திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் | பஞ்சஆரண்யத்தலம் | Thirukkollampudur Siva Temple

Описание к видео திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் | பஞ்சஆரண்யத்தலம் | Thirukkollampudur Siva Temple

திருச்சிற்றம்பலம்

திருக்கொள்ளம்பூதூர் | வில்வனநாதர்| அழகு நாச்சியார்

பஞ்சாரண்யத் தலங்களுள் ஐந்தாவதான வில்வாரண்யம் எனப்படும்
இத்தலம் வில்வவனம் - கூவிளவனம் என்னும் சிறப்பினது. (கூவிளம் - வில்வம்) கூவிளம்புதூர் - கொள்ளம்புதூர் ஆயிற்று

இறைவன் - வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர். இறைவி - சௌந்தரநாயகி, அழகு நாச்சியார்.

தலமரம் - வில்வம்.

தீர்த்தம் - பிரமதீர்த்தம், அகத்திய தீர்த்தம் , முள்ளியாறு எனப்படும் வெட்டாறு முதலியன.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 113வது தலம்.

முல்லைவனமாகிய திருக்கருகாவூரில் உஷக் காலத்திலும் (காலை 5.30-6.30), பாதிரி வனமாகிய அவளிவ நல்லூரில் கால சந்தி காலத்திலும் ( காலை 8.30-9.30) , வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில்)   உச்சிக்காலத்திலும் ( காலை 11.30- 12.30) , பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில்) சாயரக்ஷையிலும் ( மாலை 5.00- 6.00) , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் ( இரவு 7.30 – 8.30 ) செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்

கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தெற்கே 25 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மீ. சென்று இத்திருத்தலத்தை அடையலாம்.

https://goo.gl/maps/eX2TDcMMs44g4LLx8

நடை திறப்பு: காலை: 7.00 - 10.00 மாலை: 5.30 - 8.30



இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன்.
உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம்.

அன்புடன்

சிவ.ஜவஹர்
☎️ 9551623296


#சிவ_ஜவஹர்
#Siva_Jawahar

இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.

Комментарии

Информация по комментариям в разработке