மந்த்ராலயம் சுற்றுலா: தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட, அற்புதங்கள் பல செய்த ஸ்ரீ ராகவேந்திரர்

Описание к видео மந்த்ராலயம் சுற்றுலா: தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட, அற்புதங்கள் பல செய்த ஸ்ரீ ராகவேந்திரர்

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது மந்த்ராலயம் நகரம். நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. துங்கபத்ரா நதிதான் மாநிலங்களின் எல்லைக்கோடாக இருக்கிறது.

ஆற்றுக்கு அக்கரையில் கர்நாடகா மாநிலம் உள்ளது. துங்கபத்ரா நதியில் ஐந்து கி.மீ. கிழக்கே சென்றால் தெலுங்கானா மாநிலம் வந்துவிடுகிறது. ஆக, மூன்று மாநிலங்கள் இணையும் இடத்தில் மந்த்ராலயம் இருப்பது ஒரு சிறப்புதான். இதன் பழைய பெயர் 'மன்ச்சாலே'.

மந்த்ராலயம் ஓர் அழகான ஆன்மிக நகரம். பக்திதான் அங்கு பிரதானம். அதற்கேற்ப அந்த நகரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நிறைய தங்கும் விடுதிகள். சாலையோர உணவகங்கள். பூஜைக்கான பொருட்கள் விற்கும் கடைகள், துணிக்கடைகள் என்று சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

அரசு ஆவணங்களின் படி மந்த்ராலயம் ஒரு கிராமம். கிட்டத்தட்ட 53 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அதுவொரு சிறிய நகரத்துக்கான வசதிகளைக் கொண்டிருக்கிறது. நகரத்தில் மைய சந்திப்பில் நான்கு பக்கங்களிலும் இருந்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் தரும் வகையில் நான்கு ராகவேந்திரா சுவாமிகள் தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் காட்சி நம்மை பரவசப்படுத்துகிறது.

அதற்கடுத்து பெரிய நுழைவுவாயில் ஒன்று இருக்கிறது. இந்த நுழைவுவாயில் அமைந்திருக்கும் சாலைதான் கோயில் செல்வதற்கான சாலை ன்பதற்கான அடையாளம். இந்த சாலையில் நடந்தால் சாலையின் இரு பக்கங்களிலும் ஏராளமான கடைகள் இருக்கின்றன.

மந்த்ராலயம் நகரத்தின் குன்றா புகழுக்கு குரு ராகவேந்திரா சுவாமியால் கட்டப்பட்ட பிருந்தாவனம் முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது. அதாவது தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட ராகவேந்திர சுவாமிகள், அந்த சமாதியான பிருந்தாவனத்துக்குள் சென்ற பிறகு தான் 700 ஆண்டுகள் அதனுள்ளேயே வாழ்வேன் என்று தன் பக்தர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி 350 ஆண்டுகள் கழித்துவிட்ட நிலையில், மேலும் 350 ஆண்டுகள் ராகவேந்திரர் அதில் வாழ்வார் என்று பக்தர்கள் நம்பி வருகின்றனர். இதன் காரணமாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மந்த்ராலயத்தை புனிதத் தன்மை வாய்ந்த நகரமாக கருதுகின்றனர்.

அதனைப்பற்றி விரிவாக இந்தக் காணொளியில் கூறப்பட்டுள்ளது.
#TravelsNext #mantralayam #tourism #mantralayamtemple #touristplace #sriraghvendra #சுற்றுலா

இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
https://www.thagaval360d.com

-----------------------------------------------------------------

Subscribe and hit the bell to see a new video
Subscribe here ► https://goo.gl/PWixWj

► SPS MEDIA: https://goo.gl/QNBEHC

► HEALTH & BEAUTY PLUS: https://goo.gl/UX1yQo

Facebook :   / travels-next-188384645139780  

Twitter :
  / senthilmsp  

-------------------------------------------------------------------

Комментарии

Информация по комментариям в разработке