நெஞ்சு சளி, நுரையீரலில் இறுகிப்போன நாள்பட்ட சளி நீங்க தூதுவளை துவையல் | Dr.Rajalakshmi | ASM INFO |

Описание к видео நெஞ்சு சளி, நுரையீரலில் இறுகிப்போன நாள்பட்ட சளி நீங்க தூதுவளை துவையல் | Dr.Rajalakshmi | ASM INFO |

#Siddhadoctor#asminfo#cold#ChestCold#coldremedy #சளி#

நெஞ்சு சளி நுரையீரலில் இறுகிப்போன நாள்பட்ட சளி நீங்க தூதுவளை துவையல் | Dr.Rajalakshmi | ASM INFO |

எண்ணற்ற மருத்துவ மூலிகைகளை கொண்ட நாடு நமது இந்திய நாடு. இந்த நாட்டில் தான் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பல மருத்துவ முறைகள் தோன்றியுள்ளன. இவற்றில் மருத்துவ சிகிச்சைக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது மூலிகைகள் ஆகும். அப்படியான மூலிகைகளில் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மூலிகையாக “தூதுவளை” இருக்கிறது. இங்கு தூதுவளை பயன்படுத்தி பெரும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தூதுவளை நன்மைகள் புற்று நோய் புற்றுநோய் ஒரு மிக கொடிய நோய். இந்நோய்க்கு ஆங்கில வழி மருந்துகளை உட்கொள்ளும் வேளையில் நமது பர்மாபரிய மூலிகையான தூதுவளையை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது. தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது என மருத்துவ ஆவிகள் மூலம் தெரிய வந்திருக்கின்றன.

ஜலதோஷம் உடல் அதிகம் குளிர்ச்சியடைவதால் ஜலதோஷம் ஏற்பட்டு இருமல், மூச்சிரைப்பு போன்றவை ஏற்படுகின்றன. தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிடுபவர்களுக்கு ஜலதோஷத்தால் ஏற்படும் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும் உடல் வலிமை பெறும்
ஆண்மை குறைபாடு தற்காலங்களில் ஆண்கள் பலருக்கும் நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டு, இல்லற வாழ்க்கையில் முழுமையான இன்பத்தை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இப்படிப்பட்டவர்கள் தூதுவளைக் கீரையை வாரத்திற்கு ஒரு முறையாவது சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். காய்ச்சல் ஜுரம், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவார்கள் தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் இருமல், ஜுரம், காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

சுவாச நோய்கள் மனிதனின் முறையான சுவாசத்தை பாதிக்கும் நோய்களாக இருப்பது ஆஸ்துமா, ஈசினோபிலியா போன்றவை இந்நோய்களை போக்க, இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக தயாரித்து காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய்கள் நீங்குவதோடு அந்நோய்கள் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தாகவும் செயல்படும். ஞாபக சக்தி வயது கூடிக்கொண்டே செல்லும் காலத்தில் பலருக்கும் ஞாபக திறன் குறைவது சகஜமான ஒன்றாகும். அனைத்து வயதினரும் தொடர்ந்து தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடையும். இது மூளையில் இருக்கும் செல்களை தூண்டி நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

பித்தம் உடலில் பித்தம் அதிகரிக்கும் போது சிலருக்கு தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும். உடலில் ஏற்படும் பித்த அதிகரிப்பை சரி செய்து அதை சமப்படுத்துவதில் தூதுவளை சிறப்பாக செயல்படுகிறது. தூதுவளை இலையை நன்கு பொடியாக்கி பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம், தலைவலி போன்றவை தீரும். ரத்த சோகை உடலில் இருக்கும் ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற ரத்த அணுக்கள் அவற்றிற்குண்டான அளவில் இருக்க வேண்டியது அவசியம். ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்கள் குறையும் பொது ரத்த சோகை ஏற்படுகிறது. இந்நோய் பிரச்சனை தீர தூதுவளை பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.

விஷ கடி நமது வீட்டிலும் அல்லது நமது வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டங்கள், புதர்களிலும் தேள், பூரான்,தேனீ, விஷ வண்டுகள் போன்றவை அதிகம் இருக்கின்றன. அவற்றினால் கடிபட்ட நபர்கள் உடனடியாக தூதுவளை இலை பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் மேற்கூறிய விஷ ஜந்துக்களின் கடியால் உடலில் பரவும் அவற்றின் விஷம் முறியும். நீரிழிவு நீரிழிவு ஏற்படும் சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருந்தாக தூதுவளை இருக்கிறது இது கசப்பு தன்மை அதிகம் கொண்டதால் சாப்பிட்டவுடன் சீக்கிரத்திலேயே செயல்புரிந்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவருகிறது. தூதுவளை இலை பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வெகு விரைவிலேயே நீரிழிவு கட்டுப்படும்.

Dr. Rajalakshmi BSMS
Traditinal Care Hospital
T.Nagar Chennai
7338886012 / 7338886014

Комментарии

Информация по комментариям в разработке