ஸ்ரீ காலா பைரவர் த்யானம் | Sri Kala Bhairavar Dhynam - Kala Bhairavar | Sri Ashta Bhairavar

Описание к видео ஸ்ரீ காலா பைரவர் த்யானம் | Sri Kala Bhairavar Dhynam - Kala Bhairavar | Sri Ashta Bhairavar

Sri Kala Bhairavanai Dhynam - Kala Bhairavar | Album : Sri Ashta Bhairavar | Singer : S P Balasubramaniam | Lyrics : S P Devarajan | Music : Veeramani Kannan | Tamil Devotional Song | Amutham Music

ஸ்ரீ காலா பைரவனை த்யானம் - காலா பைரவர் | இசைத்தொகுப்பு : ஸ்ரீ அஷ்ட பைரவர் | குரலிசை : S P பாலசுப்ரமணியம் | கவியாக்கம் : S P தேவராஜன் | இசை : வீரமணி கண்ணன் | தமிழ் பக்தி பாடல் | அமுதம் மியூசிக்

பாடல் வரிகள் :

ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே டங்கேஷாய தீமஹி
தன்னோ குருபைரவ ப்ரசோதயாத்

ஸ்ரீ கால பைரவனை தியானம் செய்யும் மந்திரத்தை
நாவில் நாளும் சொல்லி சொல்லி வாருமே

பின் நடப்பதை தான் கண்ணெதிரில் பாருமே

வாராத செல்வம் வரும் வறுமையெல்லாம் நீங்கிவிடும்
வாயார பாடிடலாம் நாமமே

வந்து சேரும் பாரு லோக ஷேமமே

கால பைரவா சம்ஹார பைரவா
சண்ட பைரவா ஸ்ரீ குரோத பைரவா

நவகிரஹங்கள் நலம் கொடுக்கும் நல்ல குழந்தை பேரளிக்கும்
பதுமை நீங்கும் வில்வார்ச்சனை செய்யலாம்

தீபம் தேய்பிறை நாள் அஷ்டமியில் ஏத்தலாம்

நல்லெண்ணெய் விளக்கேற்ற தொலைந்ததெல்லாம் கிடைக்கும்
நவகோள் மனம் மகிழ்ந்து நாளும் துணை இருக்கும்

பைரவரை தியானம் செய்து வாருங்கள்
அவன் பாதம் மேலே அரளி வில்வம் சேருங்கள்

ஸ்ரீ கால பைரவனை மனது உருகி வேண்டிட
சகல தோஷம் யாவும் பறந்தோடுமே

வலிதாயம் போயி சேரு வைரன்பட்டி கோயில் பாரு
க்ஷேத்ரபாலபுரத்தில் அவன் அருள்வான்

எழில் சேர்ந்த மங்களத்தை அவன் ஆளுவான்

கரிநாள் என்றாலும் கைமேல் பலன் தருவான்
கருணைக் கடலாக நாயுடன் வலம் வருவான்

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.
பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.

Music Streming & Download (Apple Music) :   / sri-ashta-bhairavar  
Amazon Music : https://music.amazon.in/albums/B008C7...
Google Play : https://play.google.com/store/music/a...
Spotyfy : https://open.spotify.com/album/1dEIEG...
Wynk : https://wynk.in/music/album/sri-ashta...
Jiosaavan :https://www.jiosaavn.com/album/sri-as...

#Amuthammusic#Sriashtabhairavar#spbalasubramaniyam#veeramanikannan#vaarasri#bhiravarsongs
For More Videos :    / amuthammusic  
:    / @sudharagunathan-thesoulsmusic  
:   / amuthammusicsanskritseries  
Facebook :   / amuthammusicofficial  
ourwebsite : www.amuthammusic.com

Комментарии

Информация по комментариям в разработке