மாதேஸ்வரன் கோவில் /matheswaran temple

Описание к видео மாதேஸ்வரன் கோவில் /matheswaran temple

மலை மாதேஸ்வரன் கோயிலுக்கு மைசூரிலிருந்து 150கீ.மீ மற்றும் பெங்களுரிலிருந்து 210கி.மீ தூரம் இருக்கிறது. ஸ்ரீ மலை மாதேஸ்வரன் கோயில் மிகவும் பிரபலமான பாரம்பரியமிக்க திருத்தலம். கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து நிறைய திருப்பயணிகள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள். இந்த திருத்தலத்தின் பரப்பளவு 155.57 ஏக்கர் ஆகும்
50 வருடத்திற்கு முன்பு இந்த மலைக்குச் சாலை வசதி இல்லை. அதனால் இங்கே வரும் பக்தர்கள் பெரும்பாலும் நடந்து தான் வந்தார்கள். ஆனால் இப்போது சாலைகள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளால் போடப்பட்டுள்ளது. அதனால் இப்போது அந்த வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன.
சேலத்திலிருந்து மேட்டூர், ஒரு மணிநேரப் பயணம். மேட்டூரிலிருந்து மூலக்காடு, கொளத்தூர், கோவிந்தப்பாடி வழியாக சுமார் 60 கிமீ தொலைவு. கோவிந்தப்பாடியிலிருந்து துவங்கும் மலைப்பாதையில் மொத்தமாக 18 கொண்டை ஊசி வளைவுகள்

Комментарии

Информация по комментариям в разработке