிடப்பட்டது. #ராஜேந்திரசோழன் பிறந்தது ஆடி, #திருவாதிரை நன்னாளில். அந்த நாள் இன்றும் #கங்கைகொண்டசோழபுரம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது ராஜேந்திர சோழன் வாழ்ந்து வந்த பொது இந்திய துணைக் கண்டத்திலேயே யாரிடமும் அத்தனை வலிமையான #கடற்படை இல்லை. அந்த அளவுக்குச் #சோழர்கள் கடற்படையை கட்டமைப்போடும், நுணுக்கமான போர் திறத்தோடும், கடல் சார்ந்த அறிவோடும் விளங்கினர் தந்தை ராஜராஜசோழன் பதவியில் இருக்கும் போதே கி.பி. 1012ஆம் ஆண்டு இணை அரசனாகப் பதவியேற்றார் ராஜேந்திர சோழன். #ராஜராஜசோழன் மறைவுக்குப் பின் 1014ஆம் ஆண்டு தஞ்சையில் மணிமுடி சூட்டிக்கொண்டார் ராஜேந்திர சோழன். அரசனாகப் பதவியேற்றதும் அவர் அரண்மனைக்குள் இருந்த நாட்களைவிட, போர்க்களத்தில் இருந்த நாட்கள்தான் அதிகம். ராஜேந்திர சோழன், மன்னனாக முடிசூடிய பிறகு தன் முன்னோர்களின் தலைநகரான #தஞ்சாவூரில் இருந்தபடி பத்து ஆண்டுகள்தான் அதாவது 1014 முதல் 1024வரைதான் ஆட்சி செய்தான். தன்னுடைய மகத்தான சாதனைகள் அனைத்தையும் இந்த பத்து ஆண்டுகளிலேயே செய்து முடித்தான். அவனுடைய சாதனைகளில் மூன்று சாதனைகள் மிக முக்கியமானவை. "ராஜேந்திர சோழனின் முதல் சாதனை இந்தியா முழுவதையும் வெற்றிகொண்டது. ராஜராஜசோழனின் காலத்திலேயே சோழநாட்டுக்குத் தெற்கேயும். உள்ள அனைத்து நாடுகளையும் தந்தையும் மகனும் வென்றிருந்தார்கள். ராஜேந்திர சோழன், மன்னனாக முடிசூடிய பிறகு வடநாடுகளை நோக்கி தன் பார்வையை திருப்பினான். மேலைச் சாளுக்கியர்கள்தான் அப்போது சோழர்களுக்குப் பெரிய தொல்லையாக இறந்தனர். அவர்களை முதலில் வெற்றிகொண்டான். பிறகு, இன்றைய #மத்திய பிரதேசம், #சட்டீஸ்கர் #மேற்கு வங்கம் #வங்கதேசம் வரை சென்று அவர்களை வெற்றிகொண்டான். இதனால் பெரும் செல்வம் கிடைத்ததோடு அவனுடைய ஆளுமையும் #இந்தியா முழுக்க தெரியவந்தது. நாடுகளைப் பிடித்து ஆட்சி செய்வது அவன் நோக்கமாக இருக்கவில்லை" இந்தப் படையெடுப்பின்போது ராஜேந்திரனின் தளபதிகளே பெரும்பாலான இடங்களுக்குச் சென்று வெற்றிகொண்டார்கள் என்றாலும் ராஜேந்திரன் தற்போதைய #ஒடிஷா வரை தன் படைகளுடன் சென்றான். அங்குள்ள #மகேந்திரகிரீஸ்வர் கோவில் கல்வெட்டில் அவனுடைய வெற்றிகள் குறிப்பிடப்படுகின்றன.
தமிழ் மன்னர்களில், ஏன் அந்த காலகட்டத்து இந்திய மன்னர்களில் ராஜேந்திர சோழன் அளவுக்கு கடல் கடந்து சென்று வெற்றிபெற்றவர்கள் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ராஜேந்திர சோழனுக்கு முன்பாக, ராஜராஜ சோழன் கடல் கடந்து சென்று #மாலத்தீவை வென்றிருக்கிறான். #ஈழ படையெடுப்பையும் நடத்தியிருக்கிறான். ஆனால், ராஜேந்திர சோழன் வங்கக் கடலைக் கடந்து 1025ல் ஸ்ரீ விஜய நாடு தற்போதைய #இந்தோனீசியப் பகுதியை வென்றான். கடாரம் தற்போதைய மலேசியாவின் ஒரு பகுதி, பல #கப்பல்களை அனுப்பி ஸ்ரீமாற விஜயோத்துங்க வர்மனை அடக்கினார். அங்கிருந்து பெரும் எண்ணிக்கையிலான யானைகள் உட்பட பல பரிசுகள் சோழ ராஜ்ஜியத்திற்குக் கொண்டுவரப்பட்டன. ராஜேந்திரச் சோழனின் கல்வெட்டுகள் கிட்டத்தட்ட 12 துறைமுக நகரங்களைக் குறிப்பிடுகின்றன. அவை பெரும்பாலும் மலேயத் தீபகற்பம், #சுமத்திரா #நிகோபார் தீவுகளைச் சேர்ந்தவை. கடல்கடந்து சென்று அந்நாட்டு மன்னர்களை அடக்கிய பிறகு, ராஜேந்திரச் சோழன், அந்த நாடுகளை தன்னோடு இணைத்து ஆட்சி செய்யவில்லை. மாற்றாக செல்வங்களைச் சேர்ப்பது, வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவையே இந்தப் படையெடுப்பின் நோக்கமாக இருந்தன. அந்த வணிகக் குழுவினரின் கப்பல்கள் #கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நிலையில், இந்த வெற்றிகளின் மூலம் அந்தந்த நாட்டு மன்னர்கள் இந்தக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் துவங்கினர். 1017-18ல் நடந்த ஈழப் போரில் வெற்றிபெற்ற ராஜேந்திரச் சோழன், ஈழ நாட்டு மன்னர்களின் முடியையும் பாண்டிய மன்னர்கள் கொடுத்து வைத்தனர். இந்திரனுடைய கீரிடத்தையும் கைப்பற்றியதாக கரந்தைச் செப்பேடுகள் கூறுகின்றன. ராஜராஜசோழன் - ராஜேந்திர சோழன் ஆகியோரின் மகத்தான சாதனைகளால்தான் பிற்காலச் சோழர்களின் ஆட்சி 430 ஆண்டுகள் நீடித்தது. இந்தியாவில் எந்த ஒரு இந்திய பேரரசனை எடுத்துக்கொண்டாலும் ஏதோ ஒரு விஷயத்தில்தான் மகத்தான சாதனையைப் படைத்திருப்பார்கள். ஆனால், ராஜேந்திர சோழன் எல்லா விதத்திலும் சாதனை படைத்தவன். சாளுக்கியர், பாண்டியர், சேரன், சிங்களர், வங்கதேச அரசர், கடாரம் அரசர் என இத்தனை பேரை ராஜேந்திரன் வீழ்த்த எடுத்துக் கொண்ட காலம் வெறும் பத்து ஆண்டுகள் தான். ராஜேந்திர சோழன் கிபி 1019 ஆம் தனது #கங்கை படையெடுப்பு தொடங்கினார்.
#RajarajaCholan #BrihadeeswararTemple #CholaDynasty #LordShiva #HinduTemple #TamilHistory #AncientIndia #ShivaLingam #Devotion #MythologicalStory #TempleArchitecture #Spirituality #IndianHistory #SivapadaSekaran #tamilmythology
#RajarajaCholan,#ராஜராஜசோழன்,#பிரகதீஸ்வரர் கோயில்,#BrihadeeswararTemple,#CholaDynasty,#LordShiva,#SivapadaSekaran,#சிவன்
#Rajendra Cholan
#Chola Empire
#Naval Conquest
#Southeast Asia
#Malaysian Peninsula
#Indonesian Islands
#Gangaikonda Cholapuram
#Tamil History
#Warrior King
#Overseas Expeditions
#Chola Navy
#Indian History
#Epic Battles
#Golden Age
#Historical Legacy
#ராஜேந்திர சோழன்
#சோழப் பேரரசு
#கடற்படை வெற்றி
#தென்கிழக்கு ஆசியா
#மலேசிய தீபகற்பம்
#இந்தோனேசிய தீவுகள்
#கங்கைகொண்ட சோழபுரம்
#தமிழ் வரலாறு
#போர்வீரன் ராஜா
#வெளிநாட்டுப் பயணங்கள்
#சோழ கடற்படை
#இந்திய வரலாறு
#காவியப் போர்கள்
#பொற்காலம்
#வரலாற்று மரபு
Информация по комментариям в разработке