புங்குடுதீவு மக்களின் வருகை | யாழ்ப்பாணத்தில் ஏற்படும் மாற்றம் |

Описание к видео புங்குடுதீவு மக்களின் வருகை | யாழ்ப்பாணத்தில் ஏற்படும் மாற்றம் |

புங்குடுதீவு மக்களின் வருகை | யாழ்ப்பாணத்தில் ஏற்படும் மாற்றம் | #JaffnaVlog | #ChummaOruTrip

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள வளம் கொழிக்கும் ஒரு பூமியாக தீவகத்தின் புங்குடுதீவு விளங்குகிறது.

புலம்பெயர்ந்து வாழும் அதிக மக்களைக் கொண்டு விளங்கும் தீவகத்தில் ஏனைய ஊர்களைப் போலவே புங்குடுதீவு மண்ணின் மாந்தர்கள் பலரும் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் புங்குடுதீவு மண்ணின் மாந்தர்கள் தங்கள் மண்ணின் கல்வி, கலாசார மற்றும் அபிவிருத்தி செயற்றிட்டங்களில் அதிக கவனம் எடுப்பதன் மூலம் தமது மண்ணை வளம்பெறச் செய்யப் பாடுபடுகின்றனர்.

தமிழர்கள் வழிபாடுகள், நம்பிக்கைகளின் அடிப்படையில் தமது வாழ்வியலைக் கட்டமைத்துக்கொண்டவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, புங்குடுதீவில் அதிகமான பிரசித்தி பெற்ற ஆலயங்கள் காணபடுகின்றன.

அவ்வாறான ஆலயங்களில், மிகவும் புகழ் பூத்த ஒரு ஆலயம் புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலயம்.
இவ்வாலயம், புங்குடுதீவு மட்டுமன்றி இலங்கையின் பிரசித்திபெற்ற மத அடையாளமாக திகழும் வகையில், புனருத்தானம் செய்யப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது.

ஐந்து ராஜகோபுரம் மற்றும் ஐநூறு தூண்கள் என பிரமாண்டமாக உருவாகும் கண்ணகியம்மன் கோவிலின் அபிவிருத்திக்காக புங்குடுதீவு மாந்தர்கள் தம் உழைப்பின் பெரும்பகுதியை வழங்கியிருக்கிறார்கள்.

இத்தனை சிறப்பு வாய்ந்த புங்குடுதீவு மண்ணின் பல பெருமைகள் குறித்தும் அங்கு இன்னும் நிலவி வரும் பல அடிப்படை வசதிகளுக்கான தேவைகள் குறித்தும் இக்காணொளி கவனம் செலுத்துகின்றது.

வரலாற்றுப் பெருமைகள் பொதிந்து கிடக்கும் இலங்கையின் பல பகுதிகள் மற்றும் அடையாளங்கள் குறித்து #ChummaOruTrip தொடர்ச்சியாக பேசிக்கொண்டேயிருக்கும்.

எமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து எம்மோடு இணைந்திருங்கள். இக்காணொளியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Channel Link: https://www.youtube.com/@ChummaOruTri...

Комментарии

Информация по комментариям в разработке