உலகின் ஒரே அஷ்டமா சனி பரிகார தலம் | எட்டியதளி அகத்தீஸ்வரர் | உலகின் ஒரே சந்திர ஆவுடை சிவலிங்கம்

Описание к видео உலகின் ஒரே அஷ்டமா சனி பரிகார தலம் | எட்டியதளி அகத்தீஸ்வரர் | உலகின் ஒரே சந்திர ஆவுடை சிவலிங்கம்

எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்
சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து, 8 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில். இது 3000 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இக்கோவில் தொண்டை நாட்டு மன்னன் காளிங்கராயனால் கட்டப்பட்டது.

தலவரலாறு

ஒரு சமயம் அகஸ்திய முனிவர், காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, எட்டியத்தளி கிராமத்துக்கு வந்தார். அப்போது மன்னன் காளிங்கராயன் தனது அஷ்டம சனி தோஷம் நீங்க, திருநள்ளாறு சனி ஆலயம் செல்வதற்கு, இவ்வழியாக வந்தான். அகஸ்தியர், மன்னன் காளிங்கராயனிடம் இக்கோவிலை அமைக்கச் சொன்னார்.பின், நவகிரகங்களை அமைக்கச்சொன்னார். அதன் பின் காளிங்கராய மன்னன் இக்கோவிலை அமைத்ததாக இத்தல வரலாறு கூறுகிறது. திருநள்ளாறு சனிபகவானை விட இவர் அருள் வழங்குவதில் பலமடங்கு சக்தி மிக்கவர் என்று கூறப்படுகிறது. அதனால், இத்திருத்தலத்தில் சனி பகவானின் சக்தி இங்கு அதிகம்.

தலபெருமை

பொதுவாக, கோயில்களில் சனீஸ்வரருக்கு இடது புறம் ராகுவும், வலது புறம் கேதுவும் இருப்பார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். அதனால் ராகுவின் பார்வை சனி பகவானின் மீது படுகிறது. எனவே, இங்கு வந்து வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறதாம். மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும்.

கோயில் அர்ச்சகர் தொலைபேசி எண்

+91 9894930536

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

+91 7994347966

அமைவிடம்

அறந்தாங்கியில் இருந்து பேராவூரணி செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கோயில் Google map link

https://maps.app.goo.gl/WHYjyuRdha9qS...


if you want to support us via UPI id

9655896987@ibl

Join this channel to get access to perks:

   / @mathina  

Follow us on Instagram

https://instagram.com/aanmeegatudanna...

தமிழ்

Комментарии

Информация по комментариям в разработке