வீட்டிலுள்ள சுவாமிக்கு எப்படி அபிஷேகம் எப்படி செய்வது? How to do Abhishekam in Tamil?

Описание к видео வீட்டிலுள்ள சுவாமிக்கு எப்படி அபிஷேகம் எப்படி செய்வது? How to do Abhishekam in Tamil?

வீட்டில் வைத்து வணங்கும் தெய்வ சிலைகளுக்கும் அபிஷேகம், பூஜைகள் செய்து வழிபட வேண்டும் என்பது நியதி. தினமும் அபிஷேக ஆராதனை செய்து, ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து வழிபடுவதன் மூலம் தெய்வீக சக்தியானது வீடு முழுவதும் நிறைந்திருக்கும். இதனால் தீமைகள் அழிந்து வீட்டில் நன்மைகள் பெருகும்.

தெய்வீக சக்திகளை வீட்டிலேயே நிறை பெற செய்யவும், அதன் சக்திகளை அதிகப்படுத்தவும் அபிஷேகம் அவசியமான ஒன்றாகும். வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் அபிஷேகம் செய்யலாம். பெரியவர்களால் முடியாத பட்சத்தில் குழந்தைகளையும் அபிஷேகம் செய்ய பழக்கலாம்.

கோவிலாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி சுவாமி விக்ரகம் இருந்தால் கண்டிப்பாக அபிஷேகம், நைவேத்தியம், பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் நியதி. " கோவில்களில் எதற்காக அபிஷேகம் செய்ய வேண்டும் ? அதற்கு ஆகும் பணத்தை இல்லாதவர்களுக்கு தான தர்மம் செய்தால் புண்ணியம் கிடைக்குமே? சிலைகளுக்கு எதற்காக அபிஷேகம் செய்ய வேண்டும்?" என கேள்வி கேட்பவர்கள் உண்டு.

Комментарии

Информация по комментариям в разработке