Siva thathuvangal | சிவ தத்துவ இரகசியங்கள் | Vallalar | Sathiyadeepam Sivaguru | 36 thathuvangal

Описание к видео Siva thathuvangal | சிவ தத்துவ இரகசியங்கள் | Vallalar | Sathiyadeepam Sivaguru | 36 thathuvangal

சிவ தத்துவத்தை இப்படி எளிமையாக புரிந்து கொள்ளலாம். சுத்த மாயா தத்துவ இரகசியம். சிவ தத்துவ இரகசியம் 5.
சுத்த மாயையில் உள்ள சிவ தத்துவத்தைப் பற்றி பல பதிவுகளாக விரிவாகப் பார்த்து வந்தோம். அந்த சிவதத்துவத்தை இப்பொழுது சுருக்கமாகவும் எளிமையாகவும் இங்கு ஒரே பதிவில் பார்க்கப்போகின்றோம். மிக சுருக்கமாக புரிந்துகொண்டால் போதுமானது என்று கேட்பவர்களுக்கு சிவதத்துவத்தைப் பற்றிய இந்த ஒரு பதிவு போதுமானது. நாதம், விந்து, சதாசிவம், ஈஸ்வரம், சுத்த வித்தை. இந்த ஐந்தும் தான் சிவ தத்துவம் இந்த ஐந்தும் சுத்த மாயையில் இயங்கி நமக்கு காரண தேகத்தைப் பொருத்துகின்றது.

கலை முதலாம் ஓரேழும் நீக்கி அப்பால் மேவி விளங்கு சுத்த வித்தை முதல் நாத மட்டும் தாவிய வயங்கு சுத்த தத்துவத்தில் என்று நெஞ்சறிவுறுத்தல் பாடலில் பாடுவார் வள்ளற்பெருமான். திருவருட்பா ஆறாம் திருமுறையிலும் விடையவாதனை தீர்விடையவா சுத்த வித்தை முன் சிவவரை கடந்த நடையவா ஞான நடையவா என்று இந்த சிவ தத்துவங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார் வள்ளற்பெருமான். அருட்பெருஞ்ஜோதி அகவலிலும் சிவதத்துவம் ஐந்தில் உள்ள நவநிலைகளை சிருட்டித் தலைவர், காவல்செய் தலைவர், அழித்தல்செய் தலைவர், மறைத்திடு தலைவர், தெளிவு செய் தலைவர், விந்துவாம் சத்தி, நாதமாம் பிரமம் என்று குறிப்பிடுகின்றார் வள்ளற்பெருமான்.

Siva thathuvangal    • Siva thathuvangal  

96 thathuvangal :    • 96 thathuvangal  

வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம்    • வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான...  

#vallalar #vallalarspeech #sathiyadeepamsivaguru #vallalarsongs #sivaguru #Vadalur #sathiyadeepam

Комментарии

Информация по комментариям в разработке