கேள்வி-பதில் | 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும் பலா கன்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது | திரு.ஹரிதாஸ்

Описание к видео கேள்வி-பதில் | 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும் பலா கன்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது | திரு.ஹரிதாஸ்

"தமிழ்நாட்டின் அடையாளம் புகழ்பெற்ற பண்ணுருட்டி பலா " Jackfruit Festival held at pathirakottai Panruti (Cuddalore)

களை கட்டிய பண்ணுருட்டி பலா பழ திருவிழா 2022

விதையிலிருந்து அறுவடை வரை பலாப்பழம் வளர்ப்பது எப்படி

புகழ்பெற்ற பண்ணுருட்டி பலாவின் சிறப்புகளை அறிந்து கொள்ளவும், பலாவினுடைய இலை, பிஞ்சு, காய், பழம், பழத்தின் ஈக்கு, சுளை, கொட்டை, தொப்புள், மரம் இவைகளை மதிப்புக்கூட்டுதல் செய்து சந்தைப்படுத்தி வருமானத்தை பன்மடங்காகப் பெருக்கிய பலாப்பழ ஆராய்ச்சியாளர், மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (ஓய்வு) திரு. அ.பெ.ஹரிதாஸ் அவர்களின் பட்டறிவு பகிரும் நிகழ்ச்சி கடலூர் மாவட்டம்,பண்ணுருட்டி பத்திரக்கோட்டை விஜயா பயோ பார்ம் & நர்சரியில் நடைபெற்றது.

பலாவில் பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் கண்காட்சி, விற்பனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கட்டணமில்லாமல் வழங்கப்பட்ட உணவுகள்
▪️பலாச்சுளை சாறு
▪️பலாச்சுளை
▪️பலா இலை பற்பொடி
▪️பலா வத்தல்
▪️பலா பஜ்ஜி
▪️பலா கொட்டை அவியல்
▪️பலா சுளை பிரியாணி

மேலும் விற்பனைக்கு
▪️பலாச்சுளை அல்வா
▪️பலாச்சுளை ஐஸ்கிரீம்
▪️பலா கன்றுகள்
▪️இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மரபு அரிசி, அவல் வகைகள், நாட்டு சர்க்கரை, மரசெக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், தின்பண்டங்கள், நாட்டு காய்கறி, கீரை விதைகள் கிடைக்கும். சூழலுக்கு உகந்த பல்வேறு வடிவங்களில் கருத்துக்களைத் தாங்கிய துணிப்பைகள் விற்பனைக்கு கிடைத்தது .

மேற்கூறிய அனைத்துடன் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிற சுளைகளை உடைய பலாப் பழங்களைக் கொண்ட 100 வகை அரிய பலா மரங்களை ஒரே இடத்தில் காட்சி படுத்தப்பட்டது . ஐம்பதிற்கும் மேற்பட்ட பலாவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பு:
விஜயா பயோ பார்ம் & நர்சரி.
தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம்.

தொடர்புக்கு: ஹரிதாஸ் 9443074620,
சிவகுமார் 8870890109

Комментарии

Информация по комментариям в разработке