Sogam Ini Illai Ada Ini Vaaname Ellai - Vaaname Ellai - Tamil Song

Описание к видео Sogam Ini Illai Ada Ini Vaaname Ellai - Vaaname Ellai - Tamil Song

Song : Sogam Ini Illai Ada Ini Vaaname Ellai
Movie : Vaaname Ellai
Year : 1992
Music : Maragadha Mani
Singers: S.P.B & Chorus
Lyrics : Vairamuthu

பாடல் வரிகள் :

ஆண் : ………………………..

ஆண் : சோகம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
ஆண் : துாரம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை

ஆண் : அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
குழு : தகு தகு தகு தக தக ஹேய்
ஆண் : பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி

ஆண் : சோகம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
ஆண் : துாரம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை

ஆண் : உறவுகள் வேண்டாம்
உலகம் எங்கும் போகலாம்
இரவுகள் வேண்டாம்
புதிய சட்டம் போடலாம்
வீரமிருந்தால்
விண்ணிலெங்கும் செல்லலாம்
நேரம் இருந்தால்
நிலவில் கொஞ்சம் தங்கலாம்

ஆண் : ஆர்ப்பரிக்கும் பறவைகளாய்
அனுதினம் உலகினை வலம் வரலாம்
பூப்பறிக்கும் சிறுமிகளாய்
புவியை ரசிக்கலாம்
வாழ்வென்ன உலகில் நித்தியமா
வாழ்வோமே இதிலே பத்தியமா

ஆண் : சோகம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
ஆண் : துாரம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை

குழு : ………………………..

ஆண் : உலகினை விற்று
நிலவு லோகம் வாங்கலாம்
நிலவினை விற்று
புதிய வானம் வாங்கலாம்
ஹஹஹா

ஆண் : கவலையை விற்று கவிதை
நுால்கள் வாங்கலாம்
கவிதையை விற்று
கனவு கொஞ்சம் வாங்கலாம்

ஆண் : மூச்சிருக்கும் வயது வரை
20 வயதினில் இருந்திடலாம்
ஹ காத்திருக்கும் எமன் முதுகில்
கவிதை எழுதலாம்
வேண்டாமே இனிமேல் சச்சரவு
வாழ்வோமே இதுவே உத்தரவு

ஆண் : சோகம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
ஆண் : துாரம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை

ஆண் : அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
குழு : தகு தகு தகு தக தக ஹேய்
ஆண் : பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி

ஆண் : சோகம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
ஆண் : துாரம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை

ஆண் : …………………………………..

Комментарии

Информация по комментариям в разработке