#yttamil #patta #città #தாய்பத்திரம் #சார்பதிவாளர் #trendingnews #realestate
பட்டா நிலத்தின் அளவு பத்திரத்தில் இருக்கா? பத்திரப்பதிவில் அதிரடி! சார் பதிவாளர்களுக்கு புது உத்தரவு.
நில அளவு வேறுபாடு பிரச்சனைகளால், பத்திரப்பதிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. இதனால் பத்திரம் செய்யப்படாமல் திருப்பியனுப்பும் நிலைமையும் ஏற்படுகிறது.
இதுபோன்ற குறைகளை களைவதற்காக, சார் பதிவாளர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது என்ன? என்பதைப் பார்ப்போம்.
வீடு, மனை விற்பனை தொடர்பான பத்திரங்களிலுள்ள நில அளவு விபரங்களை, ஆன்லைன் முறையில் பட்டா மற்றும் வரைபடத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க, சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளதாம்.
ஒரு நிலத்தை, ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி, உங்களது பெயருக்கு மாற்றி கொள்வதற்காக தயாரிக்கப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்... இந்த கிரயப்பத்திரம், முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவதாகும்.
முத்திரை தாள்களில் நிலத்தின் விவரங்கள் எழுதப்பட்டு, சார் பதிவாளர் அலுவலகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது, கிரயப் பத்திர பதிவு எனப்படும்.. அந்த சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உள்ளிட்ட விவரங்கள், மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக எழுதியிருக்க வேண்டும்...
தாய் பத்திரத்தின் அடிப்படையில்தான், அடுத்தடுத்த கிரைய பத்திரங்களில் நிலத்தின் அளவு குறிப்பிடப்படும். சிலநேரங்களில் பத்திரத்திலுள்ள நில அளவு மாறுபடலாம்.. இதனால், பட்டா, நில அளவை வரைபடத்தில் அளவுகளும் மாறுபட்டு காணப்படும்.
ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவுக்கான, ஸ்டார் two point zero என்ற சாப்ட்வேருடன், "தமிழ்நிலம்" தகவல் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் நில அளவை தொடர்பான விபரங்களை அறியலாம். ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப்பட்டியல்கள் விபரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்யவும் இந்த செயலியில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
அந்தவகையில், பட்டாவில் உள்ள நிலத்தின் அளவு பத்திரத்தில் இருந்தால் மட்டுமே, பத்திரப்பதிவுக்கான டோக்கன் பெற முடியும். இதில் ஏதாவது சிக்கல் எழுந்தால், பத்திரங்களை பதிவு செய்யாமல் சார் பதிவாளர்கள் திருப்பி அனுப்பும் நிலைமை ஏற்படுகிறது.. எனவேதான், பதிவுக்கு வரும் பத்திரங்களிலுள்ள நில அளவுகளை, ஆன்லைன் முறையில் பட்டா மற்றும் நில அளவை வரைபடத்துடன், சார் பதிவாளர்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று சார் பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "நிலத்தின் அளவுகளில் வேறுபாடுகள் இருந்தால், பட்டாவிலுள்ள அளவுக்கு ஏற்ப, பத்திரத்தின் சொத்து விபரங்கள் பகுதியில் திருத்தங்கள் மேற்கொள்ள, சார் - பதிவாளர் பரிந்துரைக்கலாம்.. இதன் அடிப்படையில் பத்திரத்தில் திருத்தம் செய்து, விண்ணப்பதாரர் ஒப்புதலுடன் பதிவு செய்யலாம். இதனால், நில அளவு வேறுபாடு பிரச்சனையால், பத்திரப்பதிவு பாதிப்பதை தடுக்கலாம் என்று சார் பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
ஏற்கனவே, தமிழகத்தில் பட்டா மாறுதல், உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு போன்ற விபரங்களில் நிறைய பிழைகள் வருவதை களைய, தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது. அதனால்தான், நில அளவை பணியில் தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதுடன், சர்வே எண், அதன் உட்பிரிவு எண்ணுக்கு உட்பட்ட நிலத்தின் அளவை, துல்லியமாக குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலத்தின் அளவுகளில் வேறுபாடுகள் இருந்தால், பட்டாவிலுள்ள அளவுக்கு ஏற்ப, பத்திரத்தின் சொத்து விபரங்கள் பகுதியில் திருத்தங்கள் மேற்கொள்ள, சார் பதிவாளர் பரிந்துரைக்க உத்தரவிட்டுள்ளது, மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
இந்நிலையில் பத்திரப்பதிவு செய்யப் போவோர் ஒருமுறைக்கு இரண்டு முறை பட்டாவில் உள்ள விபரங்கள் எல்லாம் தாய் பத்திரத்தில் சரியாக இருக்கிறதாவென, கவணத்துடன் சரிபார்த்த பின்பு பத்திரப்பதிவுக்குப் போகவேண்டும் , அப்பொழுதுதான் எந்தப் பிரச்சனையுமின்றி பத்திரப்பதிவு செய்ய முடியும்.
Информация по комментариям в разработке