மேற்கு பாக் அகதிகளும் ஜனநாயக கடமையாற்ற ஆர்வம் West Pakistan Refugees J&K Assembly Polls first time

Описание к видео மேற்கு பாக் அகதிகளும் ஜனநாயக கடமையாற்ற ஆர்வம் West Pakistan Refugees J&K Assembly Polls first time

#Partnership யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில்
சட்டசபை தேர்தல் வரும் 18, 25 மற்றும்
அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம்
90 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

2019ல் மோடி 2வதுமுறை
பிரதமர் ஆனதும்,
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்
370 and 35A ஆகிய பிரிவுகள்
ரத்து செய்யப்பட்டன.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல்
சட்டசபை தேர்தல்
இது என்பதால்
முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சட்டசபை தேர்தலில்
பாஜ, இண்டி கூட்டணி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த சட்டசபை தேர்தலுக்கு
இன்னொரு சிறப்பும் உண்டு.

அதாவது, காஷ்மீரில் வசிக்கும் வால்மீகி சமூகத்தினரும், மேற்கு பாகிஸ்தானை சேர்ந்த அகதிகளும் ஓட்டளிக்கும் முதல்
சட்டசபை தேர்தல் இதுவாகும்.

ஜம்மு காஷ்மீர் முழுவதும்
வால்மீகி சமூகத்தினர்
10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

இவர்களின் மூதாதையர் 1957ம் ஆண்டு பஞ்சாபில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு
அழைத்து வரப்பட்டனர்.

அப்போது காஷ்மீரில் ஒரு தொற்றுநோய் பரவியிருந்தது. துப்புரவு பணிகளை செய்ய முடியாமல் காஷ்மீர் மக்கள்
கஷ்டப்பட்டனர்.

அந்த சமயத்தில்
துப்புரவு பணிகளை செய்வதற்காக பஞ்சாபில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் வால்மீகி சமூகத்தினர்.

அரசாங்கம்தான் அவர்களை
அழைத்து வந்தது.
தொற்றுநோயை தடுக்க
தூய்மைப்பணியை
அவர்கள் செய்தபோதிலும் அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படவில்லை.

இதனால், ஓட்டுபோடுவது, அரசு வேலை வாய்ப்பு பெறுவது, மற்றும் தேர்தலில் போ்டடியிடுவது உள்ளிட்ட பல உரிமைகள் மறுக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் பல ஆண்டுகளாக வால்மீகி சமூகத்தினருக்கு கிடைக்கவில்லை. இரண்டாம் தர குடிமக்களாக
காஷ்மீரில் வாழ்ந்தனர்.

2019 ல் 370 மற்றும்
35 ஏ பிரிவை மத்திய அரசு ரத்து செய்த பிறகு வால்மீகி சமூகத்தினரின் நிலை அப்படியே தலைகீழாக மாறியது.

ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப் பிறகு,
வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 2020ல் இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டது.# #WestPakistanRefugees #JammuKashmir #AssemblyPolls #FirstTimeVoters #Valmikis #Article370 #Article35A #KashmirSpecialStatus

Комментарии

Информация по комментариям в разработке