2024 Pournami Days I Purnima Tithi in 2024 I I பௌர்ணமி திதிகள்

Описание к видео 2024 Pournami Days I Purnima Tithi in 2024 I I பௌர்ணமி திதிகள்

பவுர்ணமி தினத்தில் அம்பிகை வழிபாடு செய்தால் அம்பிகையின் பரிபூரண அருளைப் பெறலாம் மற்றும் குலதெய்வத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம் இதே நாளில் விரதம் இருந்து வழிபட்டால் ஆயுள் பலம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், கல்வி மேன்மை உள்ளிட்டவை கிடைக்கும் என நம்பப்படுகிறது,தமிழ் மாதத்தில் வரக்கூடிய அனைத்து பவுர்ணமிகளும் சிறப்பான பவுர்ணமி தான்.முழுமையான நிலவு ஒளி பிரகாசத்தோடு பூமியைத் தொடும் இந்த நல்ல நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் பல பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது நம்முடைய வினைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப வழிபாடு செய்து வந்தால் மேன்மை கிடைக்கும் .

1 சித்ரா பவுர்ணமி நாளில் விரதம் இருந்தால் தானிய பலன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது

சித்ரா பௌர்ணமியை சித்திரையின் முழு நிலவு நாளில் கொண்டாடுவார்கள். இந்தாண்டு செவ்வாய், ஏப்ரல் 23, 2024 காலை 04.21 முதல் ஏப்ரல் 24ம் தேதி காலை 05.54 வரை, சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து சித்ரகுப்தர் வழிபாடு செய்யவேண்டும்

2 வைகாசி பவுர்ணமி அன்று வழிபட்டால் திருமணம் கைகூடும் எனக் கூறப்படுகிறது

இந்தாண்டு மே 22ம் தேதி இரவு 07.14 முதல் மே 23ம் தேதி இரவு 07.48 வரை,மே 23, 2024, வியாழன் வரை,வைகாசி பௌர்ணமி அன்று விரதம் இருந்து முருக பெருமானை மனமுருகி வேண்டி விரதமிருந்தால் குறைகள் நீங்கி மகிழ்ச்சி செழிக்கும்

3 ஆனி பவுர்ணமி தினத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும்

இந்தாண்டு ஜூன் 21 வெள்ளி காலை 07.45 முதல் ஜூன் 22ம் தேதி காலை 07.19ம் தேதி வரை ஆனி பௌர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மாங்கல்ய பலம், ஐஸ்வரியம், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை

4 ஆடி பவுர்ணமி தினத்தன்று விளக்கேற்று வழிபட்டால் அனைத்து வளமும் கிடைக்கும்

இந்தாண்டு ஜூலை 20ம் தேதி மாலை 06.10 முதல் ஜூலை 21ம் தேதி மாலை 04.51 ஜூலை 21 ஞாயிறு வரை,ஆடிப்பவுர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்ட பிறகு நைவேத்தியப் பிரசாதத்தையும், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றையும் கோவிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினால் மிக அற்புதமான பலன்களைக் கொடுக்கும்.

5 ஆவணி பவுர்ணமி தினத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும்

இந்தாண்டு ஆகஸ்ட் 19 திங்கள் அதிகாலை 03.07 முதல் ஆகஸ்ட் 20ம் தேதி அதிகாலை 01.09 வரை,ஆவணி பெளர்ணமி நாளில் ஆதி பராசக்தி 16 வடிவங்களில் மகா திரிபுரசுந்தரியாக அருள்பாலிப்பதாக ஐதீகம். அதனால் பெளர்ணமி நாளில் அம்பிகையை வழிபட்டால் கிரக தோஷங்கள் விலகும். பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றையும் நீக்கக் கூடியதாகும்

6 புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்

இந்தாண்டு செப்டம்பர் 17 செவ்வாய் காலை 11.22 முதல் செப்டம்பர் 18ம் தேதி காலை 09.10 வரை,புரட்டாசி பவுர்ணமி அன்று உமாமஹேஸ்வர விரதம். அன்று பார்வதி பரமேஸ்வரர்களை விரதம் இருந்து பூஜிப்பதால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது சிவ ரகசியம் மற்றும் குலதெய்வத்தையும், பெருமாளையும் மனதார வழிபட்டு, பிரார்த்தனை செய்து வந்தால் மகத்தான பலன்களை பெறலாம்


7 ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று வழிபட்டால் பசி, பிணிகள் போகும்

இந்தாண்டு அக்டோபர் 16ம் தேதி இரவு 07.56 முதல் அக்டோபர் 17ம் தேதி மாலை 05.25 அக்டோபர் 17 வியாழன் வரை, ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால் சொர்க்கத்திற்கு போகும் வரை உணவு கிடைக்கும் என்பது நம்பிக்கை


8 கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று விளக்கேற்றினால் புகழின் உச்சத்திற்குச் செல்லலாம்

இந்தாண்டு நவம்பர் 15 வெள்ளி அதிகாலை 03.53 முதல் நவம்பர் 16ம் தேதி அதிகாலை 03.42 வரை,கார்த்திகை மாத பௌர்ணமி நன்னாளில் கார்த்திகை நட்சத்திரமும் கூடி வரும் திருநாளில் முருகனை வழிபடுவது சிறப்பான பலன்களை அளிக்கும் என்பர்

9 மார்கழி பௌர்ணமி தினத்தன்று விளக்கேற்றி வழிபட்டால் உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்

இந்தாண்டு டிசம்பர் 14ம் தேதி மாலை 04.17 முதல் டிசம்பர் 15ம் தேதி மாலை 03.13 வரை,மார்கழி பௌர்ணமி நன்னாளில் துர்க்கைக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, கதம்ப மாலை அணிவித்து, மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து, பழங்களை நிவேதனம் வைத்து வழிபட பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். தடைபட்ட வீடு கட்டும் பணிகள் சிறப்பாக நடைபெறும். வாழ்வில் சகல வளங்களும் பெறுவார்கள்


10 தை பௌர்ணமி தினத்தன்று விளக்கேற்றி வழிபட்டால் நன்மைகள் அதிகரித்து வளம் பெறலாம்

இந்தாண்டு ஜனவரி 24ம் தேதி இரவு 10.44 முதல் ஜனவரி 25ம் தேதி இரவு 11.56 வரை,தை மாதத்தில் வரும் பௌர்ணமி பூச நட்சத்திரத்தன்று நிகழும். மதுரையிலும், பழனியிலும் மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்படுகிறது

11 மாசி பௌர்ணமி அன்று விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும்

இந்தாண்டு பிப்ரவரி 23ம் தேதி மாலை 04.55 முதல் பிப்ரவரி 24ம் தேதி மாலை 06.51 வரை,மாசி மாதம் பெளர்ணமி அன்று புனிதத் தலங்களில் நீராடி சிவனை தரிசிப்பது சர்வ பாவங்களையும் போக்கும்

12 பங்குனி பௌர்ணமி தினத்தன்று வழிபட்டு விரதம் இருந்து தர்மம் செய்தல் நல்ல பலன்கள் கிடைக்கும்

இந்தாண்டு மார்ச் 24 ஞாயிறு காலை 11.17 முதல் மார்ச் 25 ம் தேதி பகல் 01.16 வரை,பங்குனி பவுர்ணமி தினத்தில் குலதெய்வ வழிபாட்டை செய்து குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால், இரட்டிப்பு பலனை பெறலாம்.


வரும் பிப்ரவரி 1ம் தேதி மாசி மாத பௌர்ணமியின் சிறப்பு வீடியோ உங்களுக்காக விரிவாக போடப்படும்




#MasiMagam2024#MaasiMagam #masimagamintamil #masimagam2024 #maasimagamdate2024
#masimagam#masimagamfestival#maasimagam #whenismasimagam2024#masimagam2024date #magamnatchathiramintamil#masimagam2024tamil #maasimagam2024#masimagambenefitsintamil #magam2024
#2024மாசிமகம் #whenismasimagamin2024 #masimagam #masimagam2024#masimagam2024date

Комментарии

Информация по комментариям в разработке