MBA நுழைவுத்தேர்வு : ஈசியா ஜெயிக்கலாம் வாங்க | MBA Entrance Exam Tips

Описание к видео MBA நுழைவுத்தேர்வு : ஈசியா ஜெயிக்கலாம் வாங்க | MBA Entrance Exam Tips

#MBAExamTips #ExamPreperationTips

மேலாண்மை படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வுகள், அதில் வெற்றிபெறும் வழிமுறைகள் ( entrance exam tips for mba in tamil )குறித்து இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பெரும்பாலானோருக்கு ஒரு நல்ல தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அல்லது இதை கடினம் என்று உணர்ந்தால் ஒரு நல்ல நிறுவனத்திலாவது வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது அனைத்திற்கும் தொழிலை நிர்வகிக்கும் திறன் இருப்பது அவசியம். இந்த திறன்களை நீங்கள் தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனத்தில் தான் படித்து தெரிந்துகொள்ள முடியும். மேலாண்மை பொது நுழைவுத் தேர்வில் ( mba entrance exam in tamil ) வெற்றிபெறுவதற்கான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

மேலாண்மை படிப்பிற்காக பல வகையான நுழைவுத்தேர்வு உள்ளது. அதில் CAT, XAT மற்றும் GMAT மிக முக்கியமானது.

CAT தேர்வு :

CAT என்பது மேலாண்மை படிப்பிற்கான ( entrance test tips for mba in tamil ) தேசிய பொது நுழைவுத்தேர்வாகும். இந்த தேர்வை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் நடத்துறாங்க. இந்த தேர்வின் மூலம், 19 ஐ.ஐ.எம் மற்றும் 100 எம்.பி.ஏ கல்லூரிகளில் சேர முடியும்.

CAT தேர்வை அடிப்படையாக வைத்து தான் பல கல்லூரிகளில் எம்.பி.ஏ சேர்க்கை நடைபெறுகிறது. CAT தேர்வை எழுத பொதுப் பிரிவினர் 50%, தனி பிரிவினர் 45 % மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மூன்று பிரிவுகள் உள்ளது. இதற்கு மூன்று மணி நேரம் வழங்கப்படுகிறது. எனவே ஒரு பிரிவு கேள்விகளுக்கு ஒரு மணி நேரம் பயன்படுத்தவது நல்லது. சரியான விடைக்கு 3 மதிப்பெண்கள் அளிக்கப்படும். தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

XAT தேர்வு:

XAT தேர்வு என்பது சேவியர் ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகும். சேவியர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் இந்த தேர்வை நடத்துகிறது. இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது இறுதி ஆண்டு பயிலுபவர்கள் XAT தேர்வை எழுதலாம். ஆன்லைன் முறையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மூன்று மணி நேரம் கொடுக்கப்படுகிறது.


GMAT தேர்வு:

GMAT தேர்வு என்பது கிராஜுவேட் மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகும். GMAC என்ற நிறுவனத்தால் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. GMAT தேர்வு எழுத இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வை எழுத அதிகபட்ச வயதுவரம்பு எதுவும் கிடையாது. இத்தேர்வில் 4 பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். ஒட்டுமொத்த தேர்வுக்கான காலஅளவு 3 மணி 30 நிமிடங்கள் ஆகும். இந்த தேர்வுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது.

டாப் 3 எம்.பி.ஏ தேர்வு குறித்து இங்கே பார்த்தோம். இந்த தேர்வுகளுக்கு தயாராக ஓர் ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டு எடுத்துக்கொள்வது நல்லது உங்கள் திறன்களுக்கு ஏற்றாற்போல், நேரத்தை ஒதுக்கி தேர்வுக்கு படிப்பது சிறந்தது. இந்த தேர்வுகளில் ( mba exam tips in tamil ) நீங்கள் எடுத்த மதிப்பெண் சதவீதத்தை அடிப்படையாக வைத்து எம்.பி.ஏ கல்லூரிகளில் சீட் கிடைக்கும். தேர்வுக்கு பிறகு கல்லூரிகளில் சேர்க்கைக்கான நேர்காணல் நடைபெறும். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்

In this age, where competition is grown dramatically due to the multitude of students racing behind their dreams. Are you one among the students aspiring to start a business or be a part of a company? Here is an exciting episode in #ArrearIrundhalumCareer to brief about the different exams and patterns to help accomplish your burning ambition of becoming exceptional in Business Management.

Being an MBA graduate is extremely important to kick off your career and make giant strides in Business Management in our country. Having a BBA degree is insufficient as complete training is given in MBA. Most seats are allocated for students clearing the three main exams called; CAT, XAT and GMAT. Each of these exams works with different patterns and duration of the exam. However, the concept of these exams is based on testing the students quantitative, cognitive, verbal and analytical skills. Let's decode the three most important exam required for qualifying to an MBA admission.

CAT, which is the Common Aptitude Test conducted by one of the IIM's, is the toughest and smartest exam. CAT score is used by more than 100 universities. Any graduate with 40-50% graduate score can apply for the test. This is an online test conducted for 3 hours testing your verbal, quantitative reading comprehension and data interpretation skills. Be aware of the negative marks for every wrong answer.

Next in line is XAT, which is also a 3-hour test, analysing your logical, quantitative and general knowledge. Any graduate or final year student can apply for the test. This test also incurs negative marks for the wrong answers.

The last exam to be discussed is GMAT, that quizzes on quantitative, analytical, integrated reasoning and verbal reasoning. Any age group graduate can take up the test. The best part of this exam is that there is no negative marking.

To know more details about the pattern and exam paper split, watch the video!!

Комментарии

Информация по комментариям в разработке