100 கிலோ எடை தாங்கும் பஞ்சாரம் | 5 வருட வாரண்டி | Pancharam | Chicken Nest | Hello Madurai | Tv |Fm

Описание к видео 100 கிலோ எடை தாங்கும் பஞ்சாரம் | 5 வருட வாரண்டி | Pancharam | Chicken Nest | Hello Madurai | Tv |Fm

பஞ்சாரத்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். 80களில் பிறந்தவர்களுக்கு இதுகுறித்து தெரியும். பஞ்சாரத்தில் ஒலிந்து விளையாடிய தலைமுறைகள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள். இன்றைக்கு போல் செல்போனில் தொலைந்து போகும் தலைமுறைகள் அல்ல. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பஞ்சாரம் நிச்சயமாக இருக்கும்.


கோழிகளுக்கு மட்டுமல்ல, ஆட்டுக் குட்டிகளுக்கும் பஞ்சாரம் மிக மிக முக்கியம். நானும் பஞ்சாரத்தில் ஒலிந்திருக்கின்றேன். அந்த காலம் என் கண் முன் இன்றும் நிழலாடுகிறது. இன்னும் சொல்லப்போனால் மழைக்கு கூட அதில் ஓடி ஒலிந்து நனைந்து ரசித்திருக்கின்றேன்.


இன்றைக்கு பஞ்சாரத்தை பார்ப்பதே அரிதாகிவிட்டது. பிளாஸ்டிக் உலகில், இதுபோன்ற இயற்கை பொருட்கள் கடல் கடந்து காசு பார்க்க மட்டுமே இங்கு தயார் செய்யப்படுகிறது. ஒரு சிலர் மட்டும் இன்றும் இதை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அவர்களின் தலைமுறைக்கு பிறகு, பண்ணைகளில் மட்டுமே இதை பார்க்க முடியும். அதேபோல் இதற்கு பதிலாக வேறு ஏதேனும் வந்துவிட்டால், இது மறையும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

அப்படிபட்ட பஞ்சாரத்தை கொட்டாம்பட்டி அருண் அவர்களை வீடியோ பதிவு செய்துவிட்டு வரும் வழியில் பார்த்தோம். கேமரா தம்பி அண்ணே இதை எடுத்தே ஆகணும் என்று கூற, விடுவோமா, பேட்டரியில் சார்ஜ் இல்லாத காரத்தால் நாளை வரலாமா என்று கேட்டோம். சுப்பையா மரக்கடையின் உரிமையாளர் ஜெயராஜ் மறுக்காமல் வாங்க சார் என்றார்.

அதேபோல் மறுநாள் (15..07.2021) சென்று, பஞ்சாரம் குறித்து பேட்டி எடுத்தோம். நிறைய கூடுதல் தகவல்கள் நமக்கு கிடைத்தது. அது புதிதாகவும் இருந்தது. யூக்கப்லிப்டப்ஸ் மரக்கிளையில் செய்யப்படும் பஞ்சாரம் 100 கிலோ வரை தாங்கும் என்று, அவரும், நானும் நின்று பார்த்தோம். அசாலட்டாக தாங்கியது. மற்ற தகவல்களை எல்லாம் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அழகழகாய் அடுக்கி வைத்திருந்த பஞ்சாரத்தை குட்டி ஆடுபோல் அங்கும் இங்கும் பார்த்தபடியும், ஒரு கோழியைப் போல் உள்ளே போக ஆசைப்பட்டும், பேட்டியை எடுத்து முடித்தோம். சுப்பையா மரக்கடையின் உரிமையாளர் ஜெயராஜ் மிக அருமையாக பேசினார்.


இந்த பதிவை முடித்துக் கொண்டு, அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் தருமபுரியில் இருந்து ஊர் ஊராக கின்னிக்கோழி, வான்கோழுி, ஃபனே்சி கோழி ஆகியை போட்டு விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை எடுக்கச் சென்றோம். அவர்களும் நம்மை இவர்கள்போல் நாளை வாருங்கள் என்றனர்.

நாம் போய் பார்க்குமு் போது அந்த இடம் காலி செய்யப்பட்டிருந்தது. எங்களுக்கு கொடுத்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோம். பதில் வரவில்லை. அதன் பிறகு ஒரு தேனீர் அருந்திவிட்டு, மேலூரை விட்டு கிளம்பி மதுரை வந்தடைந்தோம்.

சுப்பையா மரக்கடையின் உரிமையாளர் ஜெயராஜ் தொடர்பு எண்: 9566256619.


நாளை வேறு ஒரு பயண அனுபவத்தில் சந்திக்கின்றேன். காலை 5 மணிக்கு புறப்பட வேண்டும், இப்பொழுது மணி இரவி 11.22 ஆகிவிட்டது.


நன்றிகள். மீண்டும் சந்திப்போம்.



________________________________________________________

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

💓 App Link: https://play.google.com/store/apps/de...

💓 Facebook :  / maduraivideo  

💓web site : https://hellomaduraitv.com/

💓web site : https://hellomadurai.in/

💓web site : https://tamilvivasayam.com/

💓 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

Комментарии

Информация по комментариям в разработке