தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற, அரசு பள்ளி ஆசிரியை கவுரவிப்பு.

Описание к видео தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற, அரசு பள்ளி ஆசிரியை கவுரவிப்பு.

ஓசூரில், தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர்விருது பெற்ற, அரசு பள்ளி ஆசிரியைக்கு, உற்சாக வரவேற்பு மற்றும் பாராட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜவாடி பகுதியில் செயல்பட்டு வரும், அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும், ஆசிரியை, திருமதி ஸ்வர்ணா, நல்ல ஆசிரியராக, தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று சென்னையில் நடைபெற்ற, ஆசிரியர் தின நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும், டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரிலான நல்லாசிரியர் விருதினை கல்வி அமைச்சர், ஆசிரியைக்கு வழங்கினார்.

இந்த நிலையில், ஓசூர் திரும்பிய ஆசிரியைக்கு, பள்ளியின் சார்பில், உற்சாக வரவேற்பும், பாராட்டுக்களும் அளிக்கப்பட்டது.

முன்னதாக, பள்ளிக்கு வந்த, ஆசிரியைக்கு, தலைமைஆசிரியை, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பூங்கொத்து கொடுத்து, உற்சாகமாக, கர ஒலி எழுப்பி, வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பள்ளியில், அவருடன் பணியாற்றும், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஸ்ரீதரன், அசோகாரெட்டி மற்றும் கருணாநிதி, ஆகியோர், விருது பெற்றமைக்கு, வாழ்த்து தெரிவித்து பேசினார்கள். தொடர்ந்து, அனைவரது சார்பிலும், திருமதி ஸ்வர்ணாவிற்கு சால்வை அணிவித்து, பெற்ற விருது, சந்தன மாலை, ஆகியவற்றை அணிவித்து, மாணவர்களுடன் கரவொலி எழுப்பி, மகிழ்ச்சி கொண்டாட்டத்தில், ஈடுபட்டனர்.

பின்னர், இந்தப் பள்ளியில் படித்த, முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியையின் உறவினர்கள், நினைவு பரிசுகள் வழங்கி, கவுரவித்து, மகிழ்ச்சியை, பகிர்ந்து கொண்டனர்.

உற்சாக வரவேற்பையும், பாராட்டுக்களையும், பெற்றுக் கொண்ட ஆசிரியை திருமதி ஸ்வர்ணா, அனைவருக்கும், நெஞ்சார்ந்த நன்றிகளை, தெரிவித்து பேசினார்.

மேலும், தனக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட ரொக்க பரிசு பத்தாயிரம் ரூபாயை, பள்ளியில், சதுரங்க விளையாட்டு வீரரை உருவாக்குவதற்கும், பசுமையை வலியுறுத்தி, மரக்கன்றுகள் நடவு செய்வது, உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கு, பயன்படுத்துவதற்காக, அதனை, பள்ளிக்கே, வழங்குவதாக கூறி, காசோலையை, பள்ளி தலைமைஆசிரியை மற்றும் நிர்வாகிகளிடம், அவர் வழங்கினார்.

பேட்டி : திருமதி ஸ்வர்ணா, நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியை, ஓசூர்.

Комментарии

Информация по комментариям в разработке