பாவம் போக்கும் பகவத் விநாயகர்
ஸ்ரீபகவத் விநாயகர், நவக்கிரகங்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளார். திருக்கோவி லில் பகவத் முனிவருக்கு சிலை உள்ளது.
கோவில் மாநகரம் என்று போற்றப்படும் கும்ப கோணம் மடத்து தெருவில் கோவில் கொண் டுள்ளார் ஸ்ரீபகவத் விநாயகர். இவர் ஆரம்ப காலத்தில் இக்கோவிலுக்கு அருகில் ஓடும் காவிரி நதிக்கரையில் ஓர் அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
அந்தக் கால கட்டத்தில் வேதாரண்யம் திருத்த லத்தில் பகவத் முனிவர் என்பவர் தன் சீடர்க ளுடன் வாழ்ந்து வந்தார். இவரின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் தருவா யில் தன்மகனிடம், "நான் இறந்ததும் என்னை தகனம் செய்த பின் அந்த அஸ்தியை ஒரு கலசத்தில் சேகரித்துப் புனிதத் திருத்தலங்க ளில் ஓடும் நதிக்கரைக்கு எடுத்துச்செல். எங் கு என்னுடைய அஸ்தி பூக்களாக மலர்கிற தோ அங்கு ஓடும் புனித நதியில் முறைப்படி கரைத்து விடு" என்று சொல்லி விட்டு உயிர் துறந்தார்.
அன்னை சொன்னதுபோல், தன் தாயாரின் அஸ்தியை ஒரு மண் கலசத்தில் சேகரித்து ஓர் ஓலைக் கூடைக்குள் பத்திரப்படுத்தி துணியால் மண் கலசத்தின் வாய்ப்பகுதியை மூடி, மூட்டையாகக் கட்டினார். பகவத் முனிவர், தன் சீடர்களில் ஒருவனை அழைத்துக் கொண்டு பயணமானார்.
புனிதத்திருத்தலம் காசியில் ஓடும் கங்கைக் கரையில் தான் தன் அன்னையின் அஸ்தி, பூக்களாக மலரும்' என்ற எண்ணத்தில் பயணத்தைத் தொடர்ந்தவர். வழியில் கும்பகோணம் தலத்திற்கு வந்ததும், அங்கு ஓடும் காவிரியில் நீராட விரும்பினார். தன் தாயின் அஸ்தி உள்ள கலசக் கூடையை, அங் கு அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பிள்ளை யார் முன்பு வைத்தவர். தன் சீடனைப் பார்த்து க் கொள்ளும்படி கூறிவிட்டு, காவிரியில் நீராட சென்றார்.
குருநாதர், காவிரியில் நீராடிக் கொண்டிருக்கு ம் போது, சீடனுக்குப் பசி எடுக்கவே, 'கூடையி ல் உள்ள மண் பாண்டத்தில் ஏதாவது பலகார ங்கள் இருக்கும்' என்றுஎண்ணியவன், அஸ்தி யுள்ள மண்பாண்டமான கலசத்தைத் திறந்து பார்த்தான். மண்கலசத்திற்குள் பூக்கள் நிறை ந்திருப் பதைக் கண்டு ஏமாற்றமடைந்தவன், மறுபடியும் முன்பு உள்ளது போல் மூட்டையை க்கட்டி பத்திரப்படுத்தி விட்டு, குருநாதருக்கா கக் காத்திருந்தான்.
நீராடிவிட்டு வந்த பகவத் முனிவர், விநாயகரு க்கு ஒரு கும்பிடுபோட்டு விட்டு மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.
சில நாட்களில் காசியை அடைந்த முனிவர், அங்கே ஓடும் புனித நதியான கங்கையில் நீராடி விட்டு, அஸ்தி கலசத்திற்குப் பூஜை செய்த பின், திறந்து பார்த்தார். அந்த மண் கலசத்திற்குள் எலும்பு மற்றும் சாம்பல் அப்படி யே இருந்ததால் என்ன செய்வதென்று யோசி த்தார்.
அப்போது, பக்கத்திலிருந்து பார்த்துக் கொண் டிருந்த சீடன் இந்த நிகழ்வுகளை அதிசயத்துட ன் பார்த்தான்' கும்பகோணத்தில் இந்தக் கலசத்திற்குள் இருந்த மலர்கள். இங்கே எப்படி அஸ்தியாக மாறியிருந்தது என்று குழம்பினான்.
பகவத் முனிவர் தனக்குள், "அஸ்தி மலர்களா க மாறும் என்று நினைத்தேன். அப்படியே இருக்கிறதே" என்று முணு முணுத்தார்.
முனிவரின் நிலையை அறிந்த சீடன். "குருவே, என்னை மன்னித்து விடுங்கள். இது அஸ்தி கலசம் என்று எனக்குத் தெரியாது. தாங்கள் கும்பகோணத்தில் காவிரியில் நீராடும் போது எனக்குப் பசி எடுக்கவே, மண் கலசத்திற்குள் ஏதாவது பலகாரங்கள் இருக்கும் என்று கலச த்தை மெதுவாக திறந்து பார்த்தேன். அப்போ து இந்தக் கலசத்திற்குள் பூக்கள் மலர்ந்து நிறைந்திருந்தன. இப்பொழுது, எலும்பும் சாம்பலுமாக அஸ்தி நிறைந் திருக்கிறதே. அது எப்படி என்று தெரியவில்லை?" என்றான் பயத்துடன். "இதை ஏன் அங்கேயே கூறவில் லை?" என்று கோபித்துக் கொண்ட முனிவர். மீண்டும் கும்பகோணம் நோக்கி பயணத்தை மேற்கொண்டார்.
கும்பகோணம் வந்தடைந்ததும், முன்பு நீராடி ய காவிரிக் கரைக்கு வந்து, காவிரியில் நீராடி, அங்கு அரசமரத்தடியில் எழுந்தருளியிருந்த விநாயகர் முன், அஸ்திக் கல்சத்தை வைத்துப் பூஜித்து விநாயகரை வேண்டினார். பிறகு, பயபக்தியுடன் கலசத்தைத் திறந்து பார்க்க அதிலிருந்த அஸ்தி, பூக்களாக மலர்த்திருந்த து கண்டு மகிழ்ந்தார்.
தன் அன்னைக்குச் செய்ய வேண்டிய பிதுர்காரியங்களை காவிரிக்கரையில் மேற்கொண்டு, பிதுர் பூஜைகள் செய்தபின், மலர்களாக மாறியிருந்த அஸ்திக் கலசத்தை காவிரியில் கரையச் செய்து மறுபடியும் வழிபாடு செய்தார் முனிவர்.
இதனால்தான் காசியைவிட மிக உயர்ந்தது கும்பகோணம் திருத்தலம் என்று பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
அஸ்தியானது பூக்களாக மாறிய காவிரிக் கரையே 'பகவத் படித்துறை' (பகவத் தீர்த்தம்) என்றும் முனிவர் வழிபட்ட விநாயகர், பகவத் விநாயகர் என்றும் போற்றப்படுகிறது.
அரசமரத்தடியிலிருந்த விநாயகருக்கு, அங்கு வசிக்கும் பக்தர்கள் உதவியுடன் காவிரிக் கரைக்கு அருகில் ஒரு கோவில் கட்டினார்.
அதுதான் இன்று மடத்துத் தெருவில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோவில் ஆகும்.
கும்பகோணம் மடத்துத் தெருவில் கிழக்கு திசை நோக்கி உள்ள இக்கோவில் ஆரம்ப காலத்தில் காவிரிப் படித்துறைக்கு அருகிலே யே இருந்தது. கால ஓட்டத்தில் காவிரி நதி குறுகி விட்டதால் தற்போது இக்கோவில் தனியாகவும், பகவத் படித்துறை தனியாகவும் உள்ளதைக் காணலாம்.
'இந்த ஸ்ரீபகவத் விநாயகர், நவக்கிரகங்களை த் தன்னுள் அடக்கி வைத்துள்ளார்' என்று தல புராணம் கூறுகிறது. இவர் சூரியனை நெற்றி யிலும், சந்திரனை தாபியிலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ் கை யிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ் கையிலும் சனியை வலது மேல்கை யிலும், ராகுவை இடது மேல்கையிலும், கேது வை இடது தொடையிலும் கொண்டு அருள் புரிகிறார்.
ஜாதகத்தில் தோஷம் உள்ளவர் இந்த விநாய கரை பூஜித்து வலம் வந்தால் நவக்கிரக தோஷம் நீங்கும். மேலும், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையும் போக்கி அருள்புரிவார் என் பது ஐதீகம்.
மிகவும் பழமையான கோவிலான இந்த ஆலயம் இன்று பலவித மாற்றங்கள் கொண்டு புதுமையாகத் திகழ்கிறது. இத்திருக்கோவிலில் பகவத் முனிவருக்கு சிலை உள்ளது.
விநாயகா போற்றி... விக்னேஸ்வரா போற்றி...
#spiritualjourney #ganesha #culturalcelebration
Информация по комментариям в разработке