தென்றலின் சேவகன் நான் | ரேணுகா செல்வம்| tamil audio novels | tamil novels audiobooks |romantic novel

Описание к видео தென்றலின் சேவகன் நான் | ரேணுகா செல்வம்| tamil audio novels | tamil novels audiobooks |romantic novel

   • தென்றலின் சேவகன் நான் | ரேணுகா செல்வம...  
ரேணுகா செல்வமின், "தென்றலின் சேவகன் நான் " RJ சுபீதா கண்ணனின் குரலில்....
நாயகன்: அபிஜித் சுல்தான்

நாயகி : இளந்தென்றல்

டீசர்:

சென்னை வடபழனி முருகன் கோவிலில் மணக்கோளத்தில் இருந்த பெண்ணின் அழகிற்கு பஞ்சமில்லை.. அழகை அவள் ஒருத்திக்கு மட்டும் என ஆண்டவன் குத்தகைக்கு விட்டு விட்டான் போல.. அழகும் அம்சமும் சேர்ந்து கொண்ட பெண்.. யாருக்கும் தீங்கு நினைக்காமல் முடிந்தவரை நன்மை செய்பவள்.. சிரித்த முகமாக வலம் வருபவள்.. ஆனால் அவளின் திருமணத்தில் சிரிக்க மறந்து இருப்பதற்கு என்ன காரணம் இருக்கும்?..

ஒருவேள காதல் தோல்வியா இருக்குமோ? ச்ச.. ச்ச.. இதுவரை ஒரு ஆண் நண்பர் கூட கிடையாதாம் கருத்துக்கணிப்பு அப்படி சொல்லுது.. அப்படி இருப்பவளுக்கு எங்கிருந்து காதல் வரப்போகிறது..

ஆமாம் திருமணம் என்றால் பெற்றோர்கள் அங்கும் இங்கும் பம்பரமாக சுற்றித்திரிவார்களே எங்கே அவர்கள்.. வானவேடிக்கை விண்ணை பிளக்குமே ஒன்றையும் காணவில்லை.. குட்டி குட்டி குழந்தைகள் தேவதை போல இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு சரசரத்துக் கொண்டிருக்குமே.. உற்றார் உறவினர் என்ற ஒரு தலைகள் கூட அங்கு தென்படவில்லை.. மொத்தத்தில் ஐயரையும் அழகுகளை நிபுணர் இருவரையும் தவிர அங்கு யாருமே இல்லை.. இது என்னடா கல்யாணம்..

சரியாக ஐந்து மணியை தொட இருந்த நேரம் கோவிலில் பட்டு வேட்டி சரசரக்க கம்பீரத்தின் மறு உருவமாய் முறுக்கேறிய ஆண்மை திமிருடன் வந்தான் ஒருவன்.. வேட்டியின் ஒரு முனையை கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவன் நடந்து வந்த தோரணை ராஜதோரனையாகத்தான் தெரிந்தது அங்கிருந்தவர்களின் கண்களுக்கு அவள் ஒருத்தியை தவிர..

அவன் அருகில் அழகான பேபி பிங்க் கலரில் லெகங்கா அணிந்து கொண்டு நடக்க முடியாமல் நடந்து வந்தாள் ஒரு யுவதி..

வந்தவனை பார்த்த மணமகள் கை கால் எல்லாம் உதற தொடங்கியது.. ஒரு பேலன்ஸ்காக அருகில் இருந்த தூணை பிடித்துக் கொண்டு அதன் மேல் சாய்ந்து நின்றாள்..

பின்னே அவன் பெயரை தமிழ்நாட்டில் கேட்டால் தமிழ்நாடேகதிகலங்கும்.. சென்னையில் முக்கிய புள்ளி அவனைத் தெரியாத யாருமே இருக்க முடியாது.. கருவில் இருக்கும் குழந்தை கூட அவன் பெயரைக் கேட்டால் நடுங்க தான் செய்யும்.. அப்பேர்பட்டவனுடன் திருமணம் என்றால் அவளும் என்னதான் செய்வாள்.. பயத்தில் இதயம் வெடித்து உயிர் போகாமல் இருப்பதே பெரிதாக இருந்தது அவளுக்கு..

அவள் அருகில் வந்தவன் அவளின் அனுமதி கூட கேட்காமல் அவளை இழுத்துக் கொண்டு சென்று ஐயரின் முன்பு நின்றான்..

ஐயர் "கடவுளை வேண்டிக்கோங்க தம்பி.." என்று அவர்களிடம் கூற.. அவனோ "தாலி எடுத்துக் கொடுக்கிறது மட்டும்தான் உன்னோட வேலை அதை மட்டும் எடுத்து கொடு" என்று சிம்ம குரலில் கர்ஜிக்க.. அவன் கர்ஜனையில் ஐயர் ஓடி சென்று தாலி எடுத்து வந்து விட்டார்.. பாவம் அவன் அருகில் இருந்த பெண் பாவைக்கு தான் உடல் வெடவெடக்க தொடங்கியது.. ஏதாவது அதிசயம் நிகழ்ந்து திருமணம் நின்று விடாதா என்று அவள் வேண்டாத தெய்வம் இல்லை... உள்ளிருக்கும் முருகனையும் சேர்த்து இத்தோடு மூவயிரம் முறை கும்பிட்டு இருப்பாள் பாவம் பலனளிக்காமல் போனது தான் அவள் விதியோ என்னமோ..

அவள் கண்களை மூடி திருமணத்தை நிறுத்த வேண்டி முடிப்பதற்குள் அவள் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சும் அவனே போட்டு தன் வாழ்வோடு அவளை இணைத்து விட்டான்..

கண்களைத் திறந்தவளுக்கு கண்முன்னே தன் நெஞ்சில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த தாலியை பார்க்க பார்க்க மனம் வெதும்பியது.. ஒரு கட்டத்திற்கு மேல் நடந்ததை ஜீரணிக்க முடியாமல் மயங்கியே சரிந்து விட்டாள் அவள் இளந்தென்றல்.. சரிந்து கீழே விழுந்தவளை அருவருப்புடன் ஒரு பார்வை பார்த்து அவளின் நுனி கூட தன் மேல் படாமல் தள்ளி நின்று கொண்டான்.. அவன் அபிஜித் சுல்தான்..

காதல், நட்பு, ஹாட் ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்து எனது பாணியில் உங்களுக்காக தென்றலின் சேவகன் நான்..

ஆன்டி ஹீரோ வகையை சேர்ந்த கதை.. சுல்தானுடனும் தென்றலுடனும் சேர்ந்து நாமும் பயணிப்போம்..



To read in kindle: https://amzn.in/d/fl6CG3S





#tamilaudionovels
#tamilnovels
#audiobooksintamil
#tamilaudiobooks
#tamilnovelsaudiobooks
#ramanichandrannovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovelsaudiobooks
#ramanichandrannovelaudiobook
#ramanichandrantamilnovelsaudiobook
#rcnovelsaudio
#tamilstories
#romantictamilnovels
#mohanamaninovels
#love&romancenovels
#divyashobananovels
#newtamilstory
#family
#audible
#tamilvoiceover
#lovenovels

Комментарии

Информация по комментариям в разработке