Download Audio MP3 Link:-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
https://paraparam.in/kaivalya-navanee...
கைவல்ய நவநீதம்
==================
(ஸ்ரீமத் தாண்டவராய சுவாமிகள்)
நூலின் சிறப்பு
^^^^^^^^^^^^^^^^^
இந்நூலில் முதன் முதலாக கவித்துவம் நிறைந்த பாயிரம் என்ற 7 பாடல்களும், தத்துவ விளக்கப்படலம் என்ற 101 பாடல்களும், சந்தேகம் தெளிதற் படலம் என்ற 185 பாடல்களும் சேர்ந்து, ஆக மொத்தம் 293 பாடல்கள் கொண்டதாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்நூலில் எழுசீர் ஆசிரியவிருத்தம் பத்து பாடல்கள் (231-240), எண்சீர் ஆசிரியவிருத்தம் பதினொன்று பாடல்கள் (123-133), அறுசீர் ஆசிரியவிருத்தம் 172 பாடல்கள் உள்ளன.
கைவல்ய நவநீதத்திற்கு தமிழில் பலர் விரிவுரைகள் எழுதி இருந்தாலும், பிறையாறு ஸ்ரீ அருணாசல சுவாமிகள், ஈசூர் ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் சிதம்பரம் ஸ்ரீ பொன்னம்பல ஞானதேசிகர் (தத்துவார்த்த தீபம்) ஆகியோரது உரைகளே மிக பழமையானது, காலத்தால் முற்பட்டது, கருத்தாழத்தால் மேம்பட்டது எனலாம்.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மஹாவித்வான் வடிவேலு செட்டியார், வினா விடை அமைப்பில், கைவல்ய நவநீதத்திற்கு விளக்க உரை எழுதிப் பதிப்பித்தார்.
1933 - ல், பிருஹ்மஸ்ரீ திருமாநிலையூர் கோவிந்தய்யர் அவர்கள்' தாத்பர்ய தீபிகை' என்னும் உரையை எழுதி, தமிழ் மூலத்துடன், சங்குகவிகளின் சமஸ்கிருத மொழிப் பெயர்ப்பையும், தன் உரையையும் ஒருங்கே பதிப்பித்தார்.
இந்த நூல் தமிழிலிருந்து திருக்குறளுக்கு அடுத்த படியாகப் பல்வேறு மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.
1855 இல் டாக்டர் கார்ல்க்ரோல் என்ற ஜெர்மானியரால் ஜெர்மனியிலும் ஆங்கிலத்திலும் மொழிப் பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.
கைவல்ய நவநீதத்திற்கான ஆங்கில உரைகளில், சுவாமி ஸ்ரீ ரமணானந்த சரஸ்வதிகளின் ஆங்கில உரை மேலானதாகக் கருதப்படுகின்றது.
கைவல்ய நவநீதம், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியால் சாதகர்க்குப் பரிந்துரைக்கப் பெற்றது.
நன்றி!
Ignore this:
#KaivalyaNavaneetham #AdvaitaVedanta #NonDuality #SelfRealization #Moksha #SpiritualAwakening #VedantaPhilosophy #Consciousness #Kaivalya #TamilScriptures #Brahman #InnerPeace #SpiritualJourney #SelfAwareness #enlightenment
Kaivalya Navaneetham, Advaita Vedanta, non-duality philosophy, Tamil scriptures on Vedanta, path to Kaivalya, moksha and liberation, self-realization techniques, Brahman realization in Vedanta, spiritual awakening through Advaita, essence of Kaivalya Navaneetham, non-dualism in Tamil texts, inner peace through Advaita, consciousness and enlightenment, liberation in Vedanta, Advaita practical teachings.
Информация по комментариям в разработке