J.Krishnamurti - Freedom from the known ll ஜே.கிருஷ்ணமூர்த்தி :எது விடுதலை? ll பேரா.இரா.முரளி

Описание к видео J.Krishnamurti - Freedom from the known ll ஜே.கிருஷ்ணமூர்த்தி :எது விடுதலை? ll பேரா.இரா.முரளி

#jk,#freedom
1895ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மதனபள்ளியில் தெலுங்கு அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஜே.கே. தியாஸபி இயக்கத்தில் ஈடுபட்டு பெரும் புகழ் பெற்றார். அவரது உயரிய ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்பதே ஒரு அனுபவம் என்ற நிலையில் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் அவரது உரைகளைக் கேட்டுப் பயனுற்றனர்.
1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் நாள் அவர் மறைந்தார்.
90 வயது வாழ்ந்த அவரது நீண்ட வாழ்வில் அவர் எழுதிய நூல்கள் பல. ஆற்றிய உரைகள் பல. அவரது அனைத்துச் சொற்பொழிவுகள், எழுத்துக்கள் 17 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 1933 முதல் 1967 முடிய உள்ள காலகட்டத்தில் அடங்குபவை இவை.
இந்தப் பதினேழு தொகுதிகளும் சுமார் 5500 பக்கங்கள் கொண்டவை. ஜே.கே எழுதியவை 2412 நூல்களில் அடங்கும் என்றும் சுமார் 4580 வெளியீடுகளைக் கொண்டது என்றும் இவை 53 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிகிறது. 46822 நூலகங்களில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. அவரது படைப்புகள் சுமார் இரண்டு கோடி வார்த்தைகளை உள்ளடக்கியது. 75 புத்தகங்கள், 700 ஆடியோகேஸட், 1200 வீடியோ கேஸட் உள்ளிட்டவை இப்போது கிடைக்கின்றன. 2010இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின் படி 22 மொழிகளில் இவரது படைப்புகள் சுமார் 40 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இப்போது நிகழ்நிலை – ஆன் லைன் – மூலம் படிக்கவும் இவரது நூல்கள் கிடைக்கின்றன.
இவரது சிந்தனையால் கவரப்பட்ட அறிஞர்கள், கவிஞர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் மிக நீண்டது. இடம் கருதி சிலரை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.
George Bernard Shaw, Henry Miller, Anne Morrow Lindbergh, Alan Ginsburg, Federico Fellini, Khalil Gibran, Pandit Jawaharlal Nehru, Indira Gandhi, Erick Fromm, Prof. David Bohm, Charlie Chaplin, Greta Garbo, John Kenneth Galbraith, Svetlana (Stalin) Peters, Dalai Lama.
இவரது உரையைக் கேட்ட அல்டஸ் ஹக்ஸ்லி,”புத்தரின் உரையைக் கேட்பது போல இருக்கிறது. அப்படிப்பட்ட வலிமை, நுட்பம், அதிகாரபூர்வமான கருத்துக்கள்” என்றார்.
ச.நாகராஜன்

Комментарии

Информация по комментариям в разработке