Shiva Thandavam Song in Tamil | Manikandan | சிவ தாண்டவ பாடல் தமிழ் | மணிகண்டன்

Описание к видео Shiva Thandavam Song in Tamil | Manikandan | சிவ தாண்டவ பாடல் தமிழ் | மணிகண்டன்

Shiva Thandavam Song in Tamil | Manikandan | சிவ தாண்டவ பாடல் தமிழ் | மணிகண்டன்

கருப்பசாமி பாடல்:
   • Karuppa Neruppa | Manikandan | கருப்ப...  

பாதாள மாரியம்மன் பாடல்:
   • Paadhaala Maariyamma | Kudavasal | Ma...  

படபத்ர காளியம்மன் பாடல்:
   • Enga Padabathra Kaaliyamma | Kudavasa...  

ஐயப்பன் பாடல்:
   • Pamba Ganapathi Bhagavane | Ayyappan ...  

முருகன் பாடல்:
   • Kandha Velavaa | Murugan Song | Manik...  

சிவ தாண்டவ பாடல் Shorts Link:    • Shiva Thandavam Song in Tamil | Manik...  

Instagram: https://instagram.com/manikandankodav...

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வரிகள்
--------------------------------------------------------------------------------------

அடர்ந்த காடு போலவே
சடை முடியும் கொண்டவன்!
சுழன்று ஓடும் நாகம்தன்னை தலையிலே முடிந்தவன்!
"டம டம" என முழங்கும்
உடுக்கை சத்தம் கேட்டிட,
தாண்டவத்தை ஆடுவார்!
சிவனருளை புரியுவார்!!

சடை முடி நடுவிலே,
அலை வீசி ஆடும் கங்கையும்,
சுட்டெரிக்கும் நெருப்புடன் நெற்றிக்கண்ணை உடையவன்!
திங்கள் தன்னை சூடிக்கொண்டு தாண்டவத்தை ஆடிடும்,
ஆண்டவனே அருளுவாய்...
போற்றி! போற்றி!! போற்றியே!!!

மண்ணுலகின் உயிர்களை வாழ்த்தியருள் புரிபவன்!
மலையரசன் மகளினை
மணம் புரிந்த ஈசனே!
கடைக்கண் பார்வை வீசியே,
கவலைகளை நீக்குவாய்...
ஆடையாய் திசைகளையும்
அணிந்தவா போற்றியே!

என்னயாளும் இறைவனே!
எங்கும் நிறைந்த ஈசனே!
நாகம் தன்னை சூடியே,
நடமாடிடும் மகேசனே!
எட்டு திக்கும் நிறைந்தவா!
ஏழைகளுக்கு அருள வா!
மதயானை போலமர்ந்து
மனமகிழ் மகாசிவா!!

செங்கிளுவை தோழனான
நிலவதனை சூடினாய்!
சிவந்த நாகம் கொண்டு உந்தன்,
செஞ்சடையை கட்டினாய்!
அரியும் அயனும் இந்திராதி தேவர்களும் வணங்கிட,
சாம்பல் நிற பாதம் கொண்ட
சடைமுடியான் போற்றியே!

இளம்பிறையை தலையிலே
சூடியாடும் அழகனே!
எரிந்தழிந்து போனான், உன் கண்ணெருப்பில் காமனே!
தேவரெலாம் அனுதினம்
தொழுதிடும் நடேசனே!
உன் திருமுடியை பணிகிறோம்!
போற்றி! போற்றி!! போற்றியே!!!

மூன்று கண்கள் உடையவா! மூன்றாவது கண்ணிலே,
தகதகவென எரித்து நீ தகனம் செய்தாய் காமனை!
மலையமான் மகளையுன்
இடப்புறத்தில் கொண்டனை...
எந்தையே! எம் ஈசனே!
உந்தன் பாதம் போற்றியே!!!

பூமியை சுமந்தவா,
பிறையணி அழகனே!
பொன்னிறத்தில் மேனி கொண்ட
கங்கையணி சடையனே!
கார் முகில் நிறைந்த இரவின் நிறத்தில் கழுத்து கொண்டனே!
ஈஸ்வரா! மகேஸ்வரா!! போற்றி! போற்றி!! போற்றியே!!!

ஆலகால நஞ்சு தன்னை
உண்ட நீலகண்டனே!
தக்கன் வேள்வி அழித்தவா!
பற்றருக்கும் பரமனே!
அந்தகனும், கயாசுரனும்,
மாண்டதுந்தன் கையிலே!
காலனை உதைத்தவா!
கரம் தொழுதோம் போற்றியே!

திமி திமி திமி என
மத்தளங்கள் கொட்டிட,
அம்பலத்தில் ஆடிடும்
ஈசுவரா! மகேசுவரா!
நெருப்பை உமிழும் கண்ணினை, நெற்றியிலே உடையவா!
நீயணிந்த நாகமும்
தீமூச்சை உமிழுதே!

மக்கள் மன்னன் என்ற
பேதம் என்னை விட்டு போகவே, உன்
கமலம் போன்ற கண்களை
நேரில் நானும் காணவே!
எதிரி நண்பன் என்ற எண்ணம்
சிந்தையற்று போகவே,
எனக்கு நீ அருள வேண்டும்,
தில்லை ஆடும் நாதனே!

கங்கை நதியின் கரையிலே
என் பாவம் நீங்கி வாழவே,
கண்ணிமைக்கும் நொடியிலும் நமசிவாய சொல்லுவேன்.
மதி சூடி கதியருள, மகேசுவரா வருகவே!
சங்கடங்கள் போக்கிடும்,
சங்கரனே போற்றியே!!!

--------------------------------------------------------------------------------------

மணிகண்டன்
+91 7708079881

Комментарии

Информация по комментариям в разработке