கேன்சல் செய்த காசோலையை கேட்பது ஏன்? ஆயிரம் சந்தேகங்கள்

Описание к видео கேன்சல் செய்த காசோலையை கேட்பது ஏன்? ஆயிரம் சந்தேகங்கள்

ஒரு சில வங்கியில் கடன்கோரும் போதும், காப்பீட்டு நிறுவனத்தில் பாலிசியை சரண்டர் செய்யும் போதும், மேற்படி நிர்வாகங்கள் கேன்சல் செய்த காசோலையை கோருகின்றனர். இது எதற்காக?

வாடிக்கையாளர், உண்மையிலேயே வங்கியில் கணக்கு வைத்திருக்கிறாரா என்பதைக் கடன் கொடுக்கும் நிறுவனம் உறுதி செய்துகொள்ள வேண்டாமா? ஏதோ ஒரு வங்கியின் பெயர், கணக்கு எண் கொடுத்து ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது? அவர் பின்னால் போய் நின்று எப்படிக் கடனை வசூல் செய்வது? காசோலையில், கணக்கு வைத்திருப்பவரைப் பற்றிய ஏராளமான செய்திகள் இருக்கின்றன.

அவற்றைப் பதிவு செய்துகொள்வது, கடன் கொடுக்கும் நிறுவனங்களுக்கு அவசியம். இவர்களைப் பார்த்து, காப்பீடு, மற்றும் ஒரு சில வங்கிச் சேவைகளிலும் இந்த காசோலையைக் கேட்கிறார்கள். விபரங்களைத் தவறாக பதிவுசெய்துவிடாமல் இருப்பதற்காக, முன்னெச்சரிக்கையாக இப்படிச் செய்கிறார்கள்.

Комментарии

Информация по комментариям в разработке