Bisleri International Creates GUINNESS WORLD RECORD for the Largest Human Recycling Logo in Chennai
சென்னை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பிஸ்லேரி இன்டர்நேஷனல் இணைந்து மிகப்பெரிய மனித மறுசுழற்சி லோகோவிற்கான கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளன!
சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (சிஐடி) மற்றும் பிஸ்லெரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் இணைந்து இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பொறுப்பான கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் நோக்கில், மிகப்பெரிய மனித மறுசுழற்சி லோகோ உருவாக்கும் கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளன. இந்தச் சாதனையில் 5,037-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஒன்றிணைந்தனர். இது, 2019 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று சென்னையில் உள்ள மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிபெட்) நிகழ்த்திய 3,373 பங்கேற்பாளர்களைக் கொண்ட தற்போதைய கின்னஸ் உலக சாதனையை விட மிகப்பெரிய முயற்சியாகும்.
மறுசுழற்சி மற்றும் நிலைத்தன்மை மீதான கூட்டுப் பொறுப்பின் ஒரு சக்திவாய்ந்த காட்சியை சின்னமாக உருவாக்குவதையும், பெரிய அளவிலான பொதுமக்களின் பங்கேற்பின் மூலம் வட்டாரப் பொருளாதார நடைமுறைகளின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டிருந்தது.
சுற்றுச் சூழல் மீது அதீத அக்கறை கொண்ட பிஸ்லெரி இன்டர்நேஷனலின் நிலைத்தன்மை மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான இயக்குநர் திரு. கே. கணேஷ் பேசுகையில், “இந்த கின்னஸ் உலக சாதனை, மாணவர் சமூகத்தின் கூட்டு முயற்சி மற்றும் அர்ப்பணிப்பைப் பறைசாற்றுகிறது. இது, மறுசுழற்சி மற்றும் பொறுப்பான பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த நடத்தை மாற்றங்களைத் தூண்டும் அதே வேளையில், ஒத்துழைப்பு மற்றும் இளைஞர்களின் பங்கேற்பு மூலம் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது.” என்றார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக் குறித்து சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் தலைவர் திரு. பி. ஸ்ரீராம் கூறுகையில், “இது கல்லூரிக்கு மட்டுமல்லாமல், சென்னை நகரத்திற்கே மிகவும் பெருமைக்குரிய தருணம் ஆகும். இந்த முயற்சி, நிலைத்தன்மை, மாணவர் ஈடுபாடு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மீது எங்கள் நிறுவனம் கொண்டுள்ள அக்கறைக்கு ஓர் சான்று. அதே நேரத்தில், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு மாணவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்” என்றார்.
பிஸ்லெரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் பற்றி
50 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், பிஸ்லெரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய உயர்தர குளிர்பான நிறுவனங்களில் ஒன்றாகும். நாட்டின் அதிகம் விற்பனையாகும் பாட்டில் குடிநீரைத் தயாரிக்கும் நிறுவனமாக, பிஸ்லெரி 114 தரப் பரிசோதனைகள் மற்றும் 10-கட்ட சுத்திகரிப்பு செயல்முறையைப் பின்பற்றுகிறது. நுகர்வோருக்கு தூய்மையான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தண்ணீரை வழங்குவது என்ற தனது அடிப்படைக் கொள்கைக்கு அது உண்மையாக இருந்து வருகிறது.
பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனம், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக சந்தைகளில் 128 செயல்பாட்டு ஆலைகள் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் 7,500 விநியோக லாரிகளைக் கொண்ட ஒரு வலுவான விநியோக நெட்வொர்க் உடன் ஒரு வலிமையான இருப்பைக் கொண்டுள்ளது. இது அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான பானங்களை வழங்குகிறது. அது பிஸ்லெரி பாட்டில் குடிநீரில் உள்ள நன்மை, நம்பிக்கை மற்றும் தூய்மைக்கான வாக்குறுதியாக இருந்தாலும் சரி, அல்லது வேதிகா இமயமலை நீரூற்று நீர் மூலம் வழங்கப்படும் தினசரி ஆரோக்கியமாக இருந்தாலும் சரி. இது தவிர, பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனம், பிஸ்லெரி லிமோனாட்டா, பிஸ்லெரி ரெவ், பிஸ்லெரி ஸ்பைசி ஜீரா, பிஸ்லெரி பாப் மற்றும் பிஸ்லெரி சோடா போன்ற பல சுவைகளில் கிடைக்கும் பல்வேறு வகையான கார்பனேற்றப்பட்ட பானங்களுடன் புத்துணர்ச்சியூட்டும் பானங்கள் துறையிலும் கால் பதித்துள்ளது. இந்த பிஸ்லெரி தயாரிப்புகள் Bisleri@Doorstep' என்ற மின்வணிகத் தளத்திலும் கிடைக்கின்றன. இந்த நேரடி நுகர்வோர் தளமானது, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு மிகவும் நம்பகமான பிராண்டின் தயாரிப்புகளை பாதுகாப்பான மற்றும் தடையற்ற விநியோகமாக தங்கள் வீட்டு வாசலிலேயே பெறுவார்கள் என்பதை உறுதி செய்கிறது.
பிஸ்லெரி இன்டர்நேஷனலின் அடிப்படைக் கொள்கைகள், வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும், நிலைத்தன்மையை நிலைநாட்டுவதிலும் அடங்கியுள்ளன. இந்நிறுவனம், மறுசுழற்சி, நீர் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய திட்டங்களின் கீழ் முன்முயற்சிகளைச் செயல்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் 'பிஸ்லெரி கிரீனர் பிராமிஸ்' என்ற திட்டத்துடன் 'நிலைத்தன்மை 2.0'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பிஸ்லெரி இன்டர்நேஷனல், எங்கள் ஊழியர்கள், பிராண்டுகள் மற்றும் சமூகப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, விசிட் :
Информация по комментариям в разработке