வே.மிக்கேல்பட்டணம் புனித மிக்கேல் அதிதூதர் தேர் பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Описание к видео வே.மிக்கேல்பட்டணம் புனித மிக்கேல் அதிதூதர் தேர் பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

வே.மிக்கேல்பட்டணம் புனித மிக்கேல் அதிதூதர் தேர் பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு.

சிவகங்கை அருகே வே.மிக்கேல்பட்டணம் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா கடந்த 20 ம் தேதி அருட்திரு.சேவியர் அந்தோணி அவர்களால் கொடியேற்றப்பட்டது. விழா நாள்களில் தினந்தோறும்
மாலை 6 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதரின் கொடி பவனியும் தொடர்ந்து நவநாள் திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றன.
விழாவின் ஒன்பதாம் நாளில் சிவகங்கை மறைமாவட்டம் மேதகு ஆயர் முனைவர் L.லூர்து ஆனந்தம் தலைமையிலும் , பங்கு தந்தை, மண்ணின் அருட்தந்தையர்களும்,
இதர அருட்தந்தையர்களும், அருட்சகோதரகளும், அருட்சகோதரிகளும்
இணைந்து திருவிழா திருப்பலியில் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து புனித மைக்கேல் அதித்தூதர், புனித அன்னை மேரி மற்றும் ஏசுவின் சிலைகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் வைத்து தேர் பவனி துவங்கியது. ஆலயத்தில் இருந்து தேரோடும் நான்கு வீதிகள் வழியாக வளம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் மைக்கேல் பட்டணம், பச்சேரி, வேம்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு புனித மைக்கேல் அதிதூதரின் ஆசியைப் பெற்றுச் சென்றனர்.

Комментарии

Информация по комментариям в разработке