173 - Eppo Varuvaro Endhan Kali Theera | Udayalur Dr Kalyanaraman | Alangudi Radhakalyanam 2020

Описание к видео 173 - Eppo Varuvaro Endhan Kali Theera | Udayalur Dr Kalyanaraman | Alangudi Radhakalyanam 2020

எப்ப வருவாரோ...ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதி - உடையாளூர் கல்யாணராம பாகவதர் - ஆலங்குடி ராதாகல்யாணம்

விருத்தம்:
புல்லாய்ப் பிறந்திருந்தாலும் மிருகாதி ஜனனங்கள் பசியாறி மகிழுமன்றோ
பூண்டாய்ப் பிறந்திருந்தாலும் புலத்தியர்கள் கொண்டுசில பிணிதீர்த்துப் மகிழ்வரன்றோ
கல்லாய்ப் பிறந்திருந்தாலும் இந்த நல்லவர்கள் மிதிகொண்டு காட்சிக் குறுத்து மன்றோ
கழுதையாய் பிறந்திருந்தாலும் ஆவெனக்கத்தினால் நல்ல சகுனமென்பர்
புல்லாய், பூண்டாய், கல்லாய் ஒரு கழுதையாய் இது
எல்லாமிலாமலே மனிதபிறவி தந்தெனை யேங்கவிட்டகலநின்றாய் அய்யனே தில்லை நகர்வாழ் அய்யனே
இன்னும் எத்தனை அன்னையோ இன்னும் எத்தனை தந்தையோ இன்னும் எத்தனை எத்தனை ஜன்மமோ இன்னும் எத்தனை பிறவிவருமோ
அல்லலெனு மாசறுத் தாட்கொளுந் தெய்வமே அப்பனே தில்லைநகர்வாழ்
அதிபதீ ஜனகாதி துதிபதி சிவகாமி அன்பிலுறை நடனபதியே !

பல்லவி:
எப்ப வருவாரோ எந்தன் கலிதீர (எப்ப)

அனுபல்லவி:
செப்பிய தில்லை சிதம்பரநாதன் (எப்ப)

சரணம்:
அற்ப சுக வாழ்வில்
ஆனந்தம் கொண்டேன்
பொற்பதத்தை காணேன்
பொன்னம்பல வாணன் (எப்ப)

பாலகிருஷ்ணன் போற்றி
பணிந்திடும் ஈசன்
மேலே காதல் கொண்டேன்
வெளிப்படக் காணேன் (எப்ப)

நாமாவளி:
ஆடிடும் பெருமான் நடனம் ஆடிடும் பெருமான்
கூடாதாரை கூட்டிவைத்து கூத்தாடும் பெருமான்
ஆடாதாரை ஆடவைத்து நடனம் ஆடும் பெருமான் (ஆடிடும் )

Комментарии

Информация по комментариям в разработке