கரிகால சோழனின் உண்மை வரலாறு | வீரத்தமிழர்கள்-1 | History of Karikala Cholan | SangathamizhanTV

Описание к видео கரிகால சோழனின் உண்மை வரலாறு | வீரத்தமிழர்கள்-1 | History of Karikala Cholan | SangathamizhanTV

கரிகால சோழனின் உண்மை வரலாறு | வீரத்தமிழர்கள்-1 | History of Karikala Cholan | SangathamizhanTV

கரிகால சோழனின் உண்மை வரலாறு:    • கரிகால சோழனின் உண்மை வரலாறு | வீரத்தம...  

கல்லணையை கட்டியது கரிகாலனா?:    • கல்லணையை கட்டியது கரிகாலனா? | வீரத்தம...  

இமயம்வரை வென்ற தமிழ்மன்னன் நெடுஞ்சேரலாதன்:    • இமயம்வரை வென்ற தமிழ்மன்னன் நெடுஞ்சேரல...  


வீரத்தமிழர் என்ற இந்த தொடரில் தமிழ் மன்னர்களின் வீரதீர வரலாற்றையும், அவர்களின் அறநெறி வாழ்வாயும் பற்றி விரிவாக பார்க்க போகிறோம். வீரத்தமிழர் தொடரின் முதல் பதிவில் ஆரிய மன்னர்களை வெற்றி பெற்று, இமயத்தில் புலிச்சின்னத்தை பொறித்த வீரமகன் கரிகால சோழனின் வீர வரலாற்றை பார்க்க போகிறோம்.
முற்காலச் சோழர்களில் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவர் கரிகால சோழர். இவர் மௌரியப் பேரரசின் விஸ்தரிப்பை தென்இந்தியாவில் தடுத்து நிறுத்திய மன்னர் இளஞ்செட்சென்னி மகன் ஆவார். மன்னர் கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பெயர்களும் உண்டு. சோழ அரசை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை கொண்ட பேரரசாக மாற்றிய பெருமை மன்னர் கரிகாலனையே சேரும்.

கரிகால சோழன் பற்றி சங்க இலக்கியங்கலில் நிறைய இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதாக வரக்கூடிய பொருநர் ஆற்றுப்படை சோழ மன்னர் கரிகால் வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர் பொருநர் ஆற்றுப்படையை இயற்றினார். பொருநர் ஆற்றுப்படை தவிர பட்டினப்பாலை, அகநானுறு மற்றும் புறநானுறு ஆகிய நூல்களிலும் கரிகால சோழன் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கரிகால சோழனை கொல்ல நினைத்த அவருடைய அரசியல் எதிரிகள் கரிகால சோழன் அடைக்கப்பட்டு இருந்த சிறைச்சாலைக்கு தீ வைத்தனர். அந்தத் தீயில் இருந்து தப்பிச் செல்லும் பொழுது கரிகால சோழனுடைய கால்கள் கருகின. இதன் காரணம் கொண்டு பின்னர் இவர் கரிகாலப் பெருவளன்தான் என்று அழைக்கப்பட்டார்.
கரிகால சோழன் சோழ அறியாசனத்தில் மன்னராக அமர்ந்து அவரது ஆட்சியை நன்றாக வேரூன்ற செய்வதற்கு முன்பே, கரிகால சோழனை தோற்கடித்து சோழ நாட்டை வெற்றி பெறும் நோக்கத்துடன் பாண்டிய மன்னரும் சேர மன்னரும் மற்றும் 11 குறுநில மன்னர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே அணியாக பெரும் படை கொண்டு சோழ நாட்டின் மீது போர் தொடுத்தார்கள்.
சங்ககால போர்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் இந்தப் போர் நடந்தது. அதிக படை பலம் கொண்டு கரிகால சோழனை எளிதாக போரில் வென்றிடலாம் என்று எண்ணி போர் தொடுத்து வந்த அத்துனை பேரையும் அவர்கள் பெரும் படையையும் கரிகால சோழன் நிர்முலமாக்கி போரில் வெற்றிவாகை சுடினார். இப்போரில் கரிகால சோழன் எய்த அம்பினால் மார்பிலிருந்து பின் முதுகு வரை துளைக்கப்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன், இது தனக்கு ஏற்பட்ட பெரும் அவமானம் எனக் கருதி வடக்கிருந்து உயிர் துறந்தார்.
சிலப்பதிகாரம் நூலின் மூலமாக கரிகால சோழனின் வடநாட்டுப் படையெடுப்புப் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். இமயம் வரை சென்ற கரிகால சோழன் வச்சிரம், மகதம், அவந்தி போன்ற நாடுகளை வென்றோ, அல்லது அந்த நாடுகளோடு உடன்பாடோ செய்து கொண்டதாத் தெரியவருகிறது. இது தவிர இலங்கையை வெற்றி கொண்ட சில மன்னர்களில் கரிகால சோழனும் ஒருவர்.

உதவிய நூல்கள்/இணையதளங்கள்:
1. வீரத்தமிழர் மா.இராசமாணிக்கனார்:
http://www.ulakaththamizh.in/book_all/21

2.சோழன் கரிகாற் பெருவளத்தான், L. உலகநாதப்பிள்ளை: http://www.tamilvu.org/library/nation....

3. கரிகால் வளவன் கி.வா.ஜகந்நாதன்: http://www.tamilvu.org/library/nation...

#SangathamizhanTV #Karikalan #KarikalaCholan #KarikalanHistory #Veerathamilar #TamilHistory #TamilPride #HistoryOfKarikalaCholan #கரிகாலசோழன் #பெருஞ்சேரலாதன் #வடக்கிருத்தல் #வெண்ணிப்பறந்தலை #இமயப்படையெடுப்பு #புலிச்சின்னம் #கரிகால்பெருவளத்தான் #சோழநாடு #மூவேந்தர் #சோழநாடுசோறுடைத்தநாடு

***************************************************************************************
Join this channel to get access to perks:
   / @sangathamizhantv  

For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV:    / @sangathamizhantv  

Email ID: [email protected]

Follow me on Telegram: http://t.me/sangathamizhanTV

Follow me on Facebook Page:   / changatamizhan  

Комментарии

Информация по комментариям в разработке