Pattabiram Tidel Park. பட்டாபிராம் தகவல் தொழில்நுட்ப பூங்கா

Описание к видео Pattabiram Tidel Park. பட்டாபிராம் தகவல் தொழில்நுட்ப பூங்கா

தமிழகத்தின் மூன்றாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா - பட்டாபிராம்
Tamilnadu's 3rd Tidel Park - Pattabiram

பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் தொடர்பான காணொளிக்கான லிங்க்
   • Pattabiram Rail over bridge work upda...  

இந்து கல்லூரி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ஈ டிப்போ புறநகர் தொடர்வண்டி பயணம் காணொளிக்கான லிங்க்
   • Hindu College to Pattabiram Military ...  
   • Pattabiram Military Siding E Depot to...  

Southern Structurals Limited பற்றிய தகவலுக்கான லிங்க்
https://www.google.com/url?sa=t&sourc...

https://www.google.com/url?sa=t&sourc...

தமிழகத்தின் மூன்றாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா பட்டாபிராம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இடம் சென்னைக்கு மேற்கு புறமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இந்த இடத்திற்கு அருகில் CTH சாலையும், இங்கிருந்து வெளிவட்ட சாலை 860மீ தூரத்திலும் இருப்பதால் பல்வேறு இடங்களில் இருந்து இந்த இடத்திற்கு ஒரு மணி நேரத்தில் வர முடியும். இங்கிருந்து பேருந்து நிலையம் அருகிலும், தொடர்வண்டி நிலையம் 900மீ தூரத்திலும், சென்னை விமான நிலையம் 30கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் 1 ஜூன் 2020ஆம் ஆண்டு காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது. இந்த புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவின் முதல் கட்டம் நிலத்தின் மதிப்பையும் சேர்த்து ரூ230 கோடி மதிப்பில் 10ஏக்கர் இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 21 தளங்களுடன் கூடிய அலுவலக கட்டிடத்தில் புதிய முயற்சியாக ஆகாய தோட்டம் 15லிருந்து 19வது தளம் வரையிலும், 12வது தளத்தில் உடற்பயிற்சி கூடம் மற்றும் உள்விளையாட்டு அறையும் வரவிருக்கிறது. பெரிய அளவிலான உணவக கட்டிடம் தனி கட்டிடமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் சுமார் 5000 பேர் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா வருவதற்கு முன் இந்த இடத்தில் Southern Structurals Limited என்ற தமிழக அரசு பொதுத்துறை நிறுவனம் இருந்தது. இங்கே தொழிற்சாலைகளுக்கு தேவையான பளு தூக்கும் இயந்திரம், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு தேவையான நிலக்கரி அள்ளும் இயந்திரம், அணைக்கட்டில் பயன்படுத்தப்படும் மதகுகள் மற்றும் நீர்மின் உற்பத்திக்கு தேவையான சாதனங்கள் தயாரிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் இந்தியன் ரயில்வேக்கு தேவையான சரக்கு பெட்டியின் மேல் பாகம் தயாரிக்கப்பட்டு அதோட கீழ் பாகத்துடன் இணைத்து பல்வேறு வகையான சரக்கு பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. 24 மணி நேரம் நன்றாக இயங்கிய இந்த நிறுவனம் தொடர் நஷ்டத்தில் இருந்ததால் 2003ஆம் ஆண்டு நிரந்தரமாக மூடப்பட்டது. பின்னர் இங்குள்ள மக்களின் கோரிக்கையின் காரணமாக நவம்பர் 2019ல் டெண்டர் விடப்பட்டு 1ஜூன் 2020ல் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது இந்த புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

Комментарии

Информация по комментариям в разработке