வெள்ளிக்கிழமை பெறும் செல்வம் அளித்து வாழ்வை வளமாக்கும் முருகன் பாடல்கள் | Murugan Devotional Songs

Описание к видео வெள்ளிக்கிழமை பெறும் செல்வம் அளித்து வாழ்வை வளமாக்கும் முருகன் பாடல்கள் | Murugan Devotional Songs

Watch► வெள்ளிக்கிழமை பெறும் செல்வம் அளித்து வாழ்வை வளமாக்கும் முருகன் பாடல்கள் | Murugan Devotional Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal

Thanks For Watching Our Videos
To Get More Videos-Like-comment & Subscribe

முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.

இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பியாக கருதப்படுகிறார். மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.

தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது.

"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

முருகனின் சில பெயர்களுக்கான காரணங்கள்
• விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
• அக்கினியில் தோன்றியதால் அக்னி புத்திரன்
• கங்கை தன் கரங்களால் முருகனின் தீப்பிழம்பு கருவை ஏந்தியதால் காங்கேயன்.
• சரவண பொய்கையில் மிதந்ததால் சரவணபவன்.
• கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன்.
• அறுவரும் இணைத்து ஒருவராக மாறியதால் கந்தன்
• ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன் / சண்முகன்

முருகன் குறித்த பழமொழிகள்
• வேலை வணங்குவதே வேலை.
• சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
• வயலூர் இருக்க அயலூர் தேவையா?
• காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
• அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
• முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
• சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
• கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
• கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
• பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
• சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
• செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
• திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
• வேலனுக்கு ஆனை சாட்சி.
• வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
• செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
• கந்தன் பாதம் கனவிலும் காக்கும்


விழாக்கள்
கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் இவரது ஜென்ம நட்சத்திர தினமாக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி கந்த சஷ்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் மிக முக்கியமான விழா

கோவில்கள்
முருகன் கோவில்கள், முருக வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் காணப்படுகின்றது. வடபழனி முருகன் கோவில், தேனாம்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில், மயிலை சிங்காரவேலன், பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவில், குமரக்குன்று, கந்தகோட்டம், குன்றத்தூர் என தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோவி்ல்கள் பல அமைந்துள்ளன.

அறுபடை வீடுகள்
• திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
• திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
• பழநி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
• சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
• திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
• பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது. வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம் அனுமனுக்கு அருள்புரிந்தது.

முருகனின் சிலை, மலேசியா
மலேசியா நாட்டில் பத்து குகையில் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் முதலிய திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.

Комментарии

Информация по комментариям в разработке